‘பத்மாவதி’ படத்துக்கு ஆதரவாக படப்பிடிப்புகள் நிறுத்தம்

’பத்மாவதி’ படக்குழுவை வரவேற்கிறார் மம்தா பானர்ஜி..!

இந்துத்துவர்கள் ஏன் எதிர்க்கிறார்கள் ‘பத்மாவதி’ படத்தை?

ராஜபுத்திரர்கள் வரலாற்றை தவறாக சித்தரிக்கிறது என ‘பத்மாவதி’ படத்துக்கு எழுந்துவரும் எதிர்ப்புகள் திரையுலகத்தினரை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. அதன் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி, நடிகை தீபிகா படுகோனே உயிருக்கு விலை பேசும் அளவுக்கு இந்த பிரச்சனை மோசமாகி உள்ளது. அலாவுதீன் கில்ஜி கதாபாத்திரத்துக்கும், ராணி பத்மாவதி கதாபாத்திரத்துக்கும் காதல் காட்சிகள் இருக்கிறது, அது வரலாற்றை தவறாக சித்தரிக்கும் என்பதே ராஜ்புத் அமைப்பினரின் வாதமாக இருந்தது. ஆனால் அப்படிப்பட்ட காட்சிகளே படத்தில் இல்லை என தயாரிப்பாளர்கள் குழு உறுதி அளித்தும் இந்தப் பிரச்சனையில் இருந்து ராஜ்புத் அமைப்பினர் விலகவில்லை. ‘பத்மாவதி’ படத்தை வெளியிட விடாமல் தடுப்பதே அவர்களின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. இதே நிலை நீடித்தால் இந்தியாவில் யாரும் சுதந்திரமாக படமெடுக்க முடியாத சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்நிலையில் இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இந்திய திரைப்பட தொலைக்காட்சி இயக்குனர்கள் சங்கம் இன்று 15 நிமிடம் அனைத்து திரைப்படங்களின் படப்பிடிப்புகளை 15 நிமிடம் நிறுத்தி வைத்திருக்கின்றனர். அதன்படி மாலை 4.15 மணி முதல் 4.30 வரை படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டது. இதுகுறித்து அதன் ஒருங்கிணைப்பாளர் அசோக் பண்டிட், “பத்மாவதி படத்துக்கு வரும் எதிர்ப்பை பார்க்கும்போது நாம் ஜனநாயக நாட்டில்தான் வாழ்கிறோமா என்ற சந்தேகம் எழுகிறது. நமது கருத்துரிமையை நிலைநாட்டவும், மிரட்டல்களுக்கு அஞ்ச மாட்டோம் எனவும் தெரிவிக்கவே இன்று படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது” என தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*