யானையுடன் செல்ஃபி: மிதித்து கொன்ற பரிதாபம் (#Video)

மேற்கு வங்கத்தில் காட்டு யானையுடன் செல்ஃபி எடுக்க முயன்ற ஒருவரை, யானை தூக்கிப்போட்டு பந்தாடியதில் அந்த நபர் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் லத்தாகுரி வனம் காட்டுயானைகள் அதிகம் வாழும் பகுதியாகும். அந்த வழியாகத் தேசிய நெடுஞ்சாலை சென்று வருகிறது. சம்பவத்தன்று ஜெய்பாகுரி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே காட்டு யானை ஒன்று நின்றுகொண்டிருந்தது. அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் யானை கடந்து போகட்டும் என வாகனங்களை நிறுத்தியுள்ளனர். அப்போது சாதிக் என்ற இளைஞர் வாகனத்திலிருந்து கீழே இறங்கி தொலைவில் நின்றபடி யானையுடன் செல்ஃபி எடுக்க முயன்றார். இதைப் பார்த்து மிரண்டுபோன யானை வேகவேகமாகச் சாதிக்கின் அருகே ஓடிச்சென்று அவரைத் தூக்கிப்போட்டு பந்தாடியது. காலால் மிதித்ததில் சாதிக் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். செல்ஃபி எடுப்பதில் தீவிரமாக இருந்ததால், யானை பின்னால் வேகமாக ஓடி வருவதை சாதிக் கவனிக்கவில்லை. செல்ஃபி ஆசை அவருடைய உயிரைப் பறித்துள்ளது. இந்தக் காட்சிகளை ஒருவர் தன் செல்போனில் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ இப்போது வைரலாகப் பரவி வருகிறது. சாதிக் வங்கி ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார்.

எதிர்ப்பு : ஆர்.கே.நகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் மதுசூதனன்..!

ஆர்.கே.நகர் :இரண்டாம் இடத்திற்கு போட்டியிடும் அதிமுக?

ஆர்.கே.நகரில் பாலகங்காவை களமிரக்கும் எடப்பாடி பழனிசாமி:தர்மயுத்தம் Part -2

செவிலியர் போராட்டம் முடித்து வைக்கப்பட்ட கதை:அ.மார்க்ஸ்

மிரட்டி பணிய வைக்கப்பட்ட செவிலியர்கள்…!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*