3 நாட்களாக தேடியும் விடியோ சிக்கவில்லை..!

Sasikala Natarajan, left standing, a close friend of India's Tamil Nadu state former Chief Minister Jayaram Jayalalithaa, wipes her tears next to Jayalalithaa's body wrapped in the national flag and kept for public viewing outside an auditorium in Chennai, India, Tuesday, Dec. 6, 2016. Jayalalithaa, the hugely popular south Indian actress who later turned to politics and became the highest elected official in the state of Tamil Nadu, died Monday. She was 68. (AP Photo/Aijaz Rahi)

#Demonetisation:பாஜகாவை கலாய்க்கும் சிம்புவின் பாடல்..!

சைவர்களுக்கே கோல்ட் மெடல் :பல்கலைக்கழகம் அறிவிப்பு..!

‘அறம்’ விமர்சனம்: ஒரு அடிமைக்கு இன்னொரு அடிமை எப்படி சேவை செய்ய முடியும்
சசிகலா மற்றும் தினகரன் தொடர்புடையவர்களின் நிறுவனங்கள், உறவினர்கள், என இந்தியா முழுக்க 187 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் நடத்தும் சோதனை இன்னும் முழுமையாக முடிவடையவில்லை.
இந்த வருமான வரித்துறை ரெய்டுக்கு பின்னால் பல நோக்கங்கள் இருந்தாலும் மிக முக்கியமான நோக்கம் அப்பல்லோவில் பதிவு செய்யப்பட்ட ஜெயலலிதா சிகிச்சை விடியோ. ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னால் நிச்சயம் தனக்கு சங்கடங்கள் வரும் என்பதை அறிந்த சசிகலா விடியோ காட்சிகள் அனைத்தின் காப்பியையும் பெற்று வைத்துக் கொண்டார். அந்த விடியோவுக்கும் இன்று அதிமுக அமைச்சர்கள் பேசுவதற்கும் பாராதூர்மான வித்தியாசங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. ஜெயலலிதாவை கவர்னர் சந்திக்கவில்லை. பன்னீர்செல்வத்தை அமைச்சரவையை வழி நடத்தவோ, தனக்குப் பின்னால் பன்னீர்தான் முதல்வர் என்றோ எந்த விதமான ஒப்புதலையும் ஜெயலலிதா வழங்காத நிலையில், சிகிச்சையில் இருந்த அவரை சிலர் சந்தித்து உட்பட பல காட்சிகள் அந்த விடியோக்களில் உள்ளது. இந்நிலையில் தான் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகச்சாமி விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது. ஆனால் யாருடைய உத்தரவோ என்ன மர்மமோ அவர் விசாரணையை துவங்கவில்லை. விசாரணையை துவங்குவதற்காக க்ரீன் சிக்னல் உரியவர்களிடம் இருந்து இன்னும் கிடைக்கவில்லையாம். இதே சூழலில்தான் சசிகலா, தினகரன் குழுவினரை குறிவைத்து ரெய்ட் நடத்தப்பட்டது. இந்த ரெய்டில் தினகரன் அணியினர் குறி வைக்கப்பட்டாலும்,சசிகலாவின் உறவினர்கள் வீடுகளில் வேறு சில பொருட்களையும் தேடியிருக்கிறார்கள். முக்கியமாக டாக்டர் சிவக்குமாரை குறி வைத்துதான் இந்த ரெய்ட் நடத்தப்பட்டது.திருச்சி ராஜா காலனி, 3வது குறுக்குத் தெருவில் வசிக்கும், டாக்டர் சிவக்குமார் வீட்டிற்கு வருமான வரித்துறையினர் சோதனையிட சென்றனர். ஆனால் டாக்டர் சிவகுமார் சென்னையில் இருந்ததால் வீடு பூட்டியிருந்தது. வீட்டை உடைக்க சிலர் முயல அதற்கு எதிர்ப்பு வந்தால் கைவிட்டனர்.பின்னர் சாவி கிடைத்ததும் அக்குவேறு ஆணி வேறாக வீட்டை சல்லடை போட்டு எதையோ தேடினார்கள். அது போல புதுச்சேரி பண்ணை வீடு, படப்பை மிடாஸ் ஆலை, விவேக் உள்ளிட்டவர்களின் வீடுகளிலும் அதிகாரிகள் தீவிரமாக தேடியது வேறு விஷயங்களை என்கிறார்கள். இந்நிலையில்தான், டி.டி.வி தினகரன் திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் பேசும் போது:-
“ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது சசிகலாவால் எடுக்கப்பட்ட வீடியோ விசாரணை ஆணையத்தில் அளிக்கப்படும். வீடியோவை வெளியிடக்கூடாது என அதிகாரிகளிடம் கோரிக்கையும் வைப்போம், என்றவர் 3 மணி நேரத்தில் முடிய வேண்டிய சோதனையை 3 நாட்களாக தொடர்கிறார்கள்.வருமான வரி சோதனையில் ஆவணங்கள் எதுவும் கைப்பற்றவில்லை; எங்களிடம் பாதாள அறை எதுவும் இல்லை” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

ரெய்டுக்கு கார் சப்ளை செய்த ரெட்சன் அம்பிகாபதி யார்?

பாஜகவில் சேரும் படி வருமானவரி அதிகாரிகள் மிரட்டினார்கள்:சித்தராமையா பகிரங்க குற்றச்சாட்டு…!

சசிகலாவை குறிவைத்து ரெய்ட்: “ஆகவே இரட்டை இலை…..?

ஜி.எஸ்.டி வசனங்கள் இல்லாமல் வெளியான தெலுங்கு மெர்சல்..!

இரட்டை இலை வழக்கை வாபஸ் பெறக்கோரி தினகரனுக்கு விடப்பட்ட மிரட்டல்?

ஈழத் தமிழர்களுக்கு எதிரான போர் இன்னும் முடியவில்லை – அசோசியேடட் பிரஸ்

#Blackmail politics: ஜெயா டிவியை முடக்க திட்டம்: ரெய்ட் விரிவான பின்னணி..!

வழக்கறிஞர்கள்:அந்த குரல்கள் இல்லாமல் போவதை கவனிக்கின்றீர்களா?

நீதிபதி பற்றி அப்படி என்னதான் பேசினார் பத்திரிகையாளர் அகத்தியலிங்கம்…!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*