போர்க்குற்றம் நிரூபணம்:நீதிபதி முன் விஷம் குடித்து இறந்த ராணுவ தளபதி..!

A wartime commander of Bosnian Croat forces, Slobodan Praljak, is seen during a hearing at the U.N. war crimes tribunal in the Hague, Netherlands, November 29, 2017. ICTY via REUTERS TV

பாதியில் வெளியேறிய பாலகங்கா:மதுவை தோற்கடித்த திரளும் அதிமுக..!

‘ஓகி’ புயல் – “நாம சொன்னா திட்டுவாங்க:அவங்களும் சொல்ல மாட்டாங்க”: தமிழ்நாடு வெதர் மேன் ஆதங்கம்…!
உலகம் முழுக்க மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் ராணுவத்தினரை விசாரிக்க ஐநாவின் போர்க்குற்ற விசாரணை மையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலயில் போஸ்னிய நாட்டு தளபதி ஒருவரி போர்க்குற்றம் நிரூபணம் ஆனதால் தீர்ப்புச் சொன்ன நீதிபதி முன்பே தளபதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதை உலகம் முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் நடந்த மிக மோசமான இனப்படுகொலைகளுள் ஒன்று செரப்னிகா படுகொலையாகும். ஈழத்த்தில் நடந்த இனப்படுகொலையில் எண்ணிக்கை அதிகம் என்றால் செரப்னிகா படுகொலைகள் ஐய்ரோப்பிய நாடுகளை அதிர்ச்சியடைய செய்தது.
1992 – முதல் 1995 வரை போஸ்னியா முஸ்லீம்களுக்கும், செர்பியர்களுக்குமான மோதல் உருவானது. போஸ்னியாவை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த செர்பிய ராணுவம் 1992 முதல் 1995 வரை மூன்றாண்டுகள் சுமார் 8000 முஸ்லீம்களை மிகக் கோரமான இனப்படுகொலை செய்தனர். இது போஸ்னிய ராணுவ தளபதிகளின் மேற்பாரையிலும் தூண்டுதலிலும் நடந்தது.இதில் சுமார் 7 ராணுவ தளபதிகள் மீது இனப்படுகொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. தலைமறைவாக இருந்தவர்கள் பல ஆண்டுகளுக்குப் பின்னர் கைது செய்யப்பட்டு ஹேக்கில் இருக்கும் சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர். இதையடுத்து, போர்க்குற்றம் குறித்து விசாரிக்க ஐநா தீர்ப்பாயம் ஒன்றை அமைத்தது. இந்த போர் நடைபெற்ற சமயத்தில் போஸ்னிய ராணுவத்தின் தளபதியாக செயல்பட்ட ஸ்லோபோதன் ப்ரால்ஜக் உள்பட 6 பேர் போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக தீர்ப்பாயம் தீர்ப்பளித்ததோடு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
இந்த தீர்ப்புக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. விசாரணை முடிவில் சர்வதேச நீதிமன்றம் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் 20 ஆண்டு சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் கீழ் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்லோபோதன் ப்ரால்ஜக் “நான் நிரபராதி” என்று கூறியபடி நீதிபதி கண்ணெதிரில் குப்பியில் கொண்டு வந்திருந்த விஷத்தை விழுங்கினார்.நீதிமன்றத்தை ஒத்தி வைத்த நீதிபதி மருத்துவர்களை அழைத்து அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார்கள். ஆனால் ஸ்லோபோதன் ப்ரால்ஜக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் நீதித்துறையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பாதியில் வெளியேறிய பாலகங்கா:மதுவை தோற்கடித்த திரளும் அதிமுக..!

எதிர்ப்பு : ஆர்.கே.நகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் மதுசூதனன்..!

ஆர்.கே.நகர் :இரண்டாம் இடத்திற்கு போட்டியிடும் அதிமுக?

ஆர்.கே.நகரில் பாலகங்காவை களமிரக்கும் எடப்பாடி பழனிசாமி:தர்மயுத்தம் Part -2

செவிலியர் போராட்டம் முடித்து வைக்கப்பட்ட கதை:அ.மார்க்ஸ்

மிரட்டி பணிய வைக்கப்பட்ட செவிலியர்கள்…!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*