பாளையங்கோட்டை சிறையில் முகிலன் காலவரையற்ற உண்ணாவிரதம்..!

சைவர்களுக்கே கோல்ட் மெடல் :பல்கலைக்கழகம் அறிவிப்பு..!

ரெய்டுக்கு கார் சப்ளை செய்த ரெட்சன் அம்பிகாபதி யார்?

பாஜகவில் சேரும் படி வருமானவரி அதிகாரிகள் மிரட்டினார்கள்:சித்தராமையா பகிரங்க குற்றச்சாட்டு…!

அணு உலை எதிர்ப்பு, மீத்தேன், ஹைட்ரோ கார்பன், ஆற்று மணல், கனிம மணல் கொள்ளை உள்ளிட்ட பல் வேறு சமூக பிரச்சனைகளுக்கு எதிராக போராடி வரும் முகிலன் அவர்களை கைது செய்த நெல்லை போலீசார் அவரை பாளையங்கோட்டை சிறையில் அடைத்துள்ளனர். சிறையில் இருக்கும் அவர் நேற்றிலிருந்து காலவரையற்ற உண்ணாவிரதத்தை துவங்கியுள்ளார்.

அவர் முன் வைக்கும் கோரிக்கைகள் இவை:-

1. கூடங்குளம் அணு உலையை எதிர்த்து போராடிய சுமார் 1 லட்சம் பேர் மீது 132 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. அவற்றை ரத்து செய்ய வேண்டும்.

2. தாமிரபரணியிலிருந்து நீர் எடுத்து நெல்லையில் தயாரிக்கப்படும் கோக், பெப்சி குளிர்பான ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும்.

3. மணல் எடுப்பதற்கு 10 ஆண்டு காலம் தடை விதித்திருந்த கொங்கராயன்குறிச்சி(திருவைகுண்டம்) பகுதியில், தனியாருக்கு மணல் அள்ளும் உரிமையை கொடுப்பதற்கு தமிழக அரசு தயாராக இருப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்.

4. வழக்கறிஞர் செம்மணியை தாக்கிய போலிசார் மற்றும் உயர் அதிகாரிகளை வேலை நீக்கம் செய்ய வேண்டும்.

5. ISRO இருக்கும் மகேந்திரகிரி மலையில் விரிசல் விழுந்ததை செய்தியாக்கிய தினகரன் செய்தியாளர் அந்தோணி ஜெகன், புதிய தலைமுறை செய்தியாளர் ரஜி கிருஷ்ணா மற்றும் நாகராஜன் மீது போடப்பட்ட பொய் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்.

6. பேராசிரியர் ஜெயராமன் மீது போடப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும்.

7. கார்ட்டூனிஸ்ட் பாலா வீட்டிற்குள் புகுந்து அவரை கைது செய்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும்.

8. தமிழக மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்க ஹைட்ரோகார்பன் எதிர்ப்பு, கெயில் திட்ட எதிர்ப்பு, காவேரி ஆறு பாதுகாப்பு,நிலத்தடி நீர் பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

9. நெல்லை மாவட்டம் உடன்குடி, சாத்தான்குளம் போன்ற பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு நிலத்தேர்வு ஆய்வினை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதனை உடனடியாக நிறுத்த வேண்டும்.

இந்த 9 கோரிக்கைகளை முன்னிறுத்தி பாளையங்கோட்டை சிறையிலுள்ள காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் தோழர் முகிலன் அவர்கள் இன்று முதல் காலவரையரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கியுள்ளார். இதற்கு அனைத்து ஜனநாயக சக்திகளும், கட்சிகளும், அமைப்புகளும் ஆதரவு தர வேண்டும்.

சசிகலாவை குறிவைத்து ரெய்ட்: “ஆகவே இரட்டை இலை…..?

ஜி.எஸ்.டி வசனங்கள் இல்லாமல் வெளியான தெலுங்கு மெர்சல்..!

வழக்கறிஞர்கள்:அந்த குரல்கள் இல்லாமல் போவதை கவனிக்கின்றீர்களா?

இரட்டை இலை வழக்கை வாபஸ் பெறக்கோரி தினகரனுக்கு விடப்பட்ட மிரட்டல்?

ஈழத் தமிழர்களுக்கு எதிரான போர் இன்னும் முடியவில்லை – அசோசியேடட் பிரஸ்

#Blackmail politics: ஜெயா டிவியை முடக்க திட்டம்: ரெய்ட் விரிவான பின்னணி..!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*