ஆர்.கே.நகர் தேர்தலை புறக்கணிக்கிறதா திமுக?

ஆடம்பரவாதி இசக்கிமுத்துவும் உத்தமர் அன்புச் செழியனும்…!

அசோக் குமார் மரணம்: விஜய் ஆண்டனிக்கு பதிலடி கொடுத்த கரு பழனியப்பன்

அன்பு செழியன்: கந்து வட்டி மாஃபியாவை பாதுகாக்கும் அமைச்சர்..!

‘உத்தமர் அன்பு செழியன்’:இயக்குநர் சீனு ராமசாமி சான்றிதழ்..!

அஜித்தை மிரட்டிய அன்புசெழியன்: சுசீந்திரன் கடிதம்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பாக என்ன முடிவெடுப்பது என ஆலோசிக்க திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் நாளை அறிவாலயத்தில் அவசர ஆலோசனை நடக்கிறது.

இரட்டை இலைச் சின்னத்தை நேற்று ஒபிஎஸ்-இபிஎஸ் அணிகளுக்கு ஒதுக்கிய தேர்தல் ஆணையம் இன்று  ஆர்.கே.நகர் தொகுதிக்கு தேர்தலை அறிவித்தது. இது கடும் சர்ச்சைகளை உருவாக்கியது. கடந்த ஏப்ரல் மாதம் பணப்பரிவர்த்தனையை காரணம் காட்டி தேர்தலை ரத்து செய்த ஆணையம் பணப்பரிவர்த்தனை தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தொடர்பாக நீதிமன்றமே கேள்வி எழுப்பியது.

மேலும் தமிழகத்தில் நடைபெறும் ரெய்டுகள், தேர்தல் ரத்து, இலை முடக்கம், அணிகள் இணைவு. மீண்டும் இலை ஒரு தரப்புக்கு வழங்கப்பட்டது என ஒவ்வொரு நிகழ்வும் சங்கிலி தொடர் போல நடப்பதால் பலரும் தேர்தல் கமிஷனின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்துள்ளனர். மேலும் இப்பொது ஆட்சியில் இருக்கும் அரசு மைனாரிட்டி அரசு,. இந்த அரசை பலவந்தமாக கவர்னரும், நீதிமன்றமும் காப்பாற்றி வருவதும் பொது வெளியில் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில்தான் திமுக வேட்பாளராக கடந்த முறை மருது கணேஷ் போட்டியிட்டார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்ற கருத்து பலராலும் வெளிப்படுத்தப்பட்டு வந்த நிலையில்,மருது கணேசை தனது வேட்பாளராக திமுக   இன்று மாலைக்குள்  அறிவிக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் ஆர்.கே.நகர் தேர்தல் தொடர்பாக முக்கிய முடிவெடுக்க திமுக தலைமையில் நாளை அண்ணா அறிவாலயத்தில் அவசர ஆலோசனை நடைபெறுகிறது. நாளை நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்பார்கள் என கூறப்பட்டுள்ளது.
திமுக தேர்தலை புறக்கணித்தால் அதிமுக அணிகளுக்குள் மோதல் கூர்மையடையும். ஒபிஎஸ்-இபிஎஸ் அணிகளுக்கு இடையிலான முரண்பாடும் கூர்மையடையும். ஒரு வேளை திமுக தேர்தலை புறக்கணித்தால் தினகரன் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெல்லும் சூழலும் ஏற்படும். திமுக என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பது நாளைதான் தெரியும் என்றாலும், நாளைய விவாதத்தில் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கும் ஜனநாயக படுகொலைகளை கண்டித்து தேர்தலை புறக்கணிக்கலாமா என்பது  தொடர்பாகவும் விவாதிக்க இருக்கிறது.

எந்த டெட் பாடியை வைத்து ஓட்டுக் கேட்பார் பன்னீர்செல்வம்?

டிச -21 -ம் தேதி ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்..!

இனி அதிமுகவின் பயணம்?

இரட்டை இலை:தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை பாரபட்சமானது…எப்படி?

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*