இந்துத்துவர்கள் ஏன் எதிர்க்கிறார்கள் ‘பத்மாவதி’ படத்தை?

எங்கள் மீதான வருமானவரித்துறை சோதனை தோல்வியில் முடிந்தது-திவாகரன்..

டிஜிட்டல்வாசி: நாச்சியார்- வேணும்னா அந்த ஒரே ஒரு டயலாக்கை வை…!
கவர்னர் க்ளீனிங் வேலை பார்க்க குப்பை கொட்டும் தமிழக அமைச்சர்கள்?

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோனே நடிப்பில் உருவாகி உள்ள ‘பத்மாவதி’ படத்திற்கு ராஜ்புத் சாதிவெறியர்களும், இந்துத்துவ சக்திகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். இந்த எதிர்ப்பு வலுவாக விரிவடைந்து வரும் நிலையில், தீபிகா படுகோனே தலைக்கு 5 கோடி ரூபாய் விலை நிர்ணயம் செய்திருக்கும் இந்துத்துவ அமைப்பொன்று அவரை நாட்டை விட்டு வெளியேறி விடுமாறு எச்சரித்துள்ளது. இந்துத்துவ சக்திகள் எதிர்க்கும் அளவுக்கு அப்படி என்னதான் உள்ளது பத்மாவதி படத்தில்..

இந்தியாவின் சித்தோர்கோர் இராஜ்ஜியத்தின் ராணியாக திகழ்ந்த பத்மாவதி (அ) பத்மினி, சிங்கால் என்ற இடத்தில் வாழ்ந்த கந்தர்வேசன் என்ற அரசனின் மகள் ஆவார். பேரழிகியான பத்மாவதி, மன்னர் ராவல் ரத்தன்சென்னுக்கு மணம் முடிக்கப்பட்டார். வட இந்தியாவில் முகமதியப் பேரரசு உருவாகி வந்த காலம் அது, முகமதியர்களின் படை பலம் அசாத்தியமானதாக இருந்தது. அப்போது பத்மாவதியின் அழகைப் பற்றி கேள்விப்பட்ட சுல்தான் அலாவுதீன் கில்ஜி அவளை தன் அந்தப்புரத்துக்கு அனுப்புமாறு கடிதம் அனுப்பினான். இதனால் சித்தூர் மன்னனுக்கும் அலாவுதீனுக்கும் இடையே போர் துவங்கியது. அலாவுதீனின் மாபெரும் படையை எதிர்க்க முடியாத ராஜபுத்திரர்கள் தோல்வியைத் தழுவினர். ஆனாலும் அலாவுதீன் ஆசை நிறைவேறவில்லை, கணவனை இழந்த ராணி பத்மாவதி தீக்குளித்து தன்னை மாய்த்துக் கொண்டார். சித்தோர்கோர் ராஜ்ஜியத்தை மட்டுமே அலாவுதீனால் கைப்பற்ற முடிந்தது.

இந்த கதையின் க்ளைமாக்ஸ் காட்சி தான் ‘பத்மாவதி’ படத்துக்கு பெரும் பிரச்சனையாக இருக்கிறது. இந்த படத்தில் பத்மாவதி, அலாவுதீன் கில்ஜி மீது காதல் வயப்படுவது போல காட்சிகள் வைக்கப்பட்டுள்ளது, இது ராஜபுத்திரர்கள் வரலாற்றை தவறாக சித்தரிக்கும் படம் என ராஜ்புத் கர்னி சேனா அமைப்பினர் களத்தில் இறங்கினர். அன்று துவங்கியது ‘பத்மாவதி’ படத்தின் பிரச்சனை, அதன்பிறகு தொடர்ந்து பிரச்சனைகளை சந்தித்து வருகிறது இந்தத் திரைப்படம்.

ஜெய்கார்ஹ் கோட்டையில் படப்பிடிப்பு நடக்கும் சமயம் பார்த்து ராஜ்புத் கர்னி சேனா அமைப்பினர் உள்ளே புகுந்து தாக்குதல் நடத்தினர். திரைப்படத்துக்கு தேவையான சில உபகரணங்களை தீயிட்டுக் கொளுத்தியதோடு இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியையும் தாக்கினார்கள். இது பாலிவுட் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, இயக்குனருக்கு ஆதரவாக திரையுலக பிரபலங்கள் பலரும் குரல் கொடுத்தனர்.

இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இருந்து பத்மாவதி – அலாவுதீன் இடையே காதல் காட்சிகள் ஏதும் இல்லை என ஸ்ரீ ராஜ்புத் சபைக்கு உறுதியளிக்கப்பட்டது.  ஆனால் இதன் டிரெய்லர் வெளியான போது மீண்டும் ராஜபுத்திரர்களிடம் எதிர்ப்பு நிலவியது. ராஜ்புத் அமைப்பின் தலைவர்கள் படத்தில் ஏதும் பிரச்சனை இல்லை என கூறும்வரை, படம் வெளியாவதற்கு தடை விதிக்கப்படும் என தகவல் மற்றும் தொலைதொடர்புத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி அறிவித்தார்.

”என் மகனை மத்திய அரசு விடுதலை செய்ய வேண்டும்” -அற்புதம்மாள் கோரிக்கை…!

உத்தர் பாரதிய மொர்ஜா (பாஜக) கட்சியின் பொதுச் செயலாளர் அர்ஜுன் குப்தா, “இந்தப் படத்தை ராஜபுத்திரர்கள் மட்டுமல்லாது தேசமே எதிர்க்கிறது. நமது வரலாற்றை தவறாக சித்தரிக்கும் படம் இது, இப்படிப்பட்ட படத்தை எடுத்த சஞ்சய் லீலா பன்சாலியை கடுமையாக தண்டிக்க வேண்டும். அப்போதுதான் இனி யாரும் இதுபோன்ற படத்தை எடுக்க துனியமாட்டார்கள்” என தெரிவித்தார். ஆனால் தணிக்கைக் குழு அதிகாரி பிரசூன் ஜோசி, பன்சாலிக்கு ஆதரவாக அர்ஜுன் குப்தாவுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த திரைப்படம் வரலாற்றை தவறாக சித்தரிக்கவில்லை என்ற கருத்தையும் முன்வைத்தார். அதேபோல் சல்மான் கான், கரன் ஜோஹர், ஜவத் அக்தர் என திரைத்துறை சார்ந்த பலரும் இதற்கு ஆதரவு அளித்துள்ளனர்.

இந்தப் படத்தை வெளியிட விடாமல் தடுப்பதையே நோக்கமாக வைத்து செயல்படுகிறது ராஜ்புத் அமைப்பு. இதன் கதாநாயகனாக சாகித் கபூர், “ படத்தை முதலில் திரையிட விடுங்கள், நீங்கள் கூறுவது போன்ற காட்சிகள் இருந்தால் புறக்கணியுங்கள். படம் வெளியாவதற்கு முன்பே அதை தடுக்க முயற்சி செய்ய வேண்டாம்” என தெரிவித்துள்ளார். சமீபத்தில் ‘பத்மாவதி’ படத்துக்கு தடை விதிக்க கோரியிருந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து, படத்துக்கு சான்றிதழ் வழங்கும் முன் தணிக்கை குழு முறையாக ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. எல்லாம் சரியாக அமைந்தால், வருகிற டிசம்பர்-1 ஆம் தேதி ‘பத்மாவதி’ திரைக்கு வருவது உறுதி.

ஆளுநர் ஆய்வு :அன்வர்ராஜா எம்பி எதிர்ப்பு..!

ஆளுநருக்கு கருப்புக் கொடி காட்டுவோம் :பெ.மணியரசன் அறிவிப்பு..!

பழனிசாமியை டம்மியாக்கி விட்டு ஆளுநரை வைத்து ஆட்சி செய்யும் பாஜக..!

அமைச்சர் வேலுமணியை சேர்த்துக் கொண்ட கவர்னர்..

கோவையில் ஆளுநர் விளக்கம்..!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*