”எச்.ராஜாவையே கூஜாவாக்கி விட்டார்கள்” :கஸ்தூரி கலாய்..!

இந்துத்துவர்கள் ஏன் எதிர்க்கிறார்கள் ‘பத்மாவதி’ படத்தை?

தீரன் அதிகாரம் ஒன்று: அரிதினும் அரிதான கிரைம் திரில்லர்
சித்தூர் ராணு பத்மினியின் கதையை வைத்த்து ‘பத்மாவதி’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார் சஞ்சய் லீலா பன்சால். இதில் தீபிகா படுகோனே பத்மாவதியாக நடித்துள்ள நிலையில், இந்த படத்துக்கு இந்துத்துவ அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பாஜக தலைவர்களும், முதல்வர்களுமே இந்த திரைப்படத்தை வெளியிட மாட்டோம் என எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்த படத்தில் ராணி பத்மினி வேடத்தில் நடித்த தீபிகா படுகோனே மூக்கை அறுப்போம் என்றும் அவரது தலையையோ அல்லது படத்தின் டைரக்டர் சஞ்சய் லீலா பஞ்சாலி தலையையோ கொண்டு வருபவர்களுக்கு ரூ.5 கோடி பரிசு வழங்கப்படும் எனவும் போராட்டக்காரர்கள் அறிவித்தது பெரும் சர்ச்சையாகி உள்ளது. படத்தின் நாயகி தீபிகாவிற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. பல்வேறு சர்ச்சைகள் எழுந்து உள்ளநிலையில் படத்தின் வெளியீடு தேதியை தயாரிப்பு நிறுவனம் ஒத்திவைத்தது.

இந்நிலையில் அரியானா மாநில பாரதீய ஜனதாவின் தலைமை ஊடக ஒருங்கிணைப்பாளர் சுராஜ் பால் அமு பேசுகையில், தீபிகா மற்றும் பன்சாலியின் தலைக்கு ரூ. 5 கோடி பரிசு அறிவித்த மீரட் இளைஞருக்கு பாராட்டு தெரிவிக்க விரும்புவதாக குறிப்பிட்டார். அவர்களுடைய தலையை எடுப்பவருக்கு நாங்கள் ரூ. 10 கோடி பரிசு வழங்குவோம், அவருடைய குடும்பத்திற்கு தேவையான அனைத்து வசதியையும் நாங்கள் ஏற்படுத்தி கொடுப்போம் என்றார். மேலும் தேவைப்பட்டால் பா.ஜனதாவில் இருந்து விலகுவேன் என கூறிஉள்ள சுராஜ் பால் அமு, பத்மாவதி படம் மீது நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடி தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும் எனவும் கூறிஉள்ளார். அவருடைய பேச்சு பெரும் சர்ச்சையாகியது.

இந்த செய்தியை டுவிட்டரில் பதிவு செய்து உள்ள நடிகை கஸ்தூரி பா.ஜனதா தலைவர் எச்.ராஜாவை கலாய்த்து உள்ளார். “சூரஜ் பால் அமு, எச்.ராஜவையே கூஜாவாக்கி விட்டார். சுரஜ் பால் அமு பாஜகவுக்கு கிடைத்த சொத்து” என பதிவிட்டு உள்ளார் கஸ்தூரி.

பாஜகவால் தமிழகத்தில் கை கூட ஊன்ற முடியாது :ஸ்டாலின்…!

குஜராத் தேர்தல்:பாஜகவை தோற்கடிக்க வியூகம்..!

சென்னை மாவட்ட ஆட்சியருக்கு உழைக்கும் மக்களின் கடிதம்

இறந்த பிறகும் அவமானப்படுத்தப்படும் ஜெயலலிதா…!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*