தயாரிப்பாளர் புகாருக்கு சிம்புவின் பதில்?

சூர்யா அறிவுரையால் முன்னேற்றம்: கார்த்தி

டிஜிட்டல்வாசி: முதல்வர் – எதிர்கட்சி தலைவர் …. குட் காமினேசன்..

பாரத் மாதா கி ஜே: கமல்ஹாசன்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியான ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தால் நஷ்டம் ஏற்பட்டு அவதிப்படுவதாக அதன் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தெரிவித்திருந்தார். நேற்று இதுகுறித்து அவர் தயாரிப்பாளர் சங்கத்தில் அளித்த புகாரில், “படத்தை இரண்டு பாகமாக எடுக்கலாம், என்ன பிரச்சனை வந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன் என சிம்பு வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் அதில் நஷ்டம் ஏற்பட்டதால் விநியோகஸ்தர்கள் என்னிடம் பணம் கேட்கிறார்கள். சிம்பு எனக்கு உதவ மறுக்கிறார், இதனால் எனக்கு 20 கோடி நஷ்டம். இதற்கு தயாரிப்பாளர் சங்கம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் இந்த பிரச்சனை பற்றி சிம்பு தன் கருத்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், “படத்தில் நடிக்கும்போது தயாரிப்பாளர் புகார் தெரிவித்தால் பதில் அளிக்க வேண்டும். ஆனால் படம் முடிந்து ரிலீஸான பிறகு நான் யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய தேவையில்லை என்கிறார் சிம்பு. நான் என் பட தயாரிப்பாளரை பற்றி தவறாக எதுவும் பேச மாட்டேன். தயாரிப்பாளர் சங்கத்தில் நடவடிக்கை எடுத்தால் அதை எப்படி சமாளிக்க வேண்டும் என எனக்கு தெரியும்” என்று கூறியிருக்கிறார்.

அமலா பாலின் ‘லடாக் பயணம்’

அஜித் படத்தில் அனுஷ்கா இல்லை?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*