ரெய்டு: ஒரு வாரத்துக்கு முன்னாடியே எதிர்பார்த்தேன், லேட்டா வந்திருக்கீங்களே?

இன்று ஜெயா டிவி அலுவலகத்தில் நடத்தப்படும் ரெய்டு குறித்து, நாலு பேர் நாலு விதமா பேசுறாங்க… நம்ம நெட்டிசன்கள் வித விதமா பேசுறாங்க.. அதப் பார்க்கலாம்

@Boopathy Murugesh
அங்க ஆபிஸ்ல ரெய்டு விட்டு அடிச்சுட்டுருக்கானுங்க.. ஜெயா டிவில ‘தேன் கிண்ணம்’ன்னு MGR பாட்டு போட்டுட்டுருக்காய்ங்க.. அடப்பாவிகளா.

@Karthick Papilio Yehoshuah Muhammed
அதிமுக வின் ஒட்டு மொத்த பினாமி நிறுவனங்களிடம் வருமான வரி சோதனை நடத்த இந்த அரசிற்கு அச்சமுண்டு.
தினகரன் சொத்துக்கள் உடமைகள் மீது கல்லெறியும் அரசு ஓபிஎஸ் சொத்துக்கள் மீது வருமான வரி சோதனை நடத்தை தைரியம் உண்டா??

@Boopathy Murugesh
தீபாமா அடுத்து உங்க வீட்ல தான் மதியம் ரெய்டாம்..
வரட்டும்.. நான் தான் தூங்கிட்டு இருப்பேனே..

@Balaji M S
இஷ்டப்படியெல்லாம் ரெய்டு நடத்த முடியாது!
Malicious Prosecutionல் முறையிடுவோம்!
நஷ்ட ஈடு கேட்போம்
– TTVD வக்கீல்!✓சட்டப்பாயிண்ட்

@Muthu balaji
ரெய்டு என்ற பெயரில் எங்களை பணியவைக்க நாங்கள் ஒன்றும் OPS, EPS போன்ற நயவஞ்சக நரிகூட்டம் கிடையாது, சோதனையை சாதனையாக மாற்றுவோம்

@vinodh ra manikandan
ரெய்டு நடக்கும் ஜெயா டிவி வெளியே காத்திருக்கும் பத்திரிக்கையாளர்களுக்கு காபி,குடிநீர் வழங்க ஏற்பாடு செய்த ஜெயா டிவி CEO ஜெ.விவேக்.

@Subathra Devi Dhanasingh
பணம் வாங்கின சசிகலா குடும்பத்த மட்டும் ரெய்டு பண்ணா பத்தாது. அவங்களுக்கே பணம் கொடுத்த வைகுண்டராஜன் போன்ற காண்ட்ராக்டர்களையும் ரெய்டு பண்ணணும்.

@திலிப் குமார்
மத்திய அரசோட அடுத்த பட்ஜெட்ல இராணுவத்தவிட ஐடி ரெய்டுக்குதான் அதிக நிதி ஒதுக்குவானுங்க போல

@Raisul Islam Sarbudeen
வடநாட்டில் எல்லோரும் உத்தமர்கள் போல, தமிழ்நாட்டுலே மட்டும் எப்போதும் IT ரெய்டு.
எல்லா கறுப்புப்பணமும் தமிழ்நாட்டுல தான் இருக்கு போல, குஜராத், மகராஷ்டிரா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் கறுப்புப் பணமே இல்லையா?

@பாலா அசோக்
ரெய்டு நடக்குது தினகரன் கோபூஜை செய்கிறார்
COOL தினகரன்.

@Ajith Ahamed
#ரெய்டு என்ற பெயரில் #துணை_ராணுவத்தை #தலைமைச்செயலகத்தில் நுழையவிட்ட பின் நான் எந்த ரெய்டையும் மதிப்பதில்லை….
>> #மாநில_உரிமை_அன்றே_நாசமாய்_போனதே
ஒருவாரத்துக்கு முன்னாடியே எதிர்பார்த்தேன், லேட்டா வந்திருக்கீங்களே அதிகாரிகளை கலாய்த்த #TTV
வழக்கம் போல எந்த பதட்டமும் இல்லாம நடக்குற ரெய்டை புன்னகையோட ரசிச்சிட்டு இருப்பார்..
#MrCool_TTV

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*