பழனிசாமியை டம்மியாக்கி விட்டு ஆளுநரை வைத்து ஆட்சி செய்யும் பாஜக..!

விடுதலையாவாரா பேரறிவாளன்?

‘தி வயர்’ மீது வழக்கு அமித்ஷா மகன் கோர்ட்டுக்கே வரவில்லை..!

சசிகலா வளர்த்து விட்ட பாம்புகள் இன்று…!

விவேக் கைது? சசி குடும்பத்தினரை சிறையில் தள்ள ஒபிஎஸ் -இபிஎஸ் திட்டம்…!

இரட்டை இலை தீர்ப்பு:தினகரன் அணியை முடக்க திட்டம்..!
இந்தியாவில் உள்ள 15 மாநிலங்கள் வரை தனியாகவும், கூட்டணி சேர்ந்தும் ஆட்சி செய்து வருகிறது பாஜக. ஆட்சியை கைப்பற்ற முடியாத மாநிலங்களில் கவர்னரை வைத்து நேரடியாக ஆட்சி செய்து வருகிறது. அதுவும் பாஜக பிரதமராக மோடி பதவியேற்ற பின்னர் நியமிக்கப்பட்ட கவர்னர்கள் எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் உள்ள முதல்வர்களை டம்மியாக்கி விட்டு தாங்களே அதிகாரிகளை வைத்து நேரடியாக ஆட்சி செய்யும் நிலை எழுந்திருக்கிறது.
அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சி செய்யும் டெல்லியிலும், காங்கிரஸ் முதல்வராக புதுச்சேரியை ஆளும் நாராயண்சாமிக்கும் பாஜக கவர்னரை வைத்து குடைச்சல் கொடுத்து வந்த நிலையில், மைனாரிட்டி அரசாக காலம் தள்ளிக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசின் பலவீனமான நிலையை படுத்தும் தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோகித் நேரடியாக ஆட்சி நிர்வாகத்தில் தலையிட்டு வருகிறார்.
கவர்னர் மத்திய அரசின் பிரதிநிதியாக மாநிலங்களில் இருந்த போதும், இதுவரை அவர்கள் மாநில நிர்வாகத்தில் பெரிதாக தலையிட்டதில்லை அதுவும் மாநில சுயாட்சி பற்றிய விழிப்புணர்வு பேசும் தமிழகத்தில் கவர்னர் டம்மிகளாகவே இருந்து வந்தனர்.இந்நிலையில், இன்று கோவைக்குச் சென்ற தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வளர்ச்சிப்பணிகள் குறித்து அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார். ஆனால் இந்த ஆலோசனையை ஊடகங்கள் தீடீரென ஆலோசனை நடத்தியதாக கூறுகின்றன. இல்லை இந்த ஆலோசனை ஏற்கனவே திட்டமிடப்பட்டதுதான். மாவட்ட ஆட்சியர், வருவாய்துறை அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகளுடன் அவர் இந்த ஆலோசனையில் ஈடுபட்டார்.
ஆனால் இந்த ஆலோசனைக்கு கோவை இராமகிருட்டினன் தலைமையிலான தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆளுநர் தன் அதிகார வரம்பை மீறுவதாக கூறி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதே பாணியை மேற்குவங்கம், பஞ்சாப், கேரளம் போன்ற எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இதே போல கவர்னரை வைத்து நிர்வாகத்தை நடத்த நடந்த முயற்சிகள், அல்லது மாநில அரசு நிர்வாகத்தில் குறுக்கீடு செய்யும் முயற்சிகளை அந்தந்த மாநில முதல்வர்கள் முறியடித்தார்கள்.
இம்மாதிரி ஆளுநர்களை வைத்து மாநில நிர்வாகங்களை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதில் உள்ள ஆபத்து என்ன என்றால்? கவர்னர் என்படுபது நியமன பதவி, கிட்டத்தட்ட அதிகாரி போன்றவர் அவர். ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசியல் தலைவர்கள் என்போர் மக்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள். பதில் சொல்லா விட்டால் நேரடியாக மக்களால் தண்டிக்கப்படுவார்கள் என்பதால் மக்களைப் பற்றிய அச்சம் அரசியல் தலைவர்களுக்கு எப்போதுமே இருக்கும். ஆனால் மக்களை நேரடியாக சந்திக்காத இந்த அதிகாரிகள் மக்களுக்கு எதிரான திட்டங்களை நிறைவேற்றி விட்டு இந்த மாநிலத்தை விட்டு போய் விடுவார்கள். ஆனால் அரசியல் தலைவர்கள் அப்படி போக முடியாது. ஆனால் முதுகெலும்பில்லாத பலவீனமான மைனாரிட்டி அரசு என்பதால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசை டம்மியாக்கி விட்டு ஆளுநர் அதிகாரத்தை கைப்பற்றுகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

இரட்டை இலை தீர்ப்பு:தினகரன் அணியை முடக்க திட்டம்..!

15 மணி நேரம் வரை இயங்கும் கன்னியாகுமரி பள்ளிகள்…!

“நீட் பயிற்சியால் பயனில்லை:தேவை நிரந்தர விலக்கு” – டாக்டர் ராமதாஸ்..!

ம.பி இடைத்தேர்தல்:பாஜகவை வீழ்த்தி காங் வெற்றி..!

3 நாட்களாக தேடியும் விடியோ சிக்கவில்லை..!

#Demonetisation:பாஜகாவை கலாய்க்கும் சிம்புவின் பாடல்..!

சைவர்களுக்கே கோல்ட் மெடல் :பல்கலைக்கழகம் அறிவிப்பு..!

‘அறம்’ விமர்சனம்: ஒரு அடிமைக்கு இன்னொரு அடிமை எப்படி சேவை செய்ய முடியும்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*