அதிமுக ஆட்சி மன்றக் குழு மோதல்: என்ன நடந்தது?

“எனக்கு சுதந்திரம் வேண்டும்” நீதிமன்றத்தில் ஒலித்த ஹாதியாவின் குரல்…!

மாமல்லபுரத்தில் ஆளுநர் ஆய்வு..!

ஆர்.கே.நகர் வேட்பாளர் மதுசூதனனுக்கு எதிர்ப்பு: அதிமுக கூட்டம் முடிந்தது…!

“தமிழன் கொடுத்தால் கந்து வட்டியா?” அன்பு செழியனுக்காக கொதிக்கும் சீமான்..!

மருத்துவ சோதனைகளுக்காக சிங்கப்பூர் செல்கிறார் விஜயகாந்த்..!

“நான் கட்டாயப்படுத்தப்பட வில்லை:கணவருடன் வாழ விரும்புகிறேன்”- ஹாதியா..!

’பத்மாவதி’ படக்குழுவை வரவேற்கிறார் மம்தா பானர்ஜி..!
பாஜக மேற்பார்வையில் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற பன்னீர்செல்வம் மீண்டும் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்தார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வேட்பாளர் யார் என்பது பற்றி அதிமுக ஆட்சி மன்றக் குழு முடிவு செய்யும் என்று ஒபிஎஸ்-இபிஎஸ் குழுவினர் கூறி வந்த நிலையில், இன்று கூடிய அதிமுக உயர்மட்டக் குழுவில் மதுசூதனனை ஆர்.கே.நகர் வேட்பாளராக நிறுத்த கடும் எதிர்ப்பு உருவானது. குறிப்பாக வட சென்னை அமைச்சர் ஜெயக்குமார் ஆதரவாளர்களும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களும் மதுசூதனனை நிறுத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், ஆட்சி மன்றக் குழு பலவீனமாக இருக்கிறது. ஆகவே ஆட்சி மன்றக் குழுவை வரையறுத்து விட்டு போட்டியிட விரும்புகிறவர்களிடம் விண்ணப்பிக்க கோருவோம் விண்ணப்பிக்கிறவர்களின் விண்ணப்பங்களை ஆலோசித்து அதிலிருந்து வேட்பாளரை அறிவிப்போம் என்று எடப்பாடி பழனிசாமி குழுவினர் அறிவித்தனர்.
இன்று நடந்து முடிந்த அதிமுகவின் உயர்மட்டக் கமிட்டிக் கூட்டத்தில் பன்னீர்செல்வத்தால் எதுவும் பேச முடியவில்லையாம். அவர்கள் குழுவினர் டம்மியாகவே அமர்ந்திருந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி குழுவினர்தான் தங்களை மேலாதிக்கம் செய்து நிலை நிறுத்திக் கொண்டனர்.
அதிமுக ஆட்சி மன்றக்குழுவில் இதுவரை ஜெயலலிதா, விசாலாட்சி நெடுஞ்செழியன், மதுசூதனன், ஓபிஎஸ், ஜஸ்டின் செல்வராஜ், தமிழ்மகன் உசேன், வேணுகோபால் என ஏழு பேர் இருந்தனர். ஆட்சிமன்றக்குழுதான் முக்கிய முடிவுகளை எடுக்கும். இதில் ஜெயலலிதாவும், விசாலாட்சி நெடுஞ்செழியனும் இறந்து விட்டதால் வெறும் 5 பேரைக் கொண்ட அணியாகவே இவர்கள் செயல்பட்டு வந்தனர்.
இதற்கிடையில் பன்னீர்செல்வம் பிரிந்ததும் ஒரு ஆட்சி மன்றக் குழுவை உருவாக்கினார். ஒபிஎஸ்.இபிஎஸ் அணியுடன் இணைந்ததும் அதுவும் கலைந்தது. பின்னர் இருவரும் இணைந்து ஒருங்கிணைப்புக் குழுவை அமைப்பது என்று பொதுக்குழுவில் முடிவு செய்தனர். இன்று நடந்த கூட்டத்தில் ஒருங்கிணைப்புக் குழுவா, ஆட்சிமன்ற குழுவா என்ற விவாதங்கள் நடந்தது. ஒருவழியாக ஆட்சிமன்றக் குழு கட்சியை வழி நடத்தும் என்று முடிவு செய்த பின்னர். ஆட்சி மன்றக் குழுவில் காலியாக இருக்கும் இரு பதவிகளுக்கு யாரை நியமிப்பது என்ற விவாதம் துவங்கியதும் முதல்வர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமி தாமாகவே ஆட்சி மன்றக் குழுவிற்குள் வந்து விடுவார் என்பதால். அந்த இன்னொரு நபர் யார் என்ற விவாதம் வந்த போது ஒபிஎஸ் அணி சார்பில் கே.பி. முனுசாமி பெயரும் , எடப்பாடி பழனிசாமி குழுவின் சார்பில் வைத்தியலிங்கம் பெயரும் கூறப்பட்டது. இது கூட்டத்தில் கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்தியது. இரு அணிகளுக்கும் இடையே மோதல் சூழல் உருவாக ஒபிஎஸ்-இபிஎஸ் தலையிட்டு அமைதிப்படுத்தியிருக்கிறார்கள். பின்னர் கே.பி.முனுசாமியையும், வைத்தியலிங்கத்தையும் இணைப்பது என்று முடிவெடுக்கப்பட்டது.ஆனால் தன் அணியை பலமாக்க எடப்பாடி பழனிசாமி மேலும் ஒருவரை உள்ளே நுழைத்தார் முன்னாள் அமைச்சர் வளர்மதியை தன் அணி சார்பில் ஆட்சி மன்றக் குழுவுக்குள் நுழைத்தார். இதற்கு பன்னீர்செல்வம் அணியினர் எதிர்ப்பு தெரிவித்தாலும் அதை யாரும் கண்டு கொள்ளவில்லை. ஆக மொத்தம் இதுவரை 7 பேர் கொண்ட அதிமுக ஆட்சி மன்றக் குழு இப்போது 9 பேராக மாறியுள்ளது.1.ஓ.பன்னீர்செல்வம்,2. மதுசூதனன்,3.தமிழ்மகன் உசேன், 4.ஜஸ்டின் செல்வராஜ், 5.வேணுகோபால். 6.எடப்பாடி பழனிசாமி, 7.பா.வளர்மதி, 8. கே.பி.முனுசாமி 9. வைத்தியலிங்கம் இந்தக் குழுவில் எடப்பாடி பழனிசாமியின் கையே ஓங்கியுள்ளது.
ஒருங்கிணைப்புக் குழு அமைப்போம் என்று சொல்லி விட்டு இப்போது ஆட்சி மன்றக் குழுவை அமைத்து அதிலும் தன்னை டம்மியாக்கி விட்டதோடு, ஆர்.கே.நகர் தொகுதியை தனது ஆதரவாளர்களுக்கு வழங்காமல் எடப்பாடி பழனிசாமி அணி குடைச்சல் கொடுத்து வருவதால், இன்றே மோதல் சூழல் எழுந்தது. நாளை மறுநாள் 29-ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட இருக்கிறது.

’பத்மாவதி’ படக்குழுவை வரவேற்கிறார் மம்தா பானர்ஜி..!

அசோக் குமார் மரணம்: விஜய் ஆண்டனிக்கு பதிலடி கொடுத்த கரு பழனியப்பன்

எந்த டெட் பாடியை வைத்து ஓட்டுக் கேட்பார் பன்னீர்செல்வம்?

டிச -21 -ம் தேதி ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்..!

இனி அதிமுகவின் பயணம்?

இரட்டை இலை:தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை பாரபட்சமானது…எப்படி?

அன்பு செழியன்: கந்து வட்டி மாஃபியாவை பாதுகாக்கும் அமைச்சர்..!

‘உத்தமர் அன்பு செழியன்’:இயக்குநர் சீனு ராமசாமி சான்றிதழ்..!

அஜித்தை மிரட்டிய அன்புசெழியன்: சுசீந்திரன் கடிதம்

சித்தரவதை, பாலியல் கொடுமை…பதற வைக்கும் அசோக்குமாரின் மரண வாக்குமூலம்…!

‘அழகி’ பட்டங்களும் கார்ப்பரேட் போதையும்: -ஆர்த்தி..!

இந்தியாவின் முத்தலாக் முறை: அதை எதிர்த்து போராடிய 5 பெண்கள்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*