விவேக் கைது? சசி குடும்பத்தினரை சிறையிலடைக்க ஒபிஎஸ் -இபிஎஸ் திட்டம்…!

பழனிசாமியை டம்மியாக்கி விட்டு ஆளுநரை வைத்து ஆட்சி செய்யும் பாஜக..!

விடுதலையாவாரா பேரறிவாளன்?

‘தி வயர்’ மீது வழக்கு அமித்ஷா மகன் கோர்ட்டுக்கே வரவில்லை..!

இரட்டை இலை தீர்ப்பு:தினகரன் அணியை முடக்க திட்டம்..!

15 மணி நேரம் வரை இயங்கும் கன்னியாகுமரி பள்ளிகள்…!

“நீட் பயிற்சியால் பயனில்லை:தேவை நிரந்தர விலக்கு” – டாக்டர் ராமதாஸ்..!இந்திய வரலாறு இதுவரை இப்படி ஒரு வருமானவரி ரெய்டை கண்டதில்லை. இந்தியாவிலேயே மிகப்பெரிய கோடீஸ்வரர்களாக சசிகலா குடும்பத்தை சித்தரிப்பன் மூலம் அவர்களை அதிமுகவில் இருந்து ஒழித்துக்கட்டி விட்டு அதிமுகவை சேதாரமில்லாமல் எடுத்துக் கொள்ள நினைக்கும் சில சக்திகள் ஒபிஎஸ்-இபிஎஸை பயன்படுத்தி இந்த ரெய்டை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
நினைத்தது போல ஊடகங்களின் ஆதரவோடு ரெய்டை நடத்தினாலும், மக்களிடமும் அரசியல் தலைவர்களிடமும் வருமானவரித்துறையின் இந்த ரெய்ட் பலத்த சந்தேகங்களை உருவாக்கி உள்ளது. இந்த ரெய்ட் 187 இடங்களில் 1800 அதிகாரிகளின் உதவியோடு நடத்தப்பட்டதாக கூறப்பட்டாலும் உண்மை வேறாக இருக்கிறது. சுமார் 50 இடங்களில் நடந்த சோதனையின் பிரதான டார்கெட் இருவர்தான். ஒன்று டாக்டர் சிவக்குமார், இன்னொருவர் விவேக் ஜெயராமன்.
தினகரனை விட இன்றைய தேதியில் விவேக் ஜெயராமனையே இவர்கள் அதிகமும் டார்கெட் செய்கிறார்கள்.காரணம் தினகரன் அரசியல் ரீதியாக செயல்பட்டாலும்,விவேக்தான் ஜெயா டிவி நிர்வாகம் உள்ளிட்ட பல முக்கிய வேலைகளை செய்து வருகிறார். சசிகலா நடராஜனின் சவாலான ஆபரேஷனை வெற்றிகரமாக நடத்தி முடித்ததும் விவேக்தான். இதை கவனித்த தமிழக அமைச்சர்கள் தினகரனைப் போல ஆபத்தான சக்தியாக அடையளம் காட்டியது விவேக்கை. எனவே தினகரனை முடக்குவதற்கு முன்னால் விவேக்கை முடக்கி விட நினைக்கிறார்கள். அநேகமாக இன்று நள்ளிரவோ நாளையோ விவேக் கைது செய்யப்படலாம். அதன் பின்னர் டாக்டர் சிவக்குமாரும் கைது செய்யப்படுவார். இவர்கள் பணிந்தால் இத்தோடு விடுவார்கள் பணியா விட்டால் சிறை, வழக்கு, வாய்தா என்று அலைய விடுவதுதான் திட்டமே. விவேக் ஜெயலலிதா கண் முன்னேபோயஸ் இல்லத்தில் வளர்ந்தவர்.

 

அவருடைய சொத்துக்களும் சரி சசிகலா குடும்பத்தின் சொத்துக்களும் சரி அனைத்துமே ஜெயலலிதாவின் உதவியோடு வாங்கப்பட்டவை. ஆனால் ஒட்டு மொத்தமாக இந்த ரெய்டில் ஜெயலிதாவை நீக்கம் செய்து விட்டு சசிகலா குடும்பத்தை குற்றவாளியாக நிறுத்த வேண்டிய நெருக்கடி ஒபிஎஸ்-இபிஎஸுக்கு எழுந்திருக்கிறது. அதை தங்களுக்கு பின்னால் இருக்கும் அதிகார பீடங்களின் உதவியோடு செய்கிறார்கள். ஆட்சி செய்ய தகுதி அற்ற இந்த மைனாரிட்டு அரசு வழக்குகள் தாமதிப்பதல் ஜீவித்திருக்கிறது. இந்த ஒபிஎஸ்-இபிஎஸ் அரசின் ஆயுள் முடிவதற்குள் சசிகலா தினகரன் குடும்பத்தை ஒழித்து விட்டு கட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்ற திட்டம் வேகம் பெற்றிருக்கிறது. அடுத்த சில நாட்களுக்குள் மேலும் பல அதிரடிகள் தமிழக அரசியலில் காத்திருக்கிறது.

ம.பி இடைத்தேர்தல்:பாஜகவை வீழ்த்தி காங் வெற்றி..!

3 நாட்களாக தேடியும் விடியோ சிக்கவில்லை..!

#Demonetisation:பாஜகாவை கலாய்க்கும் சிம்புவின் பாடல்..!

சைவர்களுக்கே கோல்ட் மெடல் :பல்கலைக்கழகம் அறிவிப்பு..!

‘அறம்’ விமர்சனம்: ஒரு அடிமைக்கு இன்னொரு அடிமை எப்படி சேவை செய்ய முடியும்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*