கைவிடப்படுகிறதா சேகர் ரெட்டி வழக்கு?

‘ஜெ’ கலந்து கொண்ட அருமனை கிறிஸ்துமஸ் விழாவில் தினகரன்…!

“எனக்கு சுதந்திரம் வேண்டும்” நீதிமன்றத்தில் ஒலித்த ஹாதியாவின் குரல்…!

அமெரிக்க ஆயுத கப்பல் 35 பேரும் விடுதலை…!
பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரரும், மணல் குவாரி அதிபருமான சேகர் ரெட்டி வீட்டில் இருந்து 34 கோடி ரூபாய் அளவில் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டது. இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பழைய ரூபாய் நோட்டுகளை புதிய நோட்டுகளாக மாற்றிக் கொடுக்கும் வேலையை சில அதிமுக பிரமுகர்களுக்காக சேகர் ரெட்டி செய்து வந்ததோடு ஆண்டுக்கு 400 கோடி ரூபாய்க்கு மேல் மணம் அள்ளும் தொழிலில் வர்த்தகமும் செய்து வந்தார். சிபிஐ சேகர் ரெட்டி மீது வழக்கு தொடர்ந்த நிலையில்,
சேகர் ரெட்டி இல்லத்தில் கைப்பற்றப்பட்ட 34 கோடி ரூபாய் புதிய நோட்டுகளுக்கான விபரத்தை ரிசர்வ் வங்கி வருமானவரித்துறைக்கோ, சிபிஐக்கோ கொடுக்கவில்லை. எனவே இந்த வழக்கு கைவிடப்படும் சூழல் எழுந்த நிலையில், அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சேகர் ரெட்டி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி எம்.எஸ் ரமேஷ் வழக்கு விசாரணையில் இருந்து பின்வாங்கி வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றுமாறு தலைமை நீதிபதிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். ”என்ன காரணத்திற்காக நீதிபதி பின் வாங்கினார். பின்வாங்கும் அளவுக்கு நீதிபதிக்கு என்ன அழுத்தங்கள் இருந்தது” என்பது பற்றிய கேள்விகள் இருந்த நிலையில், மேலும் மேலும் சேகர் ரெட்டி மீதான வழக்கு பலவீனமடைய துவங்கிய நிலையில்,
தமிழ் இந்து நாளிதழுக்கு பேசிய அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர்:-
“சேகர் ரெட்டி மீதான வழக்கை அமலாக்கத்துறை தொடர்வதற்கு ரிசர்வ் வங்கியின் உதவி தேவையில்லை. சேகர் ரெட்டியிடம் இருந்துதான் பணம், தங்கத்தை பறிமுதல் செய்து இருக்கிறோம்.

இதற்கு எங்களிடம் ஆதாரம் உள்ளது. சிபிஐ பணியும், அமலாக்கத் துறை பணியும் மாறுபாடுகள் உடையவை. ஒரு நபரை சிபிஐ கைது செய்தால் அந்த நபர்தான் குற்றவாளி என்பதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு சிபிஐக்கு உள்ளது.

ஆனால், அமலாக்கத் துறை ஒரு நபரை கைது செய்தால் அந்த நபர்தான் குற்றவாளி என்பதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இல்லை. அதே நேரத்தில் தான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு சம்பந்தப்பட்ட நபருக்கு உள்ளது. அப்படி அவர் நிரூபித்தால் மட்டுமே அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவார். எனவே, தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு சேகர் ரெட்டிக்கு உள்ளது.

அவ்வாறு நிரூபிக்க சொத்துக்களுக்கான ஆவணங்களை முறையாக சமர்பித்தால் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டுள்ள சொத்துக்களை அவரிடம் திருப்பிக் கொடுக்க முடியும். சேகர் ரெட்டியிடம் இருந்து ரூ.34 கோடி புதிய 2 ஆயிரம் நோட்டுகள் மற்றும் 80 கிலோ தங்கத்தை அமலாக்கத் துறை முடக்கி வைத்துள்ளது” என்றார்.

“தமிழன் கொடுத்தால் கந்து வட்டியா?” அன்பு செழியனுக்காக கொதிக்கும் சீமான்..!

மருத்துவ சோதனைகளுக்காக சிங்கப்பூர் செல்கிறார் விஜயகாந்த்..!

“நான் கட்டாயப்படுத்தப்பட வில்லை:கணவருடன் வாழ விரும்புகிறேன்”- ஹாதியா..!

’பத்மாவதி’ படக்குழுவை வரவேற்கிறார் மம்தா பானர்ஜி..!

அன்பு செழியன்: கந்து வட்டி மாஃபியாவை பாதுகாக்கும் அமைச்சர்..!

‘உத்தமர் அன்பு செழியன்’:இயக்குநர் சீனு ராமசாமி சான்றிதழ்..!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*