அசோக் குமார் மரணம்: விஜய் ஆண்டனிக்கு பதிலடி கொடுத்த கரு பழனியப்பன்

‘பத்மாவதி’ படத்துக்கு எதிரான வாசகங்களுடன் தொங்கும் பிணம்?

இந்துத்துவர்கள் ஏன் எதிர்க்கிறார்கள் ‘பத்மாவதி’ படத்தை?
12 ஏ சான்றிதழுடன் வெளியாகிறது ‘பத்மாவதி’?

தயாரிப்பாளர் அசோக் குமார் தற்கொலைக்கு காரணமாக கூறப்படும் அன்பு செழியனை பற்றி மற்றவர்கள் மிகையாக சித்தரிக்கிறார்கள், நான் கடந்த ஆறு வருடமாக அவரிடம் பணம் வாங்கிதான் படம் எடுக்கிறேன் என விஜய் ஆண்டனி தெரிவித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இயக்குனர் கரு பழனியப்பன் ஒரு ட்விட் செய்துள்ளார்.

அதில் அவர், “விஜய் ஆண்டனி…உங்களுக்கு நல்லவராய் தோன்றுபவர், ஆறு மாதம் முன்னர் வரை சசிகுமாருக்கும் நல்லவர்தான்!. விஜய் ஆண்டனி, நீங்கள் தொடர்ந்து வெற்றி பெற அதிர்ஷ்டமும், கடனை திருப்பிச்செலுத்தும் உறுதியும், அன்புச்செழியன் பற்றிய நிலைப்பாடும், மாறாதிருக்க பரம பிதா அருள் பாலிக்கட்டும்..!” என தெரிவித்துள்ளார். அன்பு செழியனுக்கு ஆதரவாக சீனு ராமசாமி மற்றும் விஜய் ஆண்டனி உள்ளிட்ட சிலர் மட்டுமே கருத்து தெரிவித்துள்ளனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*