கவர்னர் க்ளீனிங் வேலை பார்க்க குப்பை கொட்டும் தமிழக அமைச்சர்கள்?

டிஜிட்டல்வாசி: நாச்சியார்- வேணும்னா அந்த ஒரே ஒரு டயலாக்கை வை…!

ஏழைகளுக்கு அபராதம் போட்டு வதைக்கும் ஆட்சியர்கள்..!

கார்டூனிஸ்ட் பாலா மீதான வழக்கை விசாரிக்க தடை விதித்தது நீதிமன்றம்..!

நளினியை விடுதலை செய்ய முடியாது: சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு…!

ஆளுநர் ஆய்வு :அன்வர்ராஜா எம்பி எதிர்ப்பு..!

ஆளுநருக்கு கருப்புக் கொடி காட்டுவோம் :பெ.மணியரசன் அறிவிப்பு..!

தமிழகத்தில் ஆள்வது அதிமுகவாக இருந்தாலும் அது பெயரளவுக்கு பொம்மை ஆட்சியாகவே உள்ளது. உண்மையில் இந்த பொம்மை ஆட்சியாளர்களை வைத்து பாஜகதான் தமிழகத்தை ஆட்சி செய்து கொண்டிருப்பதை சூழல்கள் உணர்த்துகின்றன.
ஜெயலலிதா சிகிச்சையில் சுயநினைவின்றி இருந்த போதே பாஜக பன்னீர்செல்வத்தை வைத்து தன் ஆட்சியை துவங்கி விட்டது. அடுத்தடுத்து ஜெயலலிதா எதிர்த்த திட்டங்களை அடுத்தடுத்து அரங்கேற்றிய பன்னீர்செல்வம் பாஜகவுக்கான ஆட்சியை நடத்தினார். அதனுடைய உச்சக்கட்ட வெளிப்படுதான் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிந்தைய போலீஸ் நரவேட்டை. சசிகலாவால் அவர் பதவி பறிக்கப்பட்டு எடப்பாடி பழனிசாமி முதல்வரான பின்னர் ரெய்ட் உள்ளிட்ட பல விதமான மிரட்டல்களுக்கு அஞ்சி அவரும் பாஜகவுக்கான ஆட்சியையே முன்னெடுக்கிறார்.
தமிழக அரசு பச்சையில் இருந்து காவிக்கு மாறியதுதான் அதன் அடையாள அறிகுறி. பாஜக நேரடியாக செல்வாக்கில்லாத மாநிலமான தமிழகத்தில் இப்படி ஒரு அடிமை ஆட்சி புறச்சூழல்களால் அமையும் என்பதை அவர்கள் நினைக்கவே இல்லை. அதனால்தான் மைனார்ட்டி அரசை பாதுகாப்பதில் அதிமுகவினரை விட அதிக அக்கறை காட்டுகிறது பாஜக. முன்னாள் கவர்னர் வித்யாசகர் ராவ் மைனாரிட்டி அரசை பாதுகாப்பதற்கான சூழலை உருவாக்கி வைத்து விட்டுச் சென்ற எஞ்சியிருக்கும் நான்கு ஆண்டுகளில் இந்த அதிகாரமற்ற பொம்மை ஆட்சியாளர்களை வைத்து தமிழகத்தில் பாஜகவை வலுவாக காலூன்ற வைப்பதற்காகத்தான்.
அப்படி ஒரு சூழலை உருவாக்கி வைத்து விட்டுச் சென்ற பின்னர்தான். பன்வாரிலால் புரோகித் தமிழக ஆளுநாராக வந்தார். அவர் தமிழ் கற்றுக் கொள்கிறார் என்ற செய்தி வெளியான போதே அரசு நிர்வாகத்தில் தலையிட போகிறார் என்ற செய்திகள் வெளியானது. கோவை, திருப்பூரில் அரசு நிர்வாகத்தில் அவர் தலையிட்டது தமிழக அரசுக்கு முன்பே தெரியும். ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் திராணியோ தெம்போ இந்த மைனாரிட்டி அரசுக்கு இல்லை. அவர்களால் செய்ய முடிந்ததெல்லாம் தூய்மை இந்தியா திட்டத்தின் படி கவர்னர் சுத்தமான இடத்தில் குப்பை அள்ளிய போது அள்ளிச் சேர்க்க சில குப்பைகளை கொண்டு வந்து கொட்டியதுதான் தமிழக அரசின் சாதனை.

பழனிசாமியை டம்மியாக்கி விட்டு ஆளுநரை வைத்து ஆட்சி செய்யும் பாஜக..!

அமைச்சர் வேலுமணியை சேர்த்துக் கொண்ட கவர்னர்..

கோவையில் ஆளுநர் விளக்கம்..!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*