அகிலா என்ற பெயரை மட்டும் அங்கீகரித்த சேலம் மருத்துவக்கல்லூரி..!

அருகில் வந்த ரசிகரை தள்ளி விட்ட கமல்…! (#Viral_video)

ஆர்.கே.நகரில் பாலகங்காவை களமிரக்கும் எடப்பாடி பழனிசாமி:தர்மயுத்தம் Part -2
அதிமுக ஆட்சி மன்றக் குழு மோதல்: என்ன நடந்தது?

அதிமுக கொடியை பயன்படுத்துவோம் :தினகரன்

கைவிடப்படுகிறதா சேகர் ரெட்டி வழக்கு?

சாத்தாவட்டம் ஆனந்தன் மரணம் : சிபிஐ விசாரணை கோருகிறது விடுதலைச் சிறுத்தைகள்…!
உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஹாதியா சேலத்தில் உள்ள சிவராஜ் ஹோமியோபதி கல்லூரியில் சேர்ந்து நின்று போன தன் கல்வியை தொடர முடிவு செய்துள்ள நிலையில் அவர மதம் மாறுவதற்கு முந்தைய பெயரான அகிலா என்பதையே மருத்துவக்கல்லூரி ஏற்றுக் கொண்டுள்ளது ஹாதியா என்ற பெயர் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
உச்சநீதிமன்றத்தில் ஆஜரான ஹாதியா நீதிமன்ற உத்தரவால் நேற்று கோவை வந்து அங்கிருந்து சேலத்திற்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார். சேலம் ஆயுதம் தாங்கிய போலீசார் ஏதோ தீவிரவாதிகளை சுற்றி வளைப்பது போல கல்லூரியைச் சுற்றி அசாதாரணமான சூழல் போல நின்ற நிலையில் ஹாதியா கல்லூரிக்குள் சென்றார்.சிவராஜ் கல்லூரியில் அவரை ஆசிரியர்களும் மாணவ- மாணவிகளும் வரவேற்றனர்.
தன் கணவர் ஜாபின் தான் தனது கார்டியன் என்று நீதிமன்றத்தில் ஹாதியா தெரிவித்த போதும். “மனைவிக்கு கணவன் கார்டியனாக முடியாது” என்று அவரது கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம் மருத்துவக்கல்லூரியின் டீனை அவரது கார்டியனாக நியமித்தது. இது பற்றி சிவராஜ் ஹோமியோபதி கல்லூரியின் டீன் டாக்டர். கண்ணன் கூறுகையில் , “எங்கள் கல்லூரியில் அவர் மருத்துவக்கல்விக்கு சேர்ந்த போது அகிலா அசோகன் என்ற பெயரில்தான் சேர்ந்தார்.அதே பெயரில்தான் அவர் படிப்பை தொடர்வார். அவருக்கு எந்த சிறப்பு வசதிகளும் செய்து கொடுக்கப்பட மாட்டாது” என்றார்.
கேரள நீதிமன்றத்தில் ஹாதியா-ஜாபின் திருமணம் ரத்து செய்யப்பட்டால் கூட ஹாதியா மதம் மாறியதை ரத்து செய்யவில்லை. அவருடைய பெயரையும் ஹாதியா என்றே பதிவு செய்துள்ள நிலையில் சேலம் மருத்துவமனை டீன் பழைய பெயரான அகிலா எனும் பெயரில்தான் கல்வியை தொடருவார் என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*