“எனக்கு சுதந்திரம் வேண்டும்” நீதிமன்றத்தில் ஒலித்த ஹாதியாவின் குரல்…!

மாமல்லபுரத்தில் ஆளுநர் ஆய்வு..!

ஆர்.கே.நகர் வேட்பாளர் மதுசூதனனுக்கு எதிர்ப்பு: அதிமுக கூட்டம் முடிந்தது…!

Voice of Hadiya:video

“நான் கட்டாயப்படுத்தப்பட வில்லை:கணவருடன் வாழ விரும்புகிறேன்”- ஹாதியா..!

ஹாதியாவின் வழக்கை ஒத்தி வைத்திருக்கிறது உச்சநீதிமன்றம். இன்று உச்சநீதிமன்றத்தில் ஆஜரான ஹாதியா துணிச்சலுடன் தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து “எனக்கு சுதந்திரம் வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

ஹாதியாவின் கதை இதுதான்…

இந்தியா நாடே இந்த தீர்ப்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. மத நல்லிணக்கம் பேணுகிறவர்களும், பன்மைத்தனமையை பாதுகாப்பதில் அக்கறை உள்ளவர்களும் பதபதப்போடு ஹாதியா வழக்கில் உச்சநீதிமன்றம் என்ன சொல்லப் போகிறது என்பதை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். 24 வயது நிரம்பிய ஒரு பெண்ணின் திருமணம் லவ் ஜிகாத் எனும் பெயரில் கலவரமாக மாற்றப்பட்டதன் பின்னணியில் உச்சநீதிமன்றம் வழங்க இருக்கும் தீர்ப்பு முக்கியமானது.
ஹாதியா வாழ்க்கை ஒரு முன்னோட்டம்
#
கேரளத்தைச் சேர்ந்த அசோகன் என்பவரது மகள் அகிலா. 24 வயது நிரம்பிய ஹாதியா தன் முழு விருப்பப்படி இஸ்லாமிய மதத்தை தழுவி தன் பெயரை ஹாதியா என்று மாற்றிக் கொண்டார்.
#
அபுபக்கர் என்பவரும் அவருடைய மகள்கள் ஜெசீனா மற்றும் பாஸீனா ஆகியோரும் தன் மகளை கடத்தி கட்டாயமாக மதம் மாற்றி கடத்தி வைத்திருப்பதாக ஆட்கொண்டர்வு மனுவை WP(Crl.).No. 25 of 2016 (S) கேரள உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
#
இதனைத் தொடர்ந்து ஜன 9, 2016 அன்று நீதிமன்றத்தில் ஆஜரான ஹாதியா:-
“ சேலத்தில் தன் தங்கியிருந்த போது இஸ்லாமிய மதத்தில் உள்ள ஐந்து வேளை தொழுகை மற்றும் நற்குணங்கள் தன்னை கவர்ந்ததாலும் இஸ்லாம் குறித்த நல்ல எண்ணம் உருவானதாலும் தான் மதம் மாறிக் கொண்டதாகவும், தன்னை யாரும் கடத்தவோ நிர்பந்திக்கவோ இல்லை என்றும் நீதிமன்றத்தில் கூறினார்.
#
ஹாதியாவின் வாக்குமூலத்தை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் அவரது தந்தை அசோகனின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
#
நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து அகில இந்திய முஸ்லீம் சட்ட வாரியத்தின் உறுப்பினரும் மனித உரிமை ஆர்வலருமான திருமதி. சைனபா பாதுகாப்பில் இருந்த ஹாதியாவுக்கும் கேரளாவை சேர்ந்த வளைகுடா நாட்டில் பணியாற்றும் ஷஃபின் ஜஹான் என்ற இளைஞருக்கும் 2016 ஆகஸ்ட் மாதம் திருமணம் நிச்சயக்கப்பட்டது. பின்னர் 19.12.2016 அன்று புத்தூர் ஜும்மா மசூதியில் வைத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
#
மீண்டும் நீதிமன்றத்தை நாடிய ஹாதியாவின் தந்தை அசோகன் “தன்னுடைய மகளை லவ் ஜிகாத் மூலம் மதம் மற்றை ஈராக் , சிரியாவுக்கு அனுப்பி ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்திற்காக சடண்டையிட சதி நடப்பதாக மனுத்தாக்கல் செய்கிறார்,[W.P. (Crl.) No. 297 of 2016 ]. இதனை திரு. சுரேந்திர மோகன். திரு.ஆப்ரஹாம் மேத்தீவ் அடங்கிய அமர்வு நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.
#
21.12.2016 அன்று தன்னுடைய கணவருடன் நீதிமன்றத்தில் ஆஜரான டாக்டர் ஹாதியாவை கண்ட நீதிபதிகள் உடனடியாக அவர் கணவரிடம் இருந்து அவரை பிரித்து ஹாஸ்டலில் அடைக்க உத்தரவிட்டனர். ஹாதியா “தன்னிடம் பாஸ்போர்ட் கூட இல்லை. தான் ஐ.எஸ் இயக்கத்தில் சேர போவதாக கூறுவதில் ஒரு உண்மையும் இல்லை” என்ற ஹாதியாவின் குரலை நீதிமன்றம் கேட்கவில்லை. இவர்கள் செய்து கொண்ட திருமணம் தொடர்பாக போலீஸ் விசாரிக்க உத்தரவிட்டது நீதிமன்றம்.
#
விசாரணை செய்த போலீசார். “இருவரும் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்துள்ளனர். இதில் விதி மீறல் எதுவும் இல்லை” என்று அறிக்கை சமர்ப்பித்தனர்.
#
இதை ஏற்றுக் கொள்ளாத நீதிமன்றம் போலீசை கண்டித்து விட்டு கிரைம் பிராஞ்ச் போலீசாரைக் கொண்டு விசாரிக்க உத்தரவிட்டது. “அவர்கள் டாக்டர் ஹாதியாவின் கணவர் ஷஃபின் ஜஹான் எஸ்.டி.பி.ஐ என்ற முஸ்லீம் கட்சியின் உறுப்பினர் என்றும். இவர் மீது ஒரு கிரிமினல் வழக்கு உள்ளதாகவும் அறிக்கை தாக்கல் செய்தனர்.
#
“கல்லூரி நாட்களில் அரசியல் போராட்டங்களில் ஈடுபட்டதன் காரணமாக தன் மீது வழக்கு பதிந்துள்ளதாகவும். தான் கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்றும் கூறிய ஜாபின் ஜஹானின் வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளாத நீதிமன்றம். 2017 மே மாதம் 24-ஆம் தேதி ஹாதியாவும், ஜாபினும் செய்து கொண்ட திருமணத்தை ரத்து செய்து உத்தரவிட்டதோடு, டாக்டர் ஹாதியாவை அவர் பெற்றோரிடம் ஒப்படைக்கும் படியும் , அவரை வெளியாட்கள் யாரும் சந்திக்க கூடாது என்றும் , அவர் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கும்படியும் சட்டத்திலேயே இல்லாத வினோதமான உத்தரவிட்டது.
#
இதையொட்டி ஹாதியாவின் வீட்டைச் சுற்றி யாரும் நுழைய முடியாத படி பல அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இருவர் மனம் ஒப்பி செய்து கொண்ட திருமணத்தை ரத்து செய்த கேரள உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக ஜாபின் ஜஹான் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
#
ஜாபின் ஜஹானின் மனுவை ஏற்ற நீதிமன்றம் இந்த வழக்கை தேசிய புலனாய்வு ஏஜென்சி [NIA] விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டுள்ளது.இந்த வழக்கில் ஹாதியாவின் கருத்தையும் உச்சநீதிமன்றம் கேட்கும் என்பதால் 27-ஆம் தேதி இன்று ஆஜராகும் படி உத்தரவிட்டிருந்தது.

#

உச்சநீதிமன்றத்தில் ஆஜராக ஹாதியா நேற்று முன் தினம் டெல்லி அழைத்துச் செல்லப்பட்ட போது போலீஸ் கட்டுப்பாட்டையும் மீறி ஊடகங்களை நோக்கி “என்னை யாரும் கட்டுப்படுத்த வில்லை. நான் என் கணவருடன் வாழ விரும்புகிறேன்” என்று  குரல் கொடுத்தார்.

இன்று ஹாதியா வழக்கை மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு விசாரித்தது. நீதிபதி திபக் மிஷ்ரா, சந்திரஜுட் மற்றும் கன்வில்கர் ஆகியோர் தலைமையில் இந்த வழக்கு விசாரணை ஆரம்பமானது, தேசிய புலனாய்வுத்துறை 100 பக்க விசாரணை அறிக்கையை நீதிபதிகளிடம் ஒப்படைத்தனர். அதில் ஹாதியாவை மூளைச் சலவை செய்தே மதம் மாறச் செய்திருக்கிறார்கள் என்பதே முக்கிய காரணமாக முன் வைக்கப்பட்டது.

இதுகுறித்து ஹாதியா கணவரின் வக்கீல் கபில் சிபல், “இது ஹாதியாவின் வாழ்க்கை, அதை முடிவு செய்யும் எல்லா உரிமையும் அவரிடம் இருக்கிறது. கணவனுடன் வாழ்வதா வேண்டாமா என அவர்தான் முடிவு செய்ய வேண்டும்” என தெரிவித்தார். அதற்கு நீதிபதி கன்வில்கர், சாதாரண வழக்குகளில் அதுபோன்று முடிவு எடுக்க அனுமதிக்கலாம். ஆனால் இது விசித்திரமான வழக்கு என கூறினார்.

ஆனால் ஹாதியா கணவனுடன் வாழ வேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருக்கிறார். நீதிபதி சந்திரஜுட், ஹாதியாவிடம் உங்கள் எதிர்காலக் கனவு என்ன என்று கேட்டதற்கு, “எனக்கு சுதந்திரம் வேண்டும்” என்றார்.

மேலும் மாநில நிதியில் உங்கள் படிப்பை தொடர ஆசைப்படுகிறீர்களா என கேட்டதற்கு, “என் செல்வுகளை கவனிக்க என் கணவர் இருக்கிறார். நான் எதற்கு மாநில நிதியில் படிக்க வேண்டும்” என பதிலளித்தார்.  இன்று நீதிமன்றம் கலையும் முன்பும் ஹாதியா, “என் கணவர் தான் எனக்கு பாதுகாப்பாளராக இருக்க வேண்டும். நான் அவருடன் சேர்ந்து இருக்கவே விரும்புகிறேன். கடந்த 11 மாதங்களாக என் மனநிலை பாதிக்கும் அளவு சித்ரவதை அனுபவித்திருக்கிறேன்” என தெரிவித்தார். இறுதியாக அவர் படிப்பை தொடர சிவராஜ் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரிக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது. அக்கல்லூரியின் கல்வித் தலைவர் தான் ஹதியாவுக்கு பாதுகாப்பாளர் எனவும், ஹாதியாவின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவருக்கு துணையாக ஒரு பெண் காவலரை உடன் தங்க அனுமதிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது உயர்நீதிமன்றம். இந்த வழக்கு வருகிற ஜனவரியின்(2018) மூன்றாவது வாரம் விசாரணைக்கு வருகின்றது.

சாதி ஒழிப்புதான் என் சங்கர் சிந்திய ரத்தத்திற்கான நீதி :கவுசல்யா சங்கர்..!

உடுமை கவுசல்யாவும் மெரினா ஜூலியும்

“தமிழன் கொடுத்தால் கந்து வட்டியா?” அன்பு செழியனுக்காக கொதிக்கும் சீமான்..!

மருத்துவ சோதனைகளுக்காக சிங்கப்பூர் செல்கிறார் விஜயகாந்த்..!

’பத்மாவதி’ படக்குழுவை வரவேற்கிறார் மம்தா பானர்ஜி..!

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*