செவிலியர் போராட்டம் முடித்து வைக்கப்பட்ட கதை:அ.மார்க்ஸ்

மிரட்டி பணிய வைக்கப்பட்ட செவிலியர்கள்…!

தமிழக அரசு பற்றி கார்ட்டூன் போட்டியை அறிவித்தது பச்சைத் தமிழகம்..!

அசோக் குமார் மரணம்: சீமான் மாற்றுக் கருத்து?

அகிலா என்ற பெயரை மட்டும் அங்கீகரித்த சேலம் மருத்துவக்கல்லூரி..!

“எனக்கு சுதந்திரம் வேண்டும்” நீதிமன்றத்தில் ஒலித்த ஹாதியாவின் குரல்…!

சதீஷ், சிரிலா இருவரும் மாலை 6 மணி வாக்கில் விடுதலை செய்யப்பட்டனர். செவிலியர் அமர்வுப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த வளாகம் மூடப்பட்டு ஏகப்பட்ட போலீஸ் நிறுத்தி வைக்கப்பட்டு யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. நான் உள்ளே போக வேண்டும் எனக் கேட்டபோது ஏற்கனவே மனித உரிமை அமைப்பினர் உள்ளே அனுமதிக்கப்பட்டுள்:ளனர். அவர்கள் வந்த பின் நீங்கள் போகலாம் என வெளியிலேயே நிறுத்தப்பட்டேன்.

 

சற்று நேரத்திற்குப் பின் நீதிபதி ஹரி பரந்தாமன் வந்தார். உள்ளே சென்று அனுமதி கேட்டு வந்து அவர் அனுமதிக்கப்பட்டார். சில நிமிடங்களில் கேட்டும் திறக்ப்பட்டது. நீதிமன்றத் தீர்ப்பை வழக்குரைஞர் ஒருவர் ஹரி பரந்தாமன், தோழர் தியாகு ஆகியோருக்கு விளக்கிக் கொண்டிருந்தார். பிறகு ஹரி பரந்தாமன் அவர்கள் மைக்கில் பேசினார். போராட்டத்தைப் பாராட்டிப் பேசியபின், “இப்போது நீதிமன்றம் தலையிட்டுள்ளது ஒரு வகையில் நல்லது. ஒரு மாதத்திற்குள் உங்களிடம் பேசி நல்ல முடிவெடுக்க வேண்டும் என அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உங்களில் யார் மீதும் நடவடிக்கை எடுக்கக்கூடாது எனவும் நாளை நீங்கள் வழக்கம்போலப் பணியில் சேரலாம் எனவும் உத்தரவிட்டுள்ளது.எனவே காலைக்குள் சென்று பணியில் சேருங்கள்.

ஒரு மாதத்திற்குள் பிரச்சினை தீரவில்லை எனில் நீதிமன்றத்தை அணுக நமக்கு இப்போது ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது” எனக்கூறினார். போராட்டம் இப்போதைக்கு முடிந்துள்ளது. கடந்த மூன்று நாட்களாக அவர்களோடு கூடவே இருந்துப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு உறுதுணையாக இருந்த டாக்டர் ரவீந்திரநாத் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்துவிட்டுச் சற்று மூன் வீடு திரும்பினேன்.

 

தமிழகத்தில் செவிலியர் நடத்திய இந்தப் போராட்டம். ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைப்போல சமீபத்தில் நடைபெற்ற ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு நிகழ்வு. ஒரு நிரந்தர கடை மட்ட அரசு ஊழியரின் ஊதியத்தைக் காட்டிலும் நான்கில் ஒரு பங்கு அளவே உள்ள (ரூ 7500) ஊதியத்தில் இரண்டு ஆண்டுகளாக உயிர் காக்கும் பணியில் உள்ளவர்கள் இந்த இளம் செவிலியர்கள். இத்தனைக்கும் மூன்றரை ஆண்டு காலம் படித்துப் பயிற்சி பெற்றவர்கள் அவர்கள். வால்ஸ்ட்ரீட் அமர்வுபோல இன்று அரசு அலுவலகம் ஒன்றை முற்றுகை இட்டு, டாய்லெட்டை மூடும் அளவிற்குக் கேவலமான ஒரு அரசை எதிர்த்து அவர்கள் நடத்திய போராட்டத்தை வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டம் எனச் சொல்வது மிகையான கூற்று அல்ல. நேற்று ஒரு கட்டைப் பஞ்சாயத்து பண்ணி அதிமுக அரசின் நலவாழ்வு அமைச்சர் 90 சதம் கோரிக்கைகளை நிறைவேற்றப் போகிறோம் எனக் கதை விட்டார். இன்று தீர்ப்பளிக்கப்பட்ட பொதுநல வழக்கும் ஒரு “ஏற்பாடு” தான். வழக்கமாக அரசுக்கு எதிரான போராட்டடங்களுக்கு எதிராக பொது நல வழக்குப் போடும் ‘செட் அப்’ சார்பாகத்தான் இந்த வழக்கு போடப்பட்டது. இன்றைய கட்டைப் பஞ்சாயத்தை நீதிமன்றம் பண்ணியுள்ளது.

நீதி மன்றத்தின் வாக்குறுதியை எப்படி நம்ப முடியும்? நீதிபதிகள் நியமனத்தைச் செய்யாமல் இந்த அரசு பழிவாங்குவதாக ஒரு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி இரண்டு ஆண்டுகளுக்கு முன் பிரதமர் நரேந்திர மோடியின் முன் கண்ணீர் விட்டு அழவில்லையா? தனது ஆணைகளை அரசு நிறைவேற்றுவதில்லை எனப் பல முறை நீதிமன்றங்கள் புலம்பவில்லையா? எந்த அடிப்படையில் நீதிமன்றத் தலையீட்டை நம்பிப் பின்வாங்க முடியும்? Sanctioned Posts களில் நீங்கள் பணியமர்த்தப்பட்டவர்கள் நீங்கள் எனவும் நீதிபதி ஹரிபரந்தாமன் அவர்கள் குறிப்பிட்டார். அதுவும் கூட இப்போதெல்லாம் மதிக்கப்படுவதில்லை. அரசுகள் விரும்பினால் மட்டுமே ஒரு பணியை நிரந்தரமாக்க முடியும். நிரந்தரப் பணியிடங்களாக இருந்தாலும் அவற்றில் தற்காலிகமான, ஒப்பந்த அடிப்படையிலான, சில நேரங்களில் appointment order கூட இல்லாமல் (கல்லூரிகளில் அப்படி நடக்கிறது) பணி அமர்த்தி, வேண்டும்போது வெளியேற்றும் காலம் இது. # # # அந்த இளம் செவிலியர்கள் நாளை காலை பணி இடங்களில் கையொப்பமிட அவசரம் அவசரமாக பஸ்சைப் பிடிக்க ஓடியபோது ஏனோ என் நெஞ்சு கனத்திருந்தது.

Voice of Hadiya:video

“நான் கட்டாயப்படுத்தப்பட வில்லை:கணவருடன் வாழ விரும்புகிறேன்”- ஹாதியா..!

அருகில் வந்த ரசிகரை தள்ளி விட்ட கமல்…! (#Viral_video)

ஆர்.கே.நகரில் பாலகங்காவை களமிரக்கும் எடப்பாடி பழனிசாமி:தர்மயுத்தம் Part -2
அதிமுக ஆட்சி மன்றக் குழு மோதல்: என்ன நடந்தது?

அதிமுக கொடியை பயன்படுத்துவோம் :தினகரன்

கைவிடப்படுகிறதா சேகர் ரெட்டி வழக்கு?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*