‘ஓகி’ தாண்டவம்: படங்கள்! வானிலை ஆய்வு மையம் ஏன் எச்சரிக்கவில்லை?

‘ஓகி’ புயல் – “நாம சொன்னா திட்டுவாங்க:அவங்களும் சொல்ல மாட்டாங்க”: தமிழ்நாடு வெதர் மேன் ஆதங்கம்…!

பாதியில் வெளியேறிய பாலகங்கா:மதுவை தோற்கடித்த திரளும் அதிமுக..!

எதிர்ப்பு : ஆர்.கே.நகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் மதுசூதனன்..!

 

ஒகி புயல் பாதிப்பால் குமரி மாவட்டம் முழுமையாக தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. மின்சாரம், போக்குவரத்து அடியோடு முடங்கியுள்ள நிலையில், அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குமரி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பலத்த சூறாவாளிக்காற்றுடன் மழை பெய்து வருகிறது. பொதுவாக மழை பெய்யும் என்று சொன்ன வானிலை ஆய்வு மையம் குமரி மாவட்டத்திற்கு அருகில் உருவாகி இருக்கும் ஓகி புயல் பற்றி வாயே திறக்கவில்லை. இந்நிலையில், கடந்த பல மணி நேரமாக வீசிய சூறாவளிக்காற்றாலும் மழையாலும் குமரி மாவட்டம் ஸ்தம்பித்துள்ளது,


சாலை நெடுகிலும் மரங்கள் வேரோடு சாய்ந்து கிடப்பதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. ஓகி புயல் காரணமாக கன்னியாகுமரி, நாகர்கோவில் ரயில் நிலையங்களில் இருந்து அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. பல இடங்களில் ரயில்வே தண்டவாளங்கள் சேதமாகி மரங்கள் வேரோடு சாய்ந்து கிடப்பதால் அதை சரி செய்ய சில நாட்கள் ஆகலாம் என்று கூறப்படும் நிலையில், நேற்று வானிலை ஆய்வு மையம் எந்த அறிவிப்பையும் குமரி மாவட்ட மீனவர்களுக்கு விடுக்காத நிலையில் வழக்கம் போல அவர்கள் கடலுக்குச் சென்றனர். ஆனால் அப்படி கடலுக்குச் சென்ற பலர் இன்னும் கரை திருப்பவில்லை என்று அஞ்சப்படுகிறது.

ஆர்.கே.நகர் :இரண்டாம் இடத்திற்கு போட்டியிடும் அதிமுக?

ஆர்.கே.நகரில் பாலகங்காவை களமிரக்கும் எடப்பாடி பழனிசாமி:தர்மயுத்தம் Part -2

செவிலியர் போராட்டம் முடித்து வைக்கப்பட்ட கதை:அ.மார்க்ஸ்

மிரட்டி பணிய வைக்கப்பட்ட செவிலியர்கள்…!

அதிமுக ஆட்சி மன்றக் குழு மோதல்: என்ன நடந்தது?

கைவிடப்படுகிறதா சேகர் ரெட்டி வழக்கு?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*