பரோல் கொடுத்தால் தப்பிவிடுவார் நளினி :தமிழக அரசு…!

இந்துத்துவர்கள் ஏன் எதிர்க்கிறார்கள் ‘பத்மாவதி’ படத்தை?

எங்கள் மீதான வருமானவரித்துறை சோதனை தோல்வியில் முடிந்தது-திவாகரன்..

டிஜிட்டல்வாசி: நாச்சியார்- வேணும்னா அந்த ஒரே ஒரு டயலாக்கை வை…!
கவர்னர் க்ளீனிங் வேலை பார்க்க குப்பை கொட்டும் தமிழக அமைச்சர்கள்?
நளினிக்கு பரோல் கொடுத்தால் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிவிடுவார்.அதனால் அவருக்கு பரோல் வழங்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது தமிழக அரசு.
தன் மகளுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் பரோல் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில்:-
“ என் மகள் ஹரித்ரா சிறையில் பிறந்து 2 வயது வரை என்னுடன் சிறையில் இருந்தாள். அதன் பின்னர் தன் பாட்டியுடன் லண்டனில் வசித்து வருகிறார்.இப்போது அவருக்கு நான் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க 6 மாதம் தன்னை பரோலில் விடுவிக்க வேண்டும்” என்று கோரியிருந்தார்.இது தொடர்பாக தமிழக முதல்வருக்கு இரு முறை மனு அனுப்பியும் எந்த பதிலும் இல்லை.எனவே தனக்கு பரோல் வழங்கும் படி சிறைத்துறைக்கு உத்தரவிட வேண்டும்” எனக் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தார். அந்த மனுமீது பதிலளித்த தமிழக உள்துறை துணைச் செயலாளர் டேனியல் தன் பதில் மனுவில்:-
“தன் மகள் லண்டனில் வசிப்பதாக நளினி கூறுகிறார். ஆனால் அதற்கு ஆதாரமான விசா உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை.நளினிக்கு நன்னடத்தை அதிகாரி சான்று வழங்கவில்லை.மேலும், நளினிக்கு பரோல் வழங்கினால் அவர் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்து விடுவார் என்ற அச்சம் தமிழக அரசுக்கு உள்ளது. எனவே, அவருக்கு பரோல் வழங்க முடியாது. பரோல் கேட்கும் அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்றும் அந்த பதில் மனுவில் கூறப்பட்டு உள்ளது.”இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.

ஆளுநர் ஆய்வு :அன்வர்ராஜா எம்பி எதிர்ப்பு..!

ஆளுநருக்கு கருப்புக் கொடி காட்டுவோம் :பெ.மணியரசன் அறிவிப்பு..!

பழனிசாமியை டம்மியாக்கி விட்டு ஆளுநரை வைத்து ஆட்சி செய்யும் பாஜக..!

அமைச்சர் வேலுமணியை சேர்த்துக் கொண்ட கவர்னர்..

கோவையில் ஆளுநர் விளக்கம்..!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*