ஆடம்பரவாதி இசக்கிமுத்துவும் உத்தமர் அன்புச் செழியனும்…!

அசோக் குமார் மரணம்: விஜய் ஆண்டனிக்கு பதிலடி கொடுத்த கரு பழனியப்பன்

அன்பு செழியன்: கந்து வட்டி மாஃபியாவை பாதுகாக்கும் அமைச்சர்..!

‘உத்தமர் அன்பு செழியன்’:இயக்குநர் சீனு ராமசாமி சான்றிதழ்..!

அஜித்தை மிரட்டிய அன்புசெழியன்: சுசீந்திரன் கடிதம்

வட்டி தொழில் என்பது காலந்தோறும் மக்களுக்கு தண்டனை வழங்கும் தொழில் முறையாக இருப்பதை நாம் திருவிவிலியம் மூலமாகவும்  மன்னர் காலத்து வட்டி முறைகளிலும் இருந்தும் காண முடியும். வட்டி தொழிலை அரசு தடை செய்யவில்லை. அதிக வட்டி வாங்குவதை குற்றம் என்கிறது.
சில வாரங்களுக்கு முன்னர் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் இசக்கி முத்து குடும்பம் தற்கொலை செய்து கொண்ட போது சில காவல்துறை உயரதிகாரிகளும், அரசு அதிகாரிகளும் மக்களுக்கு வழங்கிய அறிவுரை “வட்டிக்கு கடன் வாங்காதீர்கள்” “இருப்பதை வைத்து வாழப்பழகுங்கள்” எளிமையாக வாழுங்கள் என்பதுதான். இசக்கி முத்துவைச் சுற்றி பின்னப்பட்ட சமூக நெருக்கடிகளையோ, குடும்பம் எனும் நிறுவனம் உருவாக்கி வைத்திருக்கும் செலவு கணக்குகளையோ இவர்கள் ஆடம்பரம் என்ற வரையறைக்குள் கொண்டு வந்து விட்டார்கள். இன்று அதே நிலைதான் தற்கொலை செய்து கொண்ட தயாரிப்பாளர் அசோக்குமாருக்கும். இசக்கி முத்து குடும்பத்திற்கு வழங்கப்பட்ட அறிவுரைகளை விட பண்பிலும், தன்மையில் இந்த அறிவுரைகள் ஆபாசமாக இருக்கிறது. காரணம் இந்த அறிவுரைகளை வழங்குகிறவர்கள் அறிவுத்துறையினர் என்பதால்,
இயக்குநர் சீனு ராமசாமி அன்புச் செழியனை உத்தமர் என்கிறார். விஜய் ஆன்டனி நல்லவர் என்கிறார். இயக்குநர் சுந்தர் சி-யும் அதே கருத்தைச் சொல்கிறார். இவர்களின் அத்தனை பேரின் கருத்துமே “நாங்கள் வாங்கிய கடனுக்கு ஒழுங்காக வட்டி கட்டுகிறோம். பின்னர் கடனை அடைத்து விடுகிறோம்” என்கிறார்கள்.

சொல்லாமல் விட்ட செய்தி பலருடைய மனதையும் காயப்படுத்தும், “நாங்கள் எல்லாம் வெற்றிப்பட இயக்குநர்கள். நாங்கள் கடன் வாங்கி படம் எடுத்தால் அது ஓடும்… கடனை அடைத்து விடுகிறோம். தோல்வி படம் எடுக்கும் நீங்கள் எல்லாம் ஏன் கடன் வாங்கி படம் எடுக்கின்றீர்கள்?” என்பதுதான் மறைமுகமாக சொல்ல வரும் செய்தி அல்லது கேட்க விரும்பும் கேள்வி.இப்போது இசக்கி முத்து குடும்பத்தை மிரட்டி போலீஸ்காரர் சொன்னாரே “வட்டி கட்ட வக்கில்லாட்டி எதுக்குல கடன் வாங்குற?” அதே வார்த்தைகளைத்தான் இவர்களும் மறைமுகமாக வெளிப்படுத்துகிறார்கள்.
தமிழ் சினிமா எதிர்நோக்கும் பிரச்சனைகளில் இரு முக்கியமான விஷயங்கள் உள்ளன.ஒரு பெரிய பட்ஜெட் படத்தின் 70% செலவு நடிகர்களின் ஊதியத்திற்கே சென்று விட்டது. திரைப்படத்தின் தயாரிப்புச் செலவுகளை குறைக்க வேண்டும் என்று பேசுகிறவர்கள். சினிமா தொழிலாளர்களின் ஊதியக்குறைப்பு பற்றி பேசுகிறார்கள். பேசுவது கூட இல்லை. அடக்குமுறை மூலம் அவர்களின் ஊதியத்தை நிர்ணயிக்கிறார்கள். ஆனால் எவரும் நடிகர்களின் வகை தொகையில்லாத ஊதியம் பற்றி பேசுவதில்லை.
ஒரு படம் ஓடினால் எல்லா பெருமையும் ஹிரோவுக்குச் சென்று விடுகிறது. தோல்வியடைந்தால் பழி இயக்குநர் மீதும், கடன் சுமை தயாரிப்பாளர் மீதும் விழுந்து விடுகிறது. பேசப்பட வேண்டிய இந்த விஷயம் சினிமாவில் ஒரு விவாதம் எனும் அளவில் கூட நடைபெறவில்லை.
இன்னொரு பக்கம் அன்பு செழியனின் தொழில் தர்மம். அன்பு செழியன் வட்டி தொழில் செய்ய வில்லை. கந்து வட்டி தொழில் செய்கிறார். அவரிடம் கடன் வாங்கியவர்கள்  எவரும் மீண்டதில்லை. அவர் வைத்திருப்பது தமிழக அமைச்சர்களின் பணத்தை. சாதாரணமாக வட்டித் தொழில் செய்கிறவர்கள் வேறு. கந்து வட்டி தொழில் வேறு. அரசியல் பின்புலத்தோடு ரௌடிகள், பெரிய மனிதர்கள் என படை புலத்தோடு செய்யும் கந்து வட்டி தொழில் என்பது organized crime ஒழுங்கமைக்கப்பட்ட வன்முறை.
இந்த தொழிலே தவறு. இந்த தவறானவர்களின் வட்டிக்கு பணம் வாங்கலாமா எனக் கேட்பது வேறு. அதற்காக வாங்கிய ஒருவர் மிரட்டலால் தற்கொலை செய்து கொண்ட பின்னர். கந்து வட்டி தொழில் செய்யும் கிரிமினலை ‘உத்தமர் என்றும் நல்லவர் என்றும் சொல்வதும் கூட கிரிமினல்தனம்தான்.

எந்த டெட் பாடியை வைத்து ஓட்டுக் கேட்பார் பன்னீர்செல்வம்?

டிச -21 -ம் தேதி ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்..!

இனி அதிமுகவின் பயணம்?

இரட்டை இலை:தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை பாரபட்சமானது…எப்படி?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*