இனி அதிமுகவின் பயணம்?

இரட்டை இலை:தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை பாரபட்சமானது…எப்படி?

அன்பு செழியன்: கந்து வட்டி மாஃபியாவை பாதுகாக்கும் அமைச்சர்..!

‘உத்தமர் அன்பு செழியன்’:இயக்குநர் சீனு ராமசாமி சான்றிதழ்..!

அஜித்தை மிரட்டிய அன்புசெழியன்: சுசீந்திரன் கடிதம்
இரட்டை இலை மதுசூதனன் தலைமையிலான அதிமுகவுக்கு என்று தேர்தல் கமிஷன் தீர்ப்பளித்து விட்டது.இந்த தீர்ப்பு இப்படித்தான் வரும் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில் இந்த தீர்ப்பு வந்திருக்கிறது என்றாலும். இரட்டை இலை கிடைத்து விட்டது. இனி அதிமுக எனும் கட்சி நமக்குத்தான் என்று ஓ.பன்னீர்செல்வமும் சரி எடப்பாடி பழனிசாமியும் சரி நிம்மதியாக இருந்து விட முடியாது. இது தொடர்பாக எந்த அணியையும் சாராமல் அதிமுகவில் இருந்து ஒதுங்கியிருக்கும் அதிமுக பிரமுகர் ஒருவர் நம்மிடம் பேசும் போது:-

அதிமுக எனும் கட்சியின் இன்றைய நிலைக்கு காரணம் பிரதானமாக பன்னீர்செல்வம்தான். எங்களுக்கெல்லாம் சசிகலாவை பிடிக்கவில்லை என்பதால் விலகி வந்தோம். இன்றைக்கு அவர்களுக்கு இவளவு சொத்து இருக்கிறதென்றால் அது அனைத்துமே பன்னீர்செல்வமும், சசிகலா அரசியலுக்கு கொண்டு வந்தவர்களும் கொள்ளையடித்து கொண்டு போய் கொட்டியதுதான். சசிகலா குற்றவாளி என்றால் இவர்களும் குற்றவாளிகள்தான். அம்மா மரணத்திற்கு முன்பே பாஜக தலையிட்டதால்தான் அதிமுகவுக்குள் இத்தனை குழப்பங்கள் நடந்து கொண்டிருக்கிறது. எல்லாம் மோடியின் விருப்பப்படிதான் நடக்கிறது.இரட்டை இலையை ஒபிஎஸ்-இபிஎஸ் இருவரும் இணைந்து வென்று விட்டார்கள் என்பதை அவர்களின் ஆதரவாளர்களே நம்பவில்லை. தமிழகத்தில் மோடி காலூன்ற அதிமுக தேவை. அதற்காகவே அனைவருக்கும் விலை பேசப்பட்டது. உண்மையில் அந்த பேரத்திற்கு சசிகலா மட்டும்தான் பணியவில்லை. அதனால்தான் அவர் சிறைக்குச் சென்றார். ஒரு வேளை பேரத்திற்கு பணிந்திருந்தால் தீர்ப்பே வந்திருக்காது. ஆக மொத்தம் இப்போது நடப்பது ஊழல் ஒழிப்போ, கருப்பு பண ஒழிப்போ அல்ல, முதலில் சசிகலா பெரும்பான்மை ஆதரவு இருந்தும் ஆட்சி அமைக்க அழைக்காமல் விட்டது முதல் இப்போது இரட்டை இலையை கொடுத்தது வரை பாஜகதான் அதிமுகவை இயக்குகிறது. ஆனால் இனியும் இவர்கள் மோடியின் விருப்பங்களை மீறி இவர்கள் செயல்பட முடியாது. பன்னீர்செல்வம் கையிலும் எடப்பாடி பழனிசாமி கையிலும் ஆளுக்கொரு கத்தி இருக்கிறது.அந்த கத்தியை தீட்டிக் கொண்டே இருப்பதுதான் பாஜக வேலை. ஆர்.கே.நகர் தேர்தலில் இருந்து தன் கணக்கை பாஜக துவங்கும் என்று பேசிக் கொள்கிறார்கள். அதற்கு உகந்த சூழலை இரு கோஷ்டிகளும் உருவாக்கும். அதாவது ஆர்.கே.நகர் தொகுதி யாருக்கு என்பதில் இரு அணிகளும் மோதிக் கொள்ளும் முடிவில் அதிமுக ஆதரவோடு ஆர்.கே.நகரில் பாஜக போட்டியிடும் இதுதான் அவர்களின் திட்டம் இதை நோக்கியே இனி அதிமுகவின் பயணம் இருக்கும்” என்றார் அவர்.

சித்தரவதை, பாலியல் கொடுமை…பதற வைக்கும் அசோக்குமாரின் மரண வாக்குமூலம்…!

‘அழகி’ பட்டங்களும் கார்ப்பரேட் போதையும்: -ஆர்த்தி..!

இந்தியாவின் முத்தலாக் முறை: அதை எதிர்த்து போராடிய 5 பெண்கள்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*