அன்பு செழியன்: கந்து வட்டி மாஃபியாவை பாதுகாக்கும் அமைச்சர்..!

‘உத்தமர் அன்பு செழியன்’:இயக்குநர் சீனு ராமசாமி சான்றிதழ்..!

அஜித்தை மிரட்டிய அன்புசெழியன்: சுசீந்திரன் கடிதம்

சித்தரவதை, பாலியல் கொடுமை…பதற வைக்கும் அசோக்குமாரின் மரண வாக்குமூலம்…!

‘அழகி’ பட்டங்களும் கார்ப்பரேட் போதையும்: -ஆர்த்தி..!

இந்தியாவின் முத்தலாக் முறை: அதை எதிர்த்து போராடிய 5 பெண்கள்

மதுரை கந்து வட்டி மாஃபியா அன்பு செழியன் மதுரையில் நேற்றே கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானாலும் அது உண்மையில்லை. அன்பு செழியன் ஒரு அமைச்சரின் மகனின் பாதுகாப்பில் இருப்பதாகவும், விரைவில் முன் ஜாமின் பெற்ற பிறகு சுதந்திரமாக வெளியில் வருவார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அன்பு செழியனை  கைது செய்ய முடியாத அளவுக்கு தமிழக காவல்துறையின் திறமையை சந்தேகிப்பதற்கு எதுவும் இல்லை. அன்பு செழியனும் தலைமறைவாக இருக்கும் அளவுக்கு தனி நபரும் அல்ல. இந்த அன்புச் செழியனிடம் சொத்துக்களை இழந்தவர்கள் பலர். ஜீ.வெங்கடேஸ்வரன் தற்கொலை முதல் இப்போது அன்பு செழியனால் கந்து வட்டி கொலைக்கு உள்ளாகியிருக்கும் அசோக்குமார் வரைக்கும் தெரிந்த ரகசியம் எந்த ஆட்சி வந்தாலும் கீழ் மட்டம் முதல் அமைச்சர்கள் வரை செல்வாக்கு பெற்றவர் அன்பு செழியன் என்று. முன்னர் சசிகலாவின் ஆளாக தன்னைக் காட்டிக் கொண்ட அன்பு இப்போது தன்னை பன்னீர்செல்வத்தின் ஆளாக காட்டிக் கொள்கிறார்.
சசிகுமார், அசோக்குமார் மீது அன்புச் செழியன் விடுத்த மிரட்டல் பல நாட்களுக்கு முன்னரே பிரச்சனை ஆக, இயக்குநர் அமீர் போலீஸ் புகார் கொடுக்க தயாராகி இருக்கிறார். அப்போது இயக்குநர் பாலா தலையிட்டு அன்பு செழியன் மீது புகார் கொடுக்க வேண்டாம் என்று பஞ்சாயத்து செய்திருக்கிறார். இப்போது இயக்குநர் சீனு ராமசாமி அன்பு செழியனை உத்தமர் என்கிறார். அப்படி என்றால் சினிமாவே தங்களின் சாதி நலன்களோடு கந்து வட்டி கும்பலை ஆதரிக்கும் நிலையில்தான் உள்ளதா என்ற கேள்வியும் எழுகிறது.
காவல்துறை நினைத்தால் அன்புச் செழியனை இந்நேரம் பிடித்து குண்டர் சட்டத்தில் கைது செய்திருக்க முடியும். ஏற்கனவே ஜீ.வெங்கடேஸ்வரன் தற்கொலை, சுந்தரா டிராவல்ஸ் தயாரிப்பாளரிடம் 20 லட்ச ரூபாய்க்கு ஒரு கோடிக்கும் மேல் வட்டி மட்டும் வாங்கி விட்டு அவரது சொத்தை பிடுங்கி கொண்டது. உள்ளிட்ட ஏராளமான கந்து வட்டி புகார்கள் அன்பு செழியன் மீது உள்ளன.
ஜீ.வி. தற்கொலையை அடுத்து அப்போது கந்து வட்டி தடைச் சட்டத்தை ஜெயலலிதா கொண்டு வந்த போதும் அன்பு செழியனை கைது செய்யவில்லை. இப்போதும் அவரை கைது செய்வார்களா? என்ற கேள்வியே எழுந்துள்ளது. அவரை அப்படியே விட்டு இன்னும் சில நாட்கள் கழித்து அவர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெறும் படியான சூழலை உருவாக்கிக் கொடுப்பார்களா என்பதும்தான் இப்போதைய கேள்விக்குறியாக உள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*