செவிலியர்கள் போராட்டத்தில் ஜூலி: போலீஸ் மறுப்பு

அகிலா என்ற பெயரை மட்டும் அங்கீகரித்த சேலம் மருத்துவக்கல்லூரி..!

“எனக்கு சுதந்திரம் வேண்டும்” நீதிமன்றத்தில் ஒலித்த ஹாதியாவின் குரல்…!

Voice of Hadiya:video

“நான் கட்டாயப்படுத்தப்பட வில்லை:கணவருடன் வாழ விரும்புகிறேன்”- ஹாதியா..!

செவிலியர்கள் போராட்டத்தில் கலந்துகொள்ள டிஎம்எஸ் வளாகம் சென்ற ஜூலிக்கு மறுப்பு தெரிவித்துள்ளது காவல்துறை.

பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று சுகாதரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்ட ஒரு தரப்பினர் போராட்டத்தை வாபஸ் பெற்று பணிக்கு திரும்பினர். ஆனால் மற்றொரு தரப்பினர் பணி நிரந்தரம் செய்வதற்கான அரசாணை 191-ஐ வெளியிடும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என தொடர்ந்து போராடி வருகிறார்கள். இன்று முதல் உண்ணாவிரத போராட்டத்தை துவங்கியிருக்கின்றனர். இந்நிலையில் ‘ஜல்லிக்கட்டு’ மற்றும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் புகழடைந்த ஜூலி போராட்டத்தில் கலந்துகொள்ள வந்திருக்கிறார். அடிப்படையில் செவிலியரான ஜூலிக்கு போராட்டத்தில் கலந்துகொள்ள மறுப்பு தெரிவித்திருக்கிறது காவல்துறை.

அங்கே செய்தியாளர்களை சந்தித்த ஜூலி, “கூலி வேலை செய்பவர்களுக்கு கூட தினமும் 500 ரூபாய் கிடைக்கிறது. ஆனால் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்யும் செவிலியர்களுக்கு வெறும் 250 ரூபாய் தான் கொடுக்கிறார்கள். ஒரு சராசரி மனிதனுக்கு இந்த ஊதியம் மிகவும் குறைவு” என்று தெரிவித்துள்ளார்.

‘ஜல்லிக்கட்டு’ போராட்டத்தின் மூலம் புகழ்பெற்ற ஜூலி, ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்று பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறார். எனினும் அவர் நேசிக்கும் செவிலியர் பணிக்காக போராட வந்திருப்பது பாராட்டுக்குரியது.

அருகில் வந்த ரசிகரை தள்ளி விட்ட கமல்…! (#Viral_video)

ஆர்.கே.நகரில் பாலகங்காவை களமிரக்கும் எடப்பாடி பழனிசாமி:தர்மயுத்தம் Part -2
அதிமுக ஆட்சி மன்றக் குழு மோதல்: என்ன நடந்தது?

அதிமுக கொடியை பயன்படுத்துவோம் :தினகரன்

கைவிடப்படுகிறதா சேகர் ரெட்டி வழக்கு?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*