‘உத்தமர் அன்பு செழியன்’:இயக்குநர் சீனு ராமசாமி சான்றிதழ்..!

அஜித்தை மிரட்டிய அன்புசெழியன்: சுசீந்திரன் கடிதம்

சித்தரவதை, பாலியல் கொடுமை…பதற வைக்கும் அசோக்குமாரின் மரண வாக்குமூலம்…!

‘அழகி’ பட்டங்களும் கார்ப்பரேட் போதையும்: -ஆர்த்தி..!

இந்தியாவின் முத்தலாக் முறை: அதை எதிர்த்து போராடிய 5 பெண்கள்

இந்துத்துவர்கள் ஏன் எதிர்க்கிறார்கள் ‘பத்மாவதி’ படத்தை?s
மதுரையைச் சேர்ந்த கருப்பு பண முதலையும் கந்து வட்டி மாஃபியாவுமான அன்பு செழியனின் தொடர் சித்திரவதை காரணமாக இயக்குநர் சசிகுமாரின் உறவினரும் கம்பெனி பட நிறுவனத்தின் மேலாளருமான அசோக்குமார் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவர் எழுதியுள்ள கடிதத்தில் நேரடியாக அன்பு செழியனின் சித்திரவதைகள் பற்றி குறிப்பிட்டுள்ள நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான சீனு ராமசாமி அன்பு செழியனுக்கு ஆதரவாக டுவிட்டரின் ஒரு கருத்தை பதிவிட்டு உள்ளார். அதில்,
“Seenu MoreRamasamy‏
//எம்.ஜீ.ஆர், சிவாஜீ, போல் இல்லை இன்றைய நடிகர்கள்.அன்பு செழியன் போன்ற உத்தமர்கள் ஏனோ தவறாக சித்தரிக்கப்பவது வேதனை.நான் நியாயத்தின் பக்கமே...//
ஒரு திரைப்படத்தின் தயாரிப்புச் செலவில் பெரும் பகுதி அதாவது 70% தொகை நடிகர்களின் சம்பளத்திற்கே சென்று விடும் நிலையில், படத்தை தயாரிப்பவர்கள் பெரும்பகுதி பணத்தை நடிகர்களிடம் இழக்க வேண்டிய நிலை. இந்த நிலையைத்தான் இயக்குநர் சீனு ராமசாமி சுட்டிக்காட்டுகிறார். ஆனால் தமிழ் சினிமா சந்திக்கும் பிரச்சனைகளில் பேச வேண்டிய பல விஷயங்களில் பிராதானமான விஷயமாக நடிகர்களின் சம்பள பிரச்சனையும் உள்ளதை மறுக்க முடியாது. என்றாலும் நிலவும் அந்த சூழலை பயன்படுத்தி கந்து வட்டி மாஃபியாக்கள் சிலரது உயிரை குடிக்கும் அளவுக்கு அரசியல் பின்புலத்தோடு நடந்து கொள்வதை எப்படி ஆதரிக்க முடியும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*