‘அழகி’ பட்டங்களும் கார்ப்பரேட் போதையும்: -ஆர்த்தி..!

L ‘oreal விளம்பரத்தில் உலக அழகி ஐஸ்வர்யா ராய் வருவார். அந்த விளம்பரம் பார்ப்பதற்கு சாதாரணமாக தெரிந்தாலும், அந்த விளம்பரத்திற்குப் பின்னால் இருக்கும் அழகு சாதனப் பொருட்களின் வணிக நோக்கம் பற்றியோ, அல்லது, அதனால் ஏற்படும் உலக சந்தையின் எழுச்சி பற்றியோ நம்மில் பெரும்பாலானவர்கள் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை.
அதிக பட்சம் ஒரு பான்ஸ் பவுடர்தான் நம் அழகுசாதனமாக இருந்த நிலையை மாற்றி மக்களை அழகு என்கிற போதையில் ஆழ்த்தும் விளம்பரங்கள். அந்த விளம்பரங்களில் நடிக்கும் அழகிகள் நம்மை நுகர்வை நோக்கி தூண்டுகிறார்கள்.எதையாவது வாங்கிக் கொண்டே இருக்க வேண்டும். என்ற கார்ப்பரேட் முதலாளித்துவ ஒழுக்கத்தின் ஒரு வணிக பகுதிதான் இந்த அழகு சாதனப் பொருட்களும் அதன் விரிவடைந்த சந்தையும்.
அது அம்மை நுகர்வு கலாச்சாரத்தை நோக்கி தள்ளி ஏமாற்றுகிறது. 1951 முதல் 1950 வரை உலக அழகி பட்டங்கள் sweden ,france ,egypt ,germany ,finland ,south africa ,netherlands, urgentina மற்றும் UK வை சேர்ந்த பெண்களுக்கு வழங்கப்பட்டது. இதனால் அந்த நாடுகளில் அழகுசாதன பொருட்களின் சந்தை உயரத்தை எட்டியது.1966 ஆம் ஆண்டு முதன் முதலில் இந்தியாவை சேர்ந்த Reita Faira விற்கு உலக அழகி பட்டம் வழங்கப்பட்டது.அதற்குபின் அழகுசாதன பொருட்கள் சினிமா மற்றும் மேட்டுக்குடி வர்க்கத்தைச் சேர்ந்த பெண்கள் மட்டும் பயன்படுத்தி வந்தார்கள். இதனால் இந்தியாவில் ஒப்பனை பொருட்களின் உபயோகம் 10% உயர்ந்தது. சுமார் 30 வருடங்கள் கழித்து மறுபடியும் வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகம் உயர்வை கருத்தில் கொண்டு உலக நாடுகள் இந்தியாவை சேர்ந்த ஐஸ்வர்யா ராய்க்கு 1994ல் உலகி அழகியாக தேர்வு செய்தார்கள். இதன் நோக்கம் அவரை வைத்து சர்வதேச அழகுசாதன பொருட்களை இந்தியாவிற்கு கொண்டு வரும் நோக்கமே என்பது நாம் அறியாத உண்மை.சீனா விற்கு அடுத்து இந்தியா சந்தையில் தான் இவர்களின் கவனம் முழுவதும்.

ஐஸ்வர்யா ராய் நடித்து பிரபலமான Lux, Lakme சந்தையில் உச்சத்தை எட்டியது .இது மட்டும் இல்லாமல் FMCG Fast Moving Consumer Goods விளம்பரங்களிலும் அவர் நடித்தார் Pepsi ,Camlinஉம் இதில் அடங்கும். சுமார் 68% இளம் பெண்கள் ஒப்பனை மற்றும் சோப்புகளை இந்த விளம்பரத்திற்கு பின் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். 1996ஆம் ஆண்டு Miss Universe பட்டத்தை Sushmitha Sen க்கு வழங்கப்பட்டது.1997 Diana Hayden ,1999 Yuktha Mookhey ,2000 Priyanka Chopra இவர்கள் அனைவருக்கும் தொடர்ச்சியாக உலக அழகி பட்டமும். 2000 ஆம் ஆண்டு Lara Datta விற்கு Miss Universe பட்டம் வழங்கப்பட்டது. இப்படி தொடர்ந்து இந்தியாவை குறி வைத்து உலக சந்தை சர்வதேச பொருட்களை சொற்ப விலைக்கு தயார்செய்து அதன் விற்பனை மூலம் பெரும் லாபத்தை சம்பாதிக்க போட்ட திட்டமே இந்த அழகி போட்டியின் தந்திரம் .Fashion என்ற திரைப்படத்தில் ஒரு சாதாரணமான பெண் மாடலிங் உலகத்தில் வரும் கதை. இதில் priyanka chopra நாயகியாக நடித்தார். அவர் எப்படி அழகி பட்டம் பெறுகிறார், அதன் பின்னர் அவருக்கு விளம்பர பட நிறுவனங்கள் எப்படி எல்லாம் வலை வீசுகிறது என்பதை மிகவும் அழகாகவும், சிந்திக்க வைக்கும் படியாகவும் சித்தரித்தது அந்த படம். எப்படி ஒரு அழகியை தேர்வு செய்கிறார்கள், தேர்வு செய்தபின் அவரை வைத்து சம்பாதிக்கும் ஒப்பனை உலகம் என்று காட்சிகள் அழகாக சித்தரிக்க பட்டிருக்கும்.

இந்தியாவின் முத்தலாக் முறை: அதை எதிர்த்து போராடிய 5 பெண்கள்

Assocham நடத்திய ஆய்வில் 2005 முதல் -2015 வரை 68% இளம்பெண்கள் தங்களை அழகு படுத்திக்கொள்ள அழகுசாதன பொருட்களை உபயோக படுத்துகிறார்கள். Compound Annual Growth Rate ஆய்வு கூறுவது 17.06% ஏற்றம் 5 ஆண்டுக்கு ஒருமுறை ஒப்பனை மற்றும் சோப்பு பொருள்களுக்கு உயர்வாகிறது. 2008ஆம் ஆண்டு USD 2.5 billion லாபம் பற்றது 2016ஆம் ஆண்டு USD 6.5 billion ஆக உயர்வு. 2025ஆம் ஆண்டு USD 20 billion தொட்டுவிடும் என்கிறது இந்த குழு. KPMG wellness sector (2014) இந்தியாவின் அழகு சந்தை Rs .80,370 கோடி லாபம் 2017-18யில் எட்டும் என்கிறது. இதன் அடிப்படையில் தான் தற்போது 2017ஆம் ஆண்டிற்கான உலக அழகி பட்டம் Manushi Chiller க்கு வழங்க பட்டது என்பது இங்கே யோசிக்க வேண்டிய விஷயம் .2012-13 வரை Rs.41,224 கோடி லாபம் இதன் வீழ்ச்சிக்கு காரணம் பெரும்பாலான மக்கள் இயற்கை மற்றும் மூலிகை சார்ந்த அழகு பொருட்களை வாங்க தொடங்கிவிட்டனர்.இருப்பினும் பெண்கள் அன்றாடம் உபயோக படுத்தும் nail polish ,lipstick ,lip gloss போன்ற பொருள்களின் நுகர்வுத்தன்மை குறையவில்லை. உடுத்தும் ஆடைக்கு ஏற்றார் போல் இந்த பொருள்களை உபயோகிக்கிறார்கள் எனலாம்.

பெண்களுக்கு மட்டுமின்றி ஆண்களுக்கும் இப்பொழுது அழகன் போட்டி வைக்க படுகின்றது. கடந்த 5 ஆண்டில் 42% ஆண்கள் 18-25 வயது வரை உள்ள ஆண்களும் தங்களை அழகு படுத்தி கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இயற்கை மற்றும் மூலிகை பொருட்களால் ஆனா ஒப்பனைகளை பயன்படுத்த ஆரம்பித்ததின் விளைவில் சர்வதேச பொருட்களில் Natural, Herbal,Ayurvedic என்கிற வார்த்தைகளை உபயோக படுத்த ஆரம்பித்துவிட்டனர்.L ‘oreal Ayurvedic shampoo என்று இப்பொழுது புதிதாக விளம்பரம் செய்கிறார்கள். இதனால் சரிவடைந்த சந்தையை மறுபடியும் தூக்கி நிறுத்தும் உத்தேசம்.இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகம் உலக சந்தையில் சீனா வை அடுத்து இந்தியா இரண்டாம் இடம் பிடித்துள்ளது.2015-16 ஆம் ஆண்டில் இந்த cosmetics மற்றும் toiletries பொருட்களின் ஏற்றுமதி USD 1007.20 million, இறக்குமதி USD 703.58.
இப்படியாக கார்ப்பரேட் அழகு சாதன சந்தை உருவாக்கிய போதை உயர் வர்க்கம் துவங்கி கீழ் மட்டத்து பெண்கள் வரை அடிமையாக்கி விட்டது. தெருவுக்கு தெருவு கடை விரித்திருக்கும் ‘பியூட்டி பார்லர்கள்’ ஒல்லியாக இருப்பவர்கள்தான் பார்ப்பதற்கு அழகானவர்கள் என்பதைபோதிக்கிறது.
இப்படி சர்வதேச அளவிலும் உள்ளூர் அளவிலும் அழகு பற்றிய நம் முட்டாள்தனத்தை பயன்படுத்திக்கொள்ளும் வெளிநாட்டு சந்தைகள். அதன் பின்னால் இருக்கும் corporate ஊழல். வெறும் உலக அழகி பட்டம் என்று சாதாரணமாக கடந்து செல்ல முடியாது என்பது தான் இங்கு நாம் சிந்திக்க வேண்டிய ஒன்று.

கட்டுரையாளர் குறிப்பு :- ஆர்த்தி- ‘வெண்ணிற இரவுகள்’ எனும் பெயரில் நண்பர்களுடன் இணைந்து நூல் அறிமுகம் செய்கிறார். ஐ.டி துறை பணியாளராக தொழிற்படும் இவர் வர்க்க பார்வைகளுடன் பிரச்சனைகளை அணுகிறார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*