‘ஓகி’ புயல் – “நாம சொன்னா திட்டுவாங்க:அவங்களும் சொல்ல மாட்டாங்க”: தமிழ்நாடு வெதர் மேன் ஆதங்கம்…!

பாதியில் வெளியேறிய பாலகங்கா:மதுவை தோற்கடித்த திரளும் அதிமுக..!

எதிர்ப்பு : ஆர்.கே.நகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் மதுசூதனன்..!

ஆர்.கே.நகர் :இரண்டாம் இடத்திற்கு போட்டியிடும் அதிமுக?

ஆர்.கே.நகரில் பாலகங்காவை களமிரக்கும் எடப்பாடி பழனிசாமி:தர்மயுத்தம் Part -2

செவிலியர் போராட்டம் முடித்து வைக்கப்பட்ட கதை:அ.மார்க்ஸ்

மிரட்டி பணிய வைக்கப்பட்ட செவிலியர்கள்…!
நேற்று இரவிலிருந்து ஓகி புயல் குமரி மாவட்டத்தை கடுமையாக தாக்கி உள்ளது. இதனால் கடும் சேதம் அம்மாவட்டத்தில் உருவாகி உள்ளதோடு இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கிப் போயுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் மின்சாரம் இல்லை. போக்குவரத்து முற்றாக முடங்கியுள்ள நிலையில், இன்று காலைதான் வானிலை ஆய்வு மையம் ஓகி புயல் உருவாகி உள்ளதை அறிவித்தது. அதன் பின்னர்தான் பலருக்கும் புயல் உருவாகி இருப்பதே தெரியவந்தது. ஓகி புயல் குமரி மாவட்டத்தை பதம் பார்த்து பல மணி நேரம் கழித்து வானிலை ஆய்வு மையம் அறிவித்த நிலையில், இது தொடர்பாக தமிழ் நாடு வெதர் மேன் பிரதீப் ஜான் தன் வருத்தத்தை முகநூலில் பதிவு செய்துள்ளார்.
அவர் தன் பதிவில்,
“கன்னியாகுமரி பகுதியில் ‘ஓகி’ புயலால் பலத்த காற்று வீசுகிறது. கனமழை பெய்கிறது. இது கன்னியாகுமரி பகுதியில் கரையைக் கடக்க வாய்ப்பில்லை. இருப்பினும், யாரும் வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம். பத்திரமாக இருங்கள். மரத்தின் கீழ் நிற்காதீர். குறிப்பாக ரப்பர் மரங்களின் கீழ் நிற்காதீர்கள். அவை வெகு எளிதாக முறிந்துவிழும் தன்மை கொண்டவை.

ரேடாரை கண்காணித்தீர்கள் என்றால் ‘ஓகி’ புயல் எவ்வாறு நகர்கிறது என்பதை உங்களாலும் கணிக்க முடியும். கன்னியாகுமாரிக்கு சமாந்தரமாக பயணித்துக் கொண்டிருக்கிறது. கன்னியாகுமரி பகுதியில் புயல் ஏற்படுவது அரிதினும் அரிதான நிகழ்வு. இப்போதே நல்ல வலுவான நிலையில் புயல் இருக்கிறது. ஆனால், இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் வரவில்லை. புயல் அந்தப் பகுதியில் இருந்து நகர்ந்த பின்னர் அதைப்பற்றி அறிவிப்பதில் என்ன பயனிருக்கும்.

நம்ம சொன்னாலும் திட்டுவாங்க அவங்களும் கடைசி நிமிஷம்வரை சொல்ல மாட்டாங்க” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

இதற்கிடையில், இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று மாலை ‘ஓகி’ புயல் உருவாக வாய்ப்பிருப்பதாக அறிவித்திருக்கிறது.

ஏற்கெனவே, 70 கி.மீ., வேகத்தில் காற்று வீசி, பலத்த மழை பெய்யும் நிலையில், அதிகாரபூர்வமாக புயல் உருவானதை அறிவிப்பதை கடைசி நிமிடம் வரை ஏன் தாமதப்படுத்த வேண்டும்” என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

அதிமுக ஆட்சி மன்றக் குழு மோதல்: என்ன நடந்தது?

கைவிடப்படுகிறதா சேகர் ரெட்டி வழக்கு?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*