வழக்கறிஞர்கள்:அந்த குரல்கள் இல்லாமல் போவதை கவனிக்கின்றீர்களா?

டி.அருள் எழிலன்

நம் கண்ணெதிரில் ஒரு வர்க்கம் மெல்ல அழிந்து வருகிறது. மிக முக்கியமாக சமூக தளத்தில் நிலவும் அமைதி நிலையும் அது பற்றி பேசா நிலையுமாக அந்த வர்க்கம் அழித்தொழிக்கப்படுகிறது.
இந்திய பார்கவுன்சில் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத 1,025 வக்கீல்கள் தொழில் செய்ய தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுக்க பணி செய்து கொண்டிருக்கும் வழக்கறிஞர்களின் பள்ளிச் சான்றிதழை பரிசீலிக்கவும் நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார்.
வழக்கறிஞர்கள் எனும் வர்க்கம்..!


சத்தமில்லாமல் ஒரு வர்க்கம் ஒழித்துக் கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. அவர்கள் வழக்கறிஞர்கள் என்று சொல்வதை விட நம் புரிதலுக்காக வேறு சில விஷயங்களைச் சுட்டிக்காட்டலாம். இட ஒதுக்கீடு, ஈழப்போர், அனைத்துசாதியினரும் அர்ச்சகர், காவிரி நதி நீர் உரிமை என அத்தனை கோரிக்கைகளுக்கும் முதன் முதலாக தெருவுக்கு வந்து போராடுவது அவர்கள்தான். இறுதியாக வழக்கறிஞர் சமூகம் நடத்திய போராட்டம் ஈழப் போராட்டம்தான். அதன் பின்னர் பெரிதாக வழக்கறிஞர்கள் வீதிக்கு வந்து போராடுவதில்லை ஏன் தெரியுமா?
ஈழப்போராட்டத்தின் போது களத்திற்கு வந்த அவர்கள் மீது அப்போதைய திமுக அரசு போலீசை ஏவி மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது. அன்று துவங்கி இன்று வரை அவர்கள் மீது அவர்களின் வாழ்வுரிமை மீது ஒரு போர் நடத்தப்படுகிறது. வழக்கறிஞர் தொழிலை நம்பி வாழ்க்கையை நடத்திய பல்லாயிரம் தமிழக இளைஞர்களின் வாழ்வாதாரம் மீது ஒரு யுத்தம் திணிக்கப்பட்டிருக்கிறது. தங்களின் சொந்த வாழ்வு மீது திணிக்கப்பட்ட யுத்தத்தால் வீதிக்கு வந்து பொது பிரச்சனைகளுக்காக போராட தயங்குகிறார்கள். அல்லது, தங்களின் சொந்த வாழ்க்கை பிரச்சனைகளுக்கு உள்ளாகி இருக்கும் நிலையில், பொதுப்பிரச்சனைகளுக்காக அவர்கள் வீதிக்கு வர முடியாத நிலை உள்ளது.
தமிழகத்தில் ஈழப் போராட்டத்தின் பின்னர் மிக எழுச்சியாக போராட்டங்கள் நடைபெறாமல் போனதற்கும் போராட்டங்கள் பரவலாகாமல் குறிப்பிட்ட எல்லைக்குள் சுருங்கிப் போனதற்கும் வழக்கறிஞர்கள் எந்த போராட்டங்களிலும் பொதுவாக (விதிவிலக்காக சில நடந்திருக்கலாம்) பங்குபெறாமல் போனதும் ஒரு காரணம்.
பழிவாங்கப்படுகிறார்கள்!

இரட்டை இலை வழக்கை வாபஸ் பெறக்கோரி தினகரனுக்கு விடப்பட்ட மிரட்டல்?

ஈழத் தமிழர்களுக்கு எதிரான போர் இன்னும் முடியவில்லை – அசோசியேடட் பிரஸ்

#Blackmail politics: ஜெயா டிவியை முடக்க திட்டம்: ரெய்ட் விரிவான பின்னணி..!
வழக்கறிஞர்கள் எனும் வர்க்கம் சமூகத்தின் எல்லா பிரிவுகளையும் போல ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டது. செல்வச்செழிப்புள்ள குடும்ப பின்னணியில் இருந்து வழக்கறிஞர்களாக உருவாகி வந்தவர்களும் உண்டு. இப்படி வசதியான குடும்பங்களில் இருந்து வரும் அனைவருமே கெட்டவர்களோ போர்க்குணம் இல்லாதவர்கள் என்றோ சொல்லி விட முடியாது. அது போல ஏழ்மையான குடும்பச் சூழல்களில் இருந்து அன்றாடல் நடக்கும் கல்லூரிகளுக்குச் சென்று பி.எல். படித்து வராமல் திறந்த நிலை பல்கலைக்கழகங்களில் பி.எல். படித்து வருகிறவர்களும் உண்டு. உணர்வு ரீதியான அரசியல் உணர்வும், சமூகப் பொறுப்புணர்வும் இப்படி ஏழைகளாக இருந்து வருகிறவர்களிடம் இருக்கும். ஒரு குற்றவாளிக்காக அல்லது குற்றவாளி என சந்தேகிக்கப்படும் நபருக்காக வழக்கறிஞர்கள் ஆஜராகும் போது இயல்பாகவே காவல்துறைக்கும் வழக்கறிஞர்களுகும் இடையில் ஒரு மோதல் நீதித்துறைக்குள் இருந்து கொண்டே இருக்கும். இது காவல்துறை என்னும் பிரிவினருக்கும், வழக்கறிஞர்களும் எனும் பிரிவினருக்கும் இடையில் இருக்கும் இயற்கை முரண்பாடு இருக்கும். அந்த முரண்பாட்டை ஊதிவிட்டு நடத்தப்பட்ட நரவேட்டைதான் 2009 -ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட தாக்குதல். ஆனால் அதன் பின்னர் படிப்படியாக வழக்கறிஞர்கள் எனும் பிரிவினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அவர்கள் நிலைகுலைந்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.


இந்திய நீதித்துறை பெருமளவு மாற்றம் பெற்று வருகிறது. உச்சநீதிமன்றம் துவங்கி கீழ் நீதிமன்றங்கள் வரை அரசின் கொள்கை முடிவுகளுக்கு ஏற்ப நீதித்துறை தன்னை பண்புமாற்றம் செய்து கொண்டிருகும் நிலையில், 2011-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா உயர்நீதிமன்றத்தை பாதுகாக்கும் பொறுப்பை மத்திய தொழில் பாதுகாப்பு படையிடம் ஒப்படைத்தார்.வழக்கறிஞர்கள் மீது நடத்தப்பட்ட முதல் பகிரங்க தாக்குதல் அதுதான். அதன் பின்னர் 2016-ல் வழக்கறிஞர்கள் போராட்டங்களில் ஈடுபடக்கூடாது, என்பது உள்ளிட்ட பல சட்டத்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டது அதற்கு எதிராக போராடிய 126 வழக்கறிஞர்களை பார் கவுன்சில் தடை செய்தது. எழுச்சியோடு துவங்கி அதிர்ச்சியோடு முடிந்த அந்த போராட்டம் பார்கவுன்சிலையும், சில நீதிபதிகளையும் உற்சாகத்திலாழ்த்தியது.
பின்னர் 2017-ஆம் ஆண்டு கட்டாய ஹெல்மெட், தமிழை வழக்காடு மொழி,பெண் வழக்கறிஞர்கள் மீதான விடியோ சோதனை, போன்ற கோரிக்கைகளுக்காக போராடிய 25 வழக்கறிஞர்களை இந்திய பார் கவுன்சில் நீக்கியது. சன்னமான குரலில் வழக்கறிஞர்களால் புலம்புக் கொள்ள முடிந்ததே தவிற அவர்களால் இந்த பார்கவுன்சிலுக்கு எதிராக எதுவும் பேச முடியவில்லை.
இப்போதோ, திறந்த நிலை பல்கலைக்கழகங்களில் சட்டக்கல்வியை முடித்தவர்கள் இனி வழக்கறிஞர்கள் தொழில் செய்ய முடியாது என்று தமிழ்நாடு பார் கவுன்சில் அறிவித்திருக்கிறது. வழக்கறிஞராக பதிவு செய்த ஒருவர் அகில இந்தி பார் கவுன்சில் நடத்தும் தகுதி தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பது 2010-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட விதி. அந்த தேர்வில் வெற்றி பெறாத 1,025 வக்கீல்கள் தொழில் செய்ய தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் இப்போது தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இன்னொரு பக்கம் நீதிபதி கிருபாகரன் வழக்கறிஞர் தொழிலில் நிலவும் கட்டப்பஞ்சாயத்தை காரணம் காட்டி வழக்கறிஞர்களின் மாண்பையும், நீதித்துறையின் புனிதத்தையும் காக்க வழக்கறிஞர்களின் பள்ளிச் சான்றிதழை பரிசோதிக்க உத்தரவிட்டுள்ளார்.
அனைவரும் மருத்துவராகி விடுவதா எல்லோரும் மருத்துவர் ஆகி விட்டதால்தான் மருத்துவத்துறையில் தவறுகள் நடக்கிறது என்று ‘நீட்’ எனும் அநீதியான தேர்வு முறையை கொண்டு வந்து ஒட்டு மொத்தமாக கிராமப்புற, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி கற்கும் உரிமையை மறுத்தார்களோ அது போன்ற நடைமுறை வழக்கறிஞர் தொழிலிலும் கொண்டு வரப்படுகிறதோ என்ற அச்சமும் அதிருப்தியும் வழக்கறிஞர்களிடையே நிலவுகிறது.
வழக்கறிஞர்கள் தொழிலில் கட்டப்பஞ்சாயத்து நிலவுவதை மறுக்க முடியாது. நீதித்துறையில் நிலவும் கட்டப்பஞ்சாயத்தை ஒழிக்க சட்டத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்தினாலே போதும். கட்டப்பஞ்சாயத்தை ஒழிக்க வழக்கறிஞர்களையே ஒழித்துக் கட்டுவது தீர்வல்ல..1
இன்று வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பார் கவுன்சில் தலைவர்களையும் உறுப்பினர்களையும் வாக்களித்து தெரிவு செய்ததே இந்த வழக்கறிஞர்கள்தான். சுமார் 53 ஆயிரம் வழக்கறிஞர்கள் வாக்களிக்க சட்டமன்ற தேர்தலுக்கு இணையான அத்தனை லோலாய்களும் இந்த தேர்தலிலும் நடக்கும். அப்படி நடக்கும் தேர்தலின் மூலம் தெரிவு செய்யப்படுகிறவர்கள்தான் பார் கவுன்சில் தலைவர்களாக வருகிறார்கள்.
இன்று வாக்களித்தவர்கள் மீதே நடவடிக்கை பாய்கிறது என்பதுதான் தமிழக வழக்கறிஞர்கள் மத்தியில் இருக்கும் வேதனை.

வழக்கறிஞர்களை தண்டிக்கும் அதிகாரத்தை நீதிபதிகளிடம் வழங்கும் சட்டத்தை கொண்டு வந்தார் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கவுல். அதன் மூலம் ஆயிரக்கணக்கானோர் தண்டிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் தொழிலை விட்டே துரத்தப்பட்டுள்ளார்கள். நாம் இதுவரை சந்தித்த சமூக பிரச்சனைகளில் முதல் குரலாக வெடித்த அவர்களின் குரல் சன்னமாக ஒடுங்கி சத்தமில்லாமல் மறைந்து வருவதன் பின்னணியில் இருக்கும் ஒடுக்குமுறை வரலாறு இதுதான். இதை நாம் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம். அந்த குரல்கள் இல்லாமல் போவதும் அதன் எதிர்வினைகளையும் தமிழகம் சந்திக்கும் பிரச்சனைகளில் நீங்கள் உணரவில்லையா?

 

டி. அருள் எழிலன்
டி. அருள் எழிலன்

கட்டுரையாளர் குறிப்பு:- (T. Arul Ezhilan) தமிழக ஊடகவியலாளர். சதத் ஹசன் மண்டோவின் கதையை தழுவி இவர் இயக்கிய ‘ராஜாங்கத்தின் முடிவு’ ( https://www.youtube.com/watch?v=Qatt3shRl8E) குறும்படமும், தமிழகத்தில் வாழும் ஈழ அகதிகளின் வாழ்வைத் தழுவி இவர் எடுத்த கள்ளத்தோணியும் KALLATHON-யும் ( https://www.youtube.com/watch?v=iF9Qjts4G-k&t=292s) பேசப்பட்டும், கண்டுகொள்ளாமல் விடப்பட்டதாகவும் உள்ளது.

 

#Tamilnadubarcouncil #tamiladvacates

முக்கிய செய்திகள்

“யாரைக்கண்டும் பயமில்லை” -தினகரன்..!

சசிகலா தினகரனுக்கு சொந்தமான 160 இடங்களில் ரெய்ட்…!

ரெய்டு: ஒரு வாரத்துக்கு முன்னாடியே எதிர்பார்த்தேன், லேட்டா வந்திருக்கீங்களே?

சசிகலா தினகரனுக்கு சொந்தமான 160 இடங்களில் ரெய்ட்…!

விரைவில் அதிமுக தலைமைக் கழகத்திற்கு பூட்டு..!

தேர்வை தள்ளிப்போட 2-ஆம் வகுப்பு குழந்தையை கொலை செய்த சர்வதேச பள்ளி மாணவன்..!

காற்று மாசுபாடு:வாகனங்கள் மோதும் விடியோ..!

டிஜிட்டல்வாசி: இந்த நாள் மற்றுமொரு தரித்திரம்.. ச்சை இது சரித்திரம்!

பணமதிப்பு நீக்கத்தால் பாலியல் தொழில் குறைந்திருக்கிறது…!

மோடி கருணாநிதி சந்திப்பு:ஸ்டாலின் விளக்கம்…!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*