’பத்மாவதி’ படக்குழுவை வரவேற்கிறார் மம்தா பானர்ஜி..!

ஆர்.கே.நகர் தேர்தலை புறக்கணிக்கிறதா திமுக?

ஆடம்பரவாதி இசக்கிமுத்துவும் உத்தமர் அன்புச் செழியனும்…!
அசோக் குமார் மரணம்: விஜய் ஆண்டனிக்கு பதிலடி கொடுத்த கரு பழனியப்பன்அன்பு செழியன்: கந்து வட்டி மாஃபியாவை பாதுகாக்கும் அமைச்சர்..!

‘உத்தமர் அன்பு செழியன்’:இயக்குநர் சீனு ராமசாமி சான்றிதழ்..!

அஜித்தை மிரட்டிய அன்புசெழியன்: சுசீந்திரன் கடிதம்

இந்திய திரை உலகின் முக்கியமான இயக்குநரான சஞ்சய் லீலா பஞ்சாலி இயக்கத்தில், தீபிகா படுகோனே, ரன்வீர்சிங், ஷாகித் கபூர் நடிப்பில் உருவாகியிருக்கும் பிரமாணடமான படம் ‘பத்மாவதி’  ராணி பத்மாவதி வாழ்க்கையை சித்தரிக்கும் இந்த படம் இந்துக்களின் மனதை புண்படுத்துவதாக கூறி பாஜகவும், இந்துத்துவ அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
பாஜக ஆளும் மாநிலங்களான மத்தியபிரதேசம், குஜராத், உத்திரபிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்சார் போர்டும் இப்படத்திற்கு இன்னும் சான்றிதழ் அளிக்காத நிலையில்,  இதில் நடித்த தீபிகா படுகோனேவுக்கு விலை நிர்ணயம் வேறு செய்திருக்கிறார்கள்.
பாஜக அல்லாத காங்கிரஸ், இடதுசாரிகள் ஆளும் மாநில முதல்வர்கள் கூட இந்த திரைப்படத்தை வரவேற்காத நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இந்த படக்குழுவுக்கு தொடர்ந்து தன் ஆதரவை வழங்கி வருகிறார்.
கொல்கத்தாவில் தனியார் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மம்தா பானர்ஜி, பத்மாவதி திரைப்படத்தை வேறு எந்த மாநிலத்திலும் அவர்களால் (பன்சாலி மற்றும் தயாரிப்பாளர்) வெளியிட முடியவில்லை என்றால், எங்கள் மாநிலத்தில் அதை வெளியிடுவதற்கான சிறப்பு நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்வோம். அதை நாங்கள் பார்த்துக்கொள்வோம். இதனால் மேற்கு வங்காளம் மகிழ்ச்சியும், பெருமையும் அடையும். பன்சாலி மற்றும் அவரது பத்மாவதி படக்குழுவினரை எங்கள் மாநிலத்தில் வரவேற்போம் என கூறிஉள்ளார். பல்வேறு மாநிலங்கள் தடை விதித்து உள்ள நிலையில் மேற்கு வங்காளம் வரவேற்கிறதா? என்ற கேள்விக்கு மம்தா பானர்ஜி பதிலளித்து உள்ளார்.
மம்தா பானர்ஜி டுவிட்டரில் ஏற்கனவே வெளியிட்ட செய்தியில், பத்மாவதி சர்ச்சைகள் வெறும் துரதிஷ்டவசம் மட்டும் கிடையாது, கருத்து சுதந்திரத்தை அழிக்க ஒரு அரசியல் கட்சியின் கணக்கிடப்பட்ட திட்டம். இந்த சூப்பர் நெருக்கடிநிலைக்கு நாங்கள் கண்டனம் தெரிவிக்கிறோம். சினிமா துறையில் இருக்கும் அனைவரும் ஒன்றாக வேண்டும், ஒரே குரலில் போராட வேண்டும் என கூறியிருந்தார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*