ரெய்டுக்கு கார் சப்ளை செய்த ரெட்சன் அம்பிகாபதி யார்?

பாஜகவில் சேரும் படி வருமானவரி அதிகாரிகள் மிரட்டினார்கள்:சித்தராமையா பகிரங்க குற்றச்சாட்டு…!

சசிகலாவை குறிவைத்து ரெய்ட்: “ஆகவே இரட்டை இலை…..?

ஜி.எஸ்.டி வசனங்கள் இல்லாமல் வெளியான தெலுங்கு மெர்சல்..!

வழக்கறிஞர்கள்:அந்த குரல்கள் இல்லாமல் போவதை கவனிக்கின்றீர்களா?

சசிகலா மற்றும் தினகரன் குடும்பத்தினரை குறி வைத்து சுமார் 170 இடங்களில் வருமானவரித்துறை நடத்தியுள்ள ரெய்ட் இந்தியா முழுக்க பரபரப்பை உருவாக்கியிருக்கிறது. 1800 அதிகாரிகள் சுமார் 300 கார்களில் சென்னை, பெங்களூரு, தெலங்கனா, கொச்சி என பல இடங்களிலும் புகுந்து புறப்பட்டு ரெய்ட் அடித்துக் கொண்டிருக்க ஒட்டு மொத்தமாக இந்த ரெய்டுக்கு 250 -க்கும் மேற்பட்ட காரை சப்ளை செய்திருக்கிறார் ரெட்சன் அம்பிகாபதி. இப்படி மொத்தமாக குறிப்பிட்ட ஒரு நிறுவனமான ஃபாஸ்ட் டிராக் நிறுவனத்தின் கார் இந்த ரெய்டுக்கு பயன்படுத்தப்பட்டது பற்றி பல செய்திகள் வெளியாகி இருக்கிறது.
யார் இந்த அம்பிகாபதி?


விடியோ கேசட்டுகளையும், அதை பிளே பண்ணி பார்க்கும் டிவிடி டெக்குகளையும் வாடகைக்கு விட்டு தொழில் செய்து வந்த அம்பிகாபதி தன் நிறுவனத்திற்கு வைத்த பெயர்தான் ‘ரெட் சன்’ பரவலாக தொலைக்காட்சி அறிமுகமான பின்னர் அந்த தொழிலை கைவிட்டு விட்டு கேபிள் டிவி தொழிலில் நுழைந்தவரால் பெரிய அளவில் சோபிக்க முடியவில்லை.பின்னர்தான் ஃபாஸ்ட் ட்ராக் நிறுவனத்தை 50 கார்களோடு துவங்கி இன்று ஆயிரக்கணக்கான கார்களோடு முன்னணி கால் டாக்சி நிறுவனமான ஃபாஸ்ட் ட்ராக் நிறுவனத்தின் உரிமையாளராக இருக்கிறார்.

இரட்டை இலை வழக்கை வாபஸ் பெறக்கோரி தினகரனுக்கு விடப்பட்ட மிரட்டல்?

ஈழத் தமிழர்களுக்கு எதிரான போர் இன்னும் முடியவில்லை – அசோசியேடட் பிரஸ்

#Blackmail politics: ஜெயா டிவியை முடக்க திட்டம்: ரெய்ட் விரிவான பின்னணி..!
ஃபாஸ்ட் ட்ராக் இந்தியாவின் முன்னணி கால் டாக்சி நிறுவனமாக வளர்ந்து விட்டாலும் கூட தன் பெயருடன் ரெட்சன் என்ற அடைமொழியையே வைத்துக் கொண்டார். அரசியல் துணை வேண்டும் என்பதால் மதிமுகவில் ஐக்கியமாகி வைகோவுக்கு நெருக்கமான அம்பிகாபதி கடந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
அதன் பின்னர் அதிமுக பிளவு பட்ட போது இனி வைகோவுடன் பயணிப்பதில் பயன் இல்லை என்று முடிவு செய்த அம்பிகாபதி ரூட்டை மாற்றி பன்னீரின் பக்கம் செட்டில் ஆனார். பன்னீர்செல்வம் எங்கு என்றாலும் தன் கார்களை அனுப்புவதும், அவரோடு பயணிப்பதுதான் அம்பிகாபதியின் வேலை. சமீபத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களுக்காக பன்னீர்செல்வம் போடி சென்ற போது அவரோடு கூட இருந்து அனைத்தையும் கவனித்துக் கொண்டார் ரெட்சன் அம்பிகாபதி. இப்போது நடந்திருக்கும் ரெய்டில் பன்னீர்செல்வத்தின் செல்வாக்கில்தான் அம்பிகாபதியின் ஃபாஸ்ட் ட்ராக் கார்கள் பயன்படுத்தப்பட்டதாக அதிமுக குற்றம் சுமத்துகிறது.


srini weds mahi என்று ஸ்டிக்கர் ஒட்டி கார்களை ரெடி பண்ணி அனுப்பியிருக்கிறார் ரெட்சன் அம்பிகாபதி. இதற்கான ஆலோசனை கடந்த பல நாட்களாக ரெயின் ட்ரீ ஹோட்டலில் நடந்ததாக அதிமுகவின் தினகரன் அணியினர் குற்றம் சுமத்தியிருக்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

“யாரைக்கண்டும் பயமில்லை” -தினகரன்..!

சசிகலா தினகரனுக்கு சொந்தமான 160 இடங்களில் ரெய்ட்…!

ரெய்டு: ஒரு வாரத்துக்கு முன்னாடியே எதிர்பார்த்தேன், லேட்டா வந்திருக்கீங்களே?

சசிகலா தினகரனுக்கு சொந்தமான 160 இடங்களில் ரெய்ட்…!

விரைவில் அதிமுக தலைமைக் கழகத்திற்கு பூட்டு..!

தேர்வை தள்ளிப்போட 2-ஆம் வகுப்பு குழந்தையை கொலை செய்த சர்வதேச பள்ளி மாணவன்..!

காற்று மாசுபாடு:வாகனங்கள் மோதும் விடியோ..!

டிஜிட்டல்வாசி: இந்த நாள் மற்றுமொரு தரித்திரம்.. ச்சை இது சரித்திரம்!

பணமதிப்பு நீக்கத்தால் பாலியல் தொழில் குறைந்திருக்கிறது…!

மோடி கருணாநிதி சந்திப்பு:ஸ்டாலின் விளக்கம்…!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*