குமரி: பல நூறு மீனவர்களைக் காணவில்லை..!

‘ஓகி’ தாண்டவம்: படங்கள்! வானிலை ஆய்வு மையம் ஏன் எச்சரிக்கவில்லை?

குமரி மாவட்டத்தை பதம் பார்க்கும் ஓகி புயல்..! video

‘ஓகி’ புயல் – “நாம சொன்னா திட்டுவாங்க:அவங்களும் சொல்ல மாட்டாங்க”: தமிழ்நாடு வெதர் மேன் ஆதங்கம்…!

நேற்று குமரி, நெல்லை, தூத்துக்குடி, திருநெல்வேலி போன்ற தென் தமிழக கடலோர மாவட்டங்களில் கடும் சூறாவளிக்காற்றும் மழையும் அடித்தது. குமரிக்கு தெற்கே சுமார் 70 கிலோ மீட்டர் தொலைவில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருமாறியது. வங்கதேசத்தால் ‘ஓகி’ என பெயரிடப்பட்ட இந்த புயலால் குமரி மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மரங்கள் ஆங்காங்கே முறிந்து விழுந்து பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது. இந்த புயல் குறித்து வானிலை ஆராய்ச்சி மையம் எந்த முன் எச்சரிகையையும் அறிக்கவில்லை.

இந்நிலையில் நேற்று முன் தினம் கடலுக்குச் சென்ற பல நூறு மீனவர்கள் கரை திரும்பவில்லை. காணாமல் போயுள்ளனர். கேரளாவில் நூற்றுக்கணக்கான மீனவர்களும் குமரி மாவட்டத்தில் சுமார் 30 மீனவர்களும் காணவில்லை. இதுகுறித்து அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*