‘தி வயர்’ மீது வழக்கு அமித்ஷா மகன் கோர்ட்டுக்கே வரவில்லை..!

சசிகலா வளர்த்து விட்ட பாம்புகள் இன்று…!

விவேக் கைது? சசி குடும்பத்தினரை சிறையில் தள்ள ஒபிஎஸ் -இபிஎஸ் திட்டம்…!

இரட்டை இலை தீர்ப்பு:தினகரன் அணியை முடக்க திட்டம்..!
இந்தியாவின் முக்கியமான ஊடகவியலாளரான சித்தார்த் வரதராஜனை ஆசிரியராகக் கொண்டு இயங்கி வரும் இணைய ஊடகமான ‘தி வயர்’ அமித்ஷா மகன் ஜெய்ஷாவின் நிறுவன வர்த்தகம் திடீரென பல மடங்கு உயர்ந்தது தொடர்பாக ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டது தி வயர் இணைய தளம்.
இது நாடு முழுக்க சர்ச்சையை உருவாக்கிய நிலையில்,தி வயர் இணையதளம் மீது அக்டோபபர் 9ம் தேதி அகமதாபாத் மெட்ரோபாலிட்டன் கோர்ட்டில் ஜெய்ஷா அவதூறு வழக்கு தொடர்ந்தார்.


இந்த அவதூறு வழக்கில் நேற்று விசாரணைக்கு வந்த போது ஜெய்ஷா கோர்ட்டுக்கு வருவதை தவிர்த்துவிட்டார். புகார்தாரர் ஏன் கோர்ட்டுக்கு வரவில்லை என நீதிபதி கேள்வி எழுப்பியபோது, சமூக நிகழ்ச்சிகளில் அவர் பிஸியாக இருப்பதால் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க ஜெய்ஷா தரப்பு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார். ஆனால், ஜெய்ஷா எந்த ஊடகம் மீது வழக்கு தொடர்ந்திருந்தாரோ அந்த குழுவினர் நீதிமன்றத்துக்கு எதிரே கெத்தாக நின்றிருந்தனர்.
இது தொடர்பாக, ’திவயர்’ இணையத்தின் ஆசிரியர் சித்தார்த் வரதராஜன் வெளியிட்ட டுவிட்டில்:-
“ தி வயர் குழு அகமதாபாத் நீதிமன்றத்துக்கு வெளியில் நிற்கிறது. ஆனால் பொய் வழக்கில் ஆஜராஜ சமூக வேலைகளை காரணம் காட்டி ஜெய்ஷா வரவில்லை.புகார் தாரர் பயந்து போய் முகம் காட்டாததையும், ‘குற்றவாளிகள்’ மகிழ்ச்சியாக சிரிப்பதையும் முதல் முறையாக பார்க்கிறேன்” என படத்தையும் வெளியிட்டுள்ளார். இந்த வழக்கு டிசம்பர் 16ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இரட்டை இலை தீர்ப்பு:தினகரன் அணியை முடக்க திட்டம்..!

15 மணி நேரம் வரை இயங்கும் கன்னியாகுமரி பள்ளிகள்…!

“நீட் பயிற்சியால் பயனில்லை:தேவை நிரந்தர விலக்கு” – டாக்டர் ராமதாஸ்..!

ம.பி இடைத்தேர்தல்:பாஜகவை வீழ்த்தி காங் வெற்றி..!

3 நாட்களாக தேடியும் விடியோ சிக்கவில்லை..!

#Demonetisation:பாஜகாவை கலாய்க்கும் சிம்புவின் பாடல்..!

சைவர்களுக்கே கோல்ட் மெடல் :பல்கலைக்கழகம் அறிவிப்பு..!

‘அறம்’ விமர்சனம்: ஒரு அடிமைக்கு இன்னொரு அடிமை எப்படி சேவை செய்ய முடியும்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*