தூங்கிய வழக்கு எழுந்து நடராஜனை சிறைக்கு அனுப்பியது எப்படி?

பரோல் கொடுத்தால் தப்பிவிடுவார் நளினி :தமிழக அரசு…!
அயலக கார் ஒன்றை இறக்குமதி செய்ததில் வரி ஏய்ப்பு செய்ததாக கூறி எழும்பூர் பொருளாதார சிறப்பு நீதியமன்றம் வழங்கிய இரண்டு ஆண்டு சிறை தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்ததால் நடராஜனும் கைது செய்யப்பட்டு சிறை செல்லும் சூழல் எழுந்திருக்கிறது.
ஏற்கனவே சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா நான்கு ஆண்டுகள் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அஹ்ரஹாரா சிறையில் உள்ள நிலையில், நடராஜனும் சிறை செல்ல இருப்பதால் அவரது குடும்பமே அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறது.
சசிகலா, இளவரசி,பாஸ்கரன் என பலரும் சிறையில் இருக்கும் நிலையில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சசிகலாவின் அக்கா மகள் சீதளாதேவி மற்றும் அவரது கணவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நேற்று உயர்நீதிமன்றம் உறுதி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் இன்று நடராஜனும் இரண்டு வருட தண்டனை பெற்று சிறைக்குச் செல்கிறார். இதே போல டி.டி.வி தினகரன் மீதும் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் மொத்த குடும்பமும் சிறை செல்லும் சூழல் ஏற்பட்டிருப்பதால் சசிகலா குடும்பத்தினர் அச்சம் அடைந்துள்ளனர்.
நடராஜன் மீதான வழக்கு என்ன?
ஜெயலலிதா அணி என்றும் ஜானகி அணி என்றும் பிளவு பட்ட அதிமுகவை ஒன்றிணைத்த ஜெயலலிதா ராஜீவ்காந்தி மரணத்தையொட்டி 1991 -ல் முதல்வராக ஆட்சிக்கு வந்தார்.அப்போதைய ஆட்சியில் செல்வாக்கோடு இருந்த சசிகலாவின் கணவர் நடராஜன் 1994-ஆம் ஆண்டு செப்டம்பர் 6-ஆம் தேதி லண்டனில் இருந்து லெக்ஸஸ் கார் ஒன்றை இறக்குமதி செய்தார். தனது தமிழரசி பப்ளிகேஷன்ஸ் நிறுவனம் சார்பில் இறக்குமதி செய்த இந்த காரை பழைய கார் என்று ஆவணங்கள் தயாரித்து வாங்கியதாக வருமான வரித்துறை குற்றம் சுமத்தியது.இது தொடர்பாக நடராஜன், பாஸ்கரன்,பாலகிருஷ்ணன், யோகேஷ் பாலகிருஷ்ணன், சென்னை அபிராமபுரம் இந்தியன் வங்கி முன்னாள் கிளை மேலாளர் சுஜாரிதாஆகியோர் மீது சி.பி.ஐ வழக்கு பதிந்து விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுள் பாலகிருஷ்ணன் தலைமறைவாகி விட்ட நிலையில் மீதியுள்ள நால்வருக்கும் தலா 2 வருடம் கடுங்காவல் தண்டனையையை (07/26/2010) அன்று எழும்பூர் பொருளாதார சிறப்பு நீதிமன்றம் தண்டனை வழங்கியது.
அப்போது தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் இந்த தண்டனையை ஏக காலத்தில் (இரண்டு ஆண்டுகள்) அனுபவிக்க வேண்டும். தண்டனை பெற்ற 4 பேரில் நடராஜன், பாஸ்கரன், சுஜாரிதா சுந்தர்ராஜன் ஆகியோர் தலா ரூ. 20 ஆயிரமும், யோகேஷ் ரூ. 40 ஆயிரமும் அபராதம் செலுத்த வேண்டும். இதைக் கட்டத் தவறினால் நடராஜன் உள்ளிட்ட 3 பேர் மேலும் மூன்று மாதமும் யோகேஷ் பாலகிருஷ்ணன் மேலும் 6 மாதமும் கூடுதல் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார். அதே நேரத்தில் இந்த வழக்கில் அவர்கள் மேல்முறையீடு செய்ய வசதியாக தண்டனையை நிறுத்தி வைத்தார் நீதிபதி.
இந்த தீப்பைத் தொடர்ந்து தண்டனைக்குள்ளான நால்வரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இம்மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நால்வரின் தண்டனையையும் நிறுத்தி வைத்தது. ஆனால் ஜாமீனை சி.பி.ஐ நீதிமன்றத்தில் ஆஜராகி பெறுமாறு அறிவுறுத்த சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜரான் நால்வரும் அப்போது ஜாமீன் பெற்றனர்.

இந்துத்துவர்கள் ஏன் எதிர்க்கிறார்கள் ‘பத்மாவதி’ படத்தை?

எங்கள் மீதான வருமானவரித்துறை சோதனை தோல்வியில் முடிந்தது-திவாகரன்..

இந்த தீர்ப்பு, அதையொட்டி ஜாமீன் கிடைத்த பின்னர் 2010 – அக்டோபர் 1-ஆம் தேதியும் அதன்பிறகு 3 மாதத்துக்கு ஒருமுறையும் கோர்ட்டில் ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் ஜாமீன் கிடைத்த பின்னர் இந்த வழக்கு அப்படியே அமைதியாகி விட்டது. பின்னர் 2012 –ஆம் ஆண்டு பாஸ்கரன், நடராஜன் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்குமாறு பொருளாதார குற்றப் பிரிவு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் இருந்து அவர்களை விடுவிக்க மறுத்த பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றம் வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுக்கப்படும் என்றனர். ஆனாலும் அந்த விசாரணையும், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவும் தூங்கிக் கொண்டிருந்தது. தீடிரென இப்போது அந்த மனு வேகம் பெற்று நடாரஜன் உட்பட நால்வர் தண்டனைக்குள்ளாகி இருக்கிறார்கள்.
சிறுநீரகம், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட நடராஜன் சில வாரங்களுக்கு முன்னர்தான் மருத்துவமனையில் இருந்து வெளியில் வந்தார். ஓய்வும் சிகிச்சையும் தொடரும் நிலையில், இன்று தீர்ப்பு வெளியாகி அவரை சிறைக்கு அனுப்பியிருக்கிறது.

டிஜிட்டல்வாசி: நாச்சியார்- வேணும்னா அந்த ஒரே ஒரு டயலாக்கை வை…!
கவர்னர் க்ளீனிங் வேலை பார்க்க குப்பை கொட்டும் தமிழக அமைச்சர்கள்?

ஆளுநர் ஆய்வு :அன்வர்ராஜா எம்பி எதிர்ப்பு..!

ஆளுநருக்கு கருப்புக் கொடி காட்டுவோம் :பெ.மணியரசன் அறிவிப்பு..!

பழனிசாமியை டம்மியாக்கி விட்டு ஆளுநரை வைத்து ஆட்சி செய்யும் பாஜக..!

அமைச்சர் வேலுமணியை சேர்த்துக் கொண்ட கவர்னர்..

கோவையில் ஆளுநர் விளக்கம்..!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*