“யாரைக்கண்டும் பயமில்லை” -தினகரன்..!

சசிகலா தினகரனுக்கு சொந்தமான 160 இடங்களில் ரெய்ட்…!

விரைவில் அதிமுக தலைமைக் கழகத்திற்கு பூட்டு..!

தேர்வை தள்ளிப்போட 2-ஆம் வகுப்பு குழந்தையை கொலை செய்த சர்வதேச பள்ளி மாணவன்..!

காற்று மாசுபாடு:வாகனங்கள் மோதும் விடியோ..!

சசிகலா மற்றும் தினகரனுக்குச் சொந்தமான உறவினர்கள் நிறுவனங்களின் இல்லங்களில் ரெய்ட் நடந்து வரும் நிலையில், சென்னை பெசன்ட் நகரில் உள்ள தினகரன் தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார்.
“எங்களுக்கு சொந்தமான நிறுவனங்களிலும் உறவினர் வீடுகளிலும் ரெய்டுகள் நடக்கிறது. சின்னம்மா சசிகலா வழிகாட்டுதலில் நாங்கள் நடந்து வரும் நிலையில் அவரை மிரட்டி அடிபணிய வைக்கும் நோக்கோடு இந்த ரெய்ட் நடக்கிறது. படப்பையில் இருக்கும் எங்கள் பண்ணை வீட்டிலோ, அல்லது வேறு ரெய்ட் நடக்கும் இடங்களிலோ ரெய்ட் நடத்துகிறவர்களே சில ஆவணங்களை வைத்து விட்டு என்னை கைது செய்ய திட்டமிடுகிறார்கள் என நான் சந்தேகப்படுகிறேன். ஆனால் எது வந்தாலும் அதை துணிச்சலோடு எதிர்கொள்வோம்.இந்த ரெய்டையோ மிரட்டல்களையோ கண்டு நான் பயப்பட மாட்டேன்.இந்த மிரட்டலை எல்லாம் சின்ன வயதிலேயே பார்த்தவன் நான்.இதை எல்லாம் கண்டு அச்சமோ,பயமோ எனக்கில்லை. ஒரு வேளை 25 வருடம் என்னை உள்ளே தள்ளினாலும் மீண்டும் வந்து இந்த இயக்கத்திற்காகவும், கட்சிக்காகவும் உழைப்பேன். இப்படி ரெய்ட் நடத்தி மிரட்டி பணியவைக்கலாம் என்று மத்திய அரசு நினைத்திருந்தால் அந்த எண்ணத்தை அது மாற்றிக் கொள்ள வேண்டும். எங்களை அழிப்பதால் நீங்கள் வளர்ந்து முடியாது என்பதை சொல்லிக் கொள்கிறேன்.இந்த ரெய்டால் அதிக பட்சம் என்ன செய்து விட முடியும்? தூக்கிலா போட முடியும்.திஹார் சிறை வரை நான் பார்த்து விட்டு வந்து விட்டேன்.அதனால் எனக்கு எந்த பயமோ அச்சமோ இல்லை.அச்சப்படுகிற ஊரில், அச்சப்படுகிற குடும்பத்தில் நாங்கள் பிறக்கவில்லை. எங்களை மிரட்டவும் முடியாது” என்றார் தினகரன்.

டிஜிட்டல்வாசி: இந்த நாள் மற்றுமொரு தரித்திரம்.. ச்சை இது சரித்திரம்!

பணமதிப்பு நீக்கத்தால் பாலியல் தொழில் குறைந்திருக்கிறது…!

மோடி கருணாநிதி சந்திப்பு:ஸ்டாலின் விளக்கம்…!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*