ம.பி இடைத்தேர்தல்:பாஜகவை வீழ்த்தி காங் வெற்றி..!

3 நாட்களாக தேடியும் விடியோ சிக்கவில்லை..!

#Demonetisation:பாஜகாவை கலாய்க்கும் சிம்புவின் பாடல்..!

சைவர்களுக்கே கோல்ட் மெடல் :பல்கலைக்கழகம் அறிவிப்பு..!

‘அறம்’ விமர்சனம்: ஒரு அடிமைக்கு இன்னொரு அடிமை எப்படி சேவை செய்ய முடியும்

அடுக்கடுக்காக வெற்றிகளை குவித்து வந்த பாஜகவுக்கு சில மாநிலங்களில் காங்கிரஸ் அடுத்தடுத்து வெற்றி பெறுவது அதிர்ச்சியை உருவாக்கி உள்ளது.
பாஜக ஆளும் மாநிலமான மத்திய பிரதேசத்தின் சித்ரகூட் சட்டப்பேரவை தொகுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏவாக இருந்தவர் பிரேம்சிங். இவர் மறைவையடுத்து இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. மத்திய பிரதேசத்தில் பாஜகவின் ஆட்சியை எடை போடும் தேர்தலாக இது கணிக்கப்பட்ட நிலையில், பாஜக வெற்றி பெறும் என்றே சில ஊடகங்களும் பாஜக தலைவர்களும் கூறி வந்தனர். இந்த தொகுதிக்கு
நவம்பர் 9-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. காங்கிரஸ் தரப்பில் நிலான்ஷு சதுர்வேதி மற்றும் பா.ஜ.க. சார்பில் சங்கர்லால் திரிபாதி உள்ளிட்ட 12 கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஆனாலும் காங்கிரஸ், பா.ஜ.க. இடையே தான் போட்டி பலமாக காணப்பட்டது.
இந்நிலையில் இன்று வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில்,காங்கிரஸ் வேட்பாளர் சதுர்வேதி பா.ஜ.க. வேட்பாளர் திரிவேதியை விட முன்னிலை வகித்து வந்தார். இறுதியில் பா.ஜ.க. வேட்பாளரை விட 14,100 வாக்குகள் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் சதுர்வேதி வெற்றி பெற்றுள்ளார். இந்த தேர்தல் முடிவு பற்றி சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் வெளியிட்டுள்ள கருத்தில் :-
“, மத்திய பிரதேசம் மாநிலம் இடைத்தேர்தலில் பா.ஜ.க. தோல்வி அடைந்துள்ளது. பா.ஜ.க.வினர் மேல் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அவநம்பிக்கை மற்றும் கோபத்தையே இந்த தோல்வி காட்டுகிறது. ஜி.எஸ்.டி மற்றும் பண மதிப்பிழப்பின் உண்மை நிலையை மக்கள் உணர்ந்துள்ளனர். குஜராத் தேர்தலிலும் இந்த தோல்வி எதிரொலிக்கும் என கூறியுள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*