சசிகலாவை குறிவைத்து ரெய்ட்: ஆகவே… இரட்டை இலை?

ஜி.எஸ்.டி வசனங்கள் இல்லாமல் வெளியான தெலுங்கு மெர்சல்..!

வழக்கறிஞர்கள்:அந்த குரல்கள் இல்லாமல் போவதை கவனிக்கின்றீர்களா?

இரட்டை இலை வழக்கை வாபஸ் பெறக்கோரி தினகரனுக்கு விடப்பட்ட மிரட்டல்?

ஈழத் தமிழர்களுக்கு எதிரான போர் இன்னும் முடியவில்லை – அசோசியேடட் பிரஸ்

#Blackmail politics: ஜெயா டிவியை முடக்க திட்டம்: ரெய்ட் விரிவான பின்னணி..!
சசிகலா மற்றும் தினகரன் உறவினர்கள் ஆதரவாளர்களின் 187 இடங்களில் வருமானவரித்துறையினர் நடத்திய சோதானையில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா உள்ளிட்ட 187 இடங்களில் நடந்த வருமான வரி சோதனையில் 40 இடங்களில் நிறைவு – மற்ற இடங்களில் சோதனை தொடர்கிறது. இந்த சோதனையில் “எனது பண்ணை வீட்டில் ஆவணங்களை வைத்து எடுக்க வாய்ப்பு உள்ளது” என்று தினகரன் கூறிய நிலையில், ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
புதுச்சேரி அருகே தமிழக பகுதியான ஆரோவில் பொம்மையார்பாளையத்தில் அ.தி.மு.க. அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் பண்ணை வீடு உள்ளது. இங்கு மாட்டுப்பண்ணை, விவசாய தோட்டங்கள் ஆகியவை உள்ளன. நவீன வசதிகளுடன் கூடிய பங்களாவும் உள்ளது.இங்கு பதாள அறை இருந்ததாகவும் பாஸ்வேர்ட் போட்டு அந்த அறையை திறந்து ஆவணங்களை எடுத்ததாகவும் செய்திகள் வெளியாகி வருகிறது.
சேகர் ரெட்டி, முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன்ராவ், அமைச்சர் விஜயபாஸ்கர் வீடுகளிலும் ஏராளமான ஆவணங்கள் இருந்ததாகவும், சேகர் ரெட்டி, ராமமோகன்ராவ் வீடுகளிலும் பாதாள அறைகள் இருந்ததாகவும் செய்திகள் முன்னர் வெளியானது. ஆனால் ஒபிஎஸ்-இபிஎஸ் அணிகள் இணைந்ததற்கு பின்னர் இந்த ரெய்டுகள் நின்று விட்ட நிலையில் தினகரனை அச்சுறுத்தி பணிய வைக்க இந்த ரெய்டுகள் நடப்பதாக பரவலாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இரட்டை இலை விசாரணை முடிந்து விட்ட நிலையில் இலையை ஒபிஎஸ்-இபிஎஸ் அணிக்கு வழங்குவதாக முடிவு செய்து விட்டதாக தெரிகிறது. அப்படி இரட்டை இலையை பாஜக அணியான ஒபிஎஸ்- இபிஎஸ் அணி பெற்றுக் கொள்ளும் போது தினகரன் அணி இடைஞ்சல் ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக அவர்களை நெருக்கடிக்கு உள்ளாக்கவே இந்த ரெய்ட். தினகரன் அணியில் உள்ள பெரும்பான்மையாவர்களுக்கு சம்மன் அனுப்பி அடுத்த சில வாரங்களுக்கு அலைய விடுவதன்  மூலம் இரட்டை இலையை பெற்றுக் கொண்ட ஒபிஎஸ்-இபிஎஸ் குழுவை பாதுகாப்பதுதான் திட்டம் என்கிறது டெல்லி வட்டாரம்.

 

முக்கிய செய்திகள்

“யாரைக்கண்டும் பயமில்லை” -தினகரன்..!

சசிகலா தினகரனுக்கு சொந்தமான 160 இடங்களில் ரெய்ட்…!

ரெய்டு: ஒரு வாரத்துக்கு முன்னாடியே எதிர்பார்த்தேன், லேட்டா வந்திருக்கீங்களே?

சசிகலா தினகரனுக்கு சொந்தமான 160 இடங்களில் ரெய்ட்…!

விரைவில் அதிமுக தலைமைக் கழகத்திற்கு பூட்டு..!

தேர்வை தள்ளிப்போட 2-ஆம் வகுப்பு குழந்தையை கொலை செய்த சர்வதேச பள்ளி மாணவன்..!

காற்று மாசுபாடு:வாகனங்கள் மோதும் விடியோ..!

டிஜிட்டல்வாசி: இந்த நாள் மற்றுமொரு தரித்திரம்.. ச்சை இது சரித்திரம்!

பணமதிப்பு நீக்கத்தால் பாலியல் தொழில் குறைந்திருக்கிறது…!

மோடி கருணாநிதி சந்திப்பு:ஸ்டாலின் விளக்கம்…!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*