பன்னீரை ஒதுக்கி ஓரம் கட்டிய எடப்பாடி பழனிசாமி…!

ஆர்.கே நகர் என்பது திமுகவுக்கு வெகுமதி மிக்க யுத்தம்…!

ஆடம்பரவாதி இசக்கிமுத்துவும் உத்தமர் அன்புச் செழியனும்…!
அசோக் குமார் மரணம்: விஜய் ஆண்டனிக்கு பதிலடி கொடுத்த கரு பழனியப்பன்

’பத்மாவதி’ படக்குழுவை வரவேற்கிறார் மம்தா பானர்ஜி..!
இரட்டை இலை சின்னம் தங்கள் அணிக்கு கிடைத்துள்ள நிலையில் மதுரை முப்பெரும் விழாவில் பன்னீர்செல்வத்தை எடப்பாடி அணியினர் புறக்கணித்ததால் அவருடைய ஆதரவாளர்கள் மதுரையில் நடைபெறும் அதிமுகவின் முப்பெரும் விழாவை புறக்கணித்துள்ளனர்.

ஜெயலலிதா பிறந்த நாள் விழா, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா, இரட்டை இலை மீட்பு நாள் என்று அதிமுக இதை முப்பெரும் விழாவாக கொண்டாடுகிறது. முப்பெரும் விழா என்றால் நூறடி கம்பத்தில் அதிமுக கொடியை ஏற்றுவதுதான் முப்பெரும் விழா. இந்த விழாவையே ரகசியமாக எடப்பாடி பழனிசாமி குழுவினர் வைத்திருந்தனர். இன்று, மதுரை தோப்பூரில் நூறு அடிய உயர கொடிக்கம்பத்தில் அதிமுக கொடியை பழனிசாமி ஏற்றி வைத்தார்.இந்த விழாவுக்கு திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ. ஏ.கே. போஸ் ஏற்பாடு செய்து இருந்தார்.
இன்று காலை திடீரென ஒரு கல்வெட்டை வைத்தனர். அதில் பன்னீர்செல்வத்தின் பெயரே இல்லை. அவருக்கு இந்த விழாவுக்கு அழைப்பும் விடுக்கப்படவில்லை. அது போல பல நிகழ்வுகளிலும் பன்னீர்செல்வத்தை புறக்கணிக்கும் எடப்பாடி பழனிசாமி ஆர்.கே.நகரில் தனது அணியைச் சேர்ந்த ஒருவரை வேட்பாளராக்க நினைக்கிறார்.
பன்னீர்செல்வமோ மீண்டும் மதுசூதனனை போட்டியிட வைக்க நினைக்கிறார். ஆர்.கே.நகரில் யாரை நிறுத்துவது என்பது தொடர்பாக அதிமுக எந்த ஒரு முடிவுக்கும் வராத நிலையில், பாஜக தன் வேட்பாளரை இன்று அறிவிக்கும் என்று தெரிகிறது.ஆனால் இப்போதைக்கு பன்னீர்செல்வம் இன்னொரு தர்ம யுத்தத்தை துவங்க வாய்ப்பில்லை. பாஜகவின் அறிவுரைகளோடு தன் அரசியல் பயணத்தை தொடர்பும் பன்னீர்செல்வம் பாஜக மீது அதிருப்தியாக இருப்பதாக கூறப்படுகிறது.

அன்பு செழியன்: கந்து வட்டி மாஃபியாவை பாதுகாக்கும் அமைச்சர்..!

‘உத்தமர் அன்பு செழியன்’:இயக்குநர் சீனு ராமசாமி சான்றிதழ்..!

அஜித்தை மிரட்டிய அன்புசெழியன்: சுசீந்திரன் கடிதம்

சித்தரவதை, பாலியல் கொடுமை…பதற வைக்கும் அசோக்குமாரின் மரண வாக்குமூலம்…!

‘அழகி’ பட்டங்களும் கார்ப்பரேட் போதையும்: -ஆர்த்தி..!

இந்தியாவின் முத்தலாக் முறை: அதை எதிர்த்து போராடிய 5 பெண்கள்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*