15 மணி நேரம் வரை இயங்கும் கன்னியாகுமரி பள்ளிகள்…!

ம.பி இடைத்தேர்தல்:பாஜகவை வீழ்த்தி காங் வெற்றி..!

3 நாட்களாக தேடியும் விடியோ சிக்கவில்லை..!

#Demonetisation:பாஜகாவை கலாய்க்கும் சிம்புவின் பாடல்..!

சைவர்களுக்கே கோல்ட் மெடல் :பல்கலைக்கழகம் அறிவிப்பு..!

‘அறம்’ விமர்சனம்: ஒரு அடிமைக்கு இன்னொரு அடிமை எப்படி சேவை செய்ய முடியும்

தெலங்கானா மாநிலத்தில் ஒரு தனியார் பள்ளியில் மாலை 6-30 வரை வகுப்புகள் நடைபெறுவதற்கு எதிராக போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், இந்தியாவிலேயே 15 மணி நேரம் வரை வகுப்புகளை நடத்தும் அதிகமான தனியார் பள்ளிகள் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் செய்திகள் வெளியாகி இருக்கிறது.
தமிழகத்தில் நாமக்கல் மாவட்டத்தில்தான் அதிகமாக பிராய்லர் பள்ளிகள் உள்ளது என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த செய்தி. ஆனால் அந்த பிராய்லர் பள்ளிகளை எல்லாம் தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு குமரி மாவட்டத்தில் உள்ள சில பள்ளிகள் மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்துகின்றன.
காலை 5-30 மணிக்கு பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் இரவு 8 மணியிலிருந்து 8-30 மணிவரை வகுப்புகளில் இருக்கும் கொடூரமான கல்விமுறை கன்னியாகுமரி மாவட்டத்தில் நிலவுகிறது.கல்வியில் சிறந்த குமரி மாவட்டத்தில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் முதல் மதிப்பெண் பெற்றே தீர வேண்டும் என்பதில் வெறியர்களாக இருப்பார்கள். இந்த மதிப்பெண் வெறி குழந்தைகளின் உடல் நலம் பற்றியோ, பெற்றோருடன் குழந்தைகள் செலவிட வேண்டிய நேரம் பற்றி எந்த அக்கறையுமே இல்லாமல் அழித்து விடுகிறது. ஒரு குழந்தை வளர்ந்து உருவாகும் விதத்தை சமூக மயமாதல் என்பார்கள். அதில் பள்ளிக்கூடத்திற்கு ஒரு பங்கும், குடும்பம் அல்லது பெற்றோருக்கு கணிசமான பங்கும் உண்டு. ஆனால் குமரி பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு படிப்பு, மதிப்பெண் இந்த இரண்டையும் தவிற வேறு எந்த தொடர்புகளும் இருக்காது. அந்த அளவு இங்குள்ள பள்ளிக்கூடங்கள் வதைகூடங்கள் போல இயங்குகின்றன. அதிகாலை பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் இரவு 9 மணி அல்லது 10 மணிக்குத்தான் வீடு திரும்புகிறார்கள்.
மறு நாள் அதிகாலை மீண்டும் ஓடுகிறார்கள். இதனால் கடுமையான தலைவலி உள்ளிட்ட பல் வேறு பிரச்சனைகளால் அவதிப்படுகின்றனர். மிகப்பெரிய மன அழுத்தங்களுக்கு உள்ளாகும் பெரும்பான்மை மாணவர்களால் இப்படி கால நேரம் இல்லாமல் படித்தும் பெரிய அளவு மதிப்பெண்ணும் பெற முடியவில்லை என்பதை இந்த பள்ளி நிர்வாகங்கள் உணரவில்லை.
பள்ளி வகுப்பு போக நீட் கோச்சிங்கையும் சேர்த்து ஒரு லட்சம் வரை கட்டணம் வசூலிக்கும் இப்பள்ளிகள். கல்விதுறையை ஏமாற்றி பெற்றோர்களுக்கு மதிப்பெண் என்ற போலியான போதையை ஊட்டி மாணவர்களின் வாழ்க்கையையே சீரழிக்கிறார்கள்.
இப்போது குமரி மாவட்டத்தில் இருக்கும் சில தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் நிலை மிக மோசமாக உள்ளது. கல்விதுறை இது பற்றி நேர்மையான விசாரணையை நடத்தினால் அதிர்ச்சிகரமான பல உண்மைகள் வெளிவரும். ஆனால் இந்த பள்ளிகள் இப்படி வகுப்புகளை நடத்துவதால் மாணவர்களுக்கு கேடுதானே ஒழிய அதனால் எந்த நன்மையும் விளையவில்லை. மாணவர்கள் சோர்வடைந்து மன உளைச்சலுக்கு உள்ளாகி தேர்வையும் சரியாக எழுதாமல், போதை பொருட்களுக்கும் அடிமையாகும் கொடுமை நடக்கிறது. இதை கல்வித்துறை கண்டு கொள்ளவில்லை. பெற்றோர்களுக்கும் அக்கறையில்லை.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*