விமர்சனத்திற்கு உள்ளான இந்திரா பானர்ஜியின் செவிலியர் தீர்ப்பு…!

செவிலியர் போராட்டம் முடித்து வைக்கப்பட்ட கதை:அ.மார்க்ஸ்

மிரட்டி பணிய வைக்கப்பட்ட செவிலியர்கள்…!

இடைத்தேர்தலில் ஆதரவு:திமுகவோடு கூட்டணியில்லை:மார்க்சிஸ்ட் முடிவு..!

‘ஓகி’ புயல் – “நாம சொன்னா திட்டுவாங்க:அவங்களும் சொல்ல மாட்டாங்க”: தமிழ்நாடு வெதர் மேன் ஆதங்கம்…!

செவிலியர் போராட்டம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜியின் தீர்ப்பு சமூக வலைத்தளங்களிலும், அரசியல் தலைவர்கள் மத்தியிலும் கடும் விமர்சனங்களை உருவாக்கி இருக்கிறது. இந்நிலையில், இந்த தீர்ப்பு தொடர்பாக முன்னாள் நீதிபதி  ஹரி பரந்தாமன் தன் முகநூல் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில்,

“ தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணிநியமனம் செய்யப்பட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள் மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் பணிபுரிந்துவருகின்றனர். இரண்டு ஆண்டுகள் ஒப்பந்த காலம் முடிந்து பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது நடக்கவில்லை. மாதம்தோறும் ரூ.7,700 மட்டுமே வாங்கிவரும் செவிலியர்களுக்கு காலமுறை (time scale pay) ஊதியம் வழங்கவேண்டும் என்று அரசுக்கு வலியுறுத்தி, பல முறை போராட்டங்களை நடத்தினர். அதற்கு எந்தப் பலனும் கிடைக்காமல் போகவே, கடந்த திங்கள் முதல் சென்னை, தேனாம்பேட்டையில் அமைந்துள்ள மருத்துவத் துறை இயக்குநரக வளாகத்தில் மூன்று நாள்களுக்கும் முன்னர் போராட்டத்தில் இறங்கினர். ஆனாலும் அவர்களின் கோரிக்கைகளை ஏற்க அரசுத் தரப்பில் மறுத்துவிட்டனர். மூன்றாவது நாளாகப் போராட்டம் தொடர்ந்தது.

நேற்று திடீரென உயர் நீதிமன்றத்தில் கணேஷ் என்பவர் ஒரு மனுத்தாக்கல்செய்ய, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தரம் ஆகியோர் அடங்கிய அமர்வு அதை விசாரித்தது. போராட்டத்தை உடனே முடித்துக்கொள்ளவேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். அத்துடன், போதிய ஊதியம் வழங்கவில்லை என்றால் வேலையிலிருந்து விலகிக்கொள்ள வேண்டியதுதானே என்றும் தலைமை நீதிபதி கூறினார்.

நீதிமன்றம் இப்படிக் கருத்துக்கூறுவது சரிதானா எனப் பரவலாகக் கேள்வி எழுந்துள்ளது. முன்னாள் நீதிபதிகளும் சட்டவியலாளர்களும் தங்கள் கருத்துகளை வெளியிட்டுவருகின்றனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி அரிபரந்தாமனிடம் இது பற்றிக் கேட்டதற்கு, “ சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவத் துறை இயக்குநரக வளாகத்தில், உரிய காலமுறை ஊதியம் கேட்டு செவிலியர்கள் போராடினர். இரவும் பகலுமாகப் போராடிய 4 ஆயிரம் பேரில், மிகப் பெரும்பாலும் பெண்கள்; குழந்தைகளுடனும் போராட்டத்தில் கலந்துகொண்டனர். 28-ம் தேதியன்று பேச்சுவார்த்தை எனக்கூறி சங்கத் தலைவர்களை 4 மணி நேரம் அடைத்துவைத்தனர்; காவல்துறையை வைத்து மிரட்டினர். போராட்டம் வாபஸ் ஆனதாக வானொலி, தொலைக்காட்சிக்கு செய்தி அளித்தார்கள். இந்த மிரட்டல் செய்தியை அன்று இரவு ஓர் அரசு ஊழியர் சங்கம் அனைவருக்கும் தெரியப்படுத்தியது. அது போராட்டத்தைத் தீவிரப்படுத்தியது. இந்நிலையில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாகக் கூறி, போராடிய செவிலியர்கள் அந்த வளாகத்திலிருந்து வெளியேறுமாறு வற்புறுத்தப்பட்டனர். ஆனால், வெளியேற மறுத்து செவிலியர்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். இதனால் அன்று இரவு அங்குள்ள அனைத்துக் கழிப்பறைகளையும் மூடினார்கள். போராட்டத்திலிருந்த செவிலியர்கள் துன்பத்துக்கு ஆளானார்கள். இந்தத் தகவல் பரவியதும் பல பெண்கள் அமைப்பினர், அரசு ஊழியர் சங்கங்களைச் சேர்ந்தவர்களும் போராட்டத்துக்குப் பெருமளவு ஆதரவு தெரிவித்தனர். எனவே போராட்டம், முன்னைவிடத் தீவிரமானது. போலீஸைப் பயன்படுத்தி பலவந்தமாகப் போராட்டத்தைக் கலைப்பது என்பது அரசால் முடியவில்லை, காரணம், ஆர்கே நகர் இடைத்தேர்தல்! செவிலியர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு ஏற்றிருக்கக்கூடிய நிலைமை ஏற்பட்டது. போராட்டக் களத்தில் அரசு தோல்வியடைந்தது. இந்நிலையில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவால் போராட்டம் முடிவுக்கு வந்தது” என்று கூறினார்.

மேலும்,” செவிலியர்கள் ரூபாய் 7,700 மாதச்சம்பளம் குறைவு என்று கருதினால், வேலையை ராஜினாமா செய்துவிட்டுச் செல்லுங்கள் என்று உரிய சம்பளம் கேட்டு அமைதியான முறையில் போராடும் செவிலியர்களுக்கு, தலைமை நீதிபதி கூறியது அதிகப்படியானது, நியாயமற்றது மற்றும் தவறானது. இப்படிக் கூறியது மனவேதனையை அளிக்கிறது.

செவிலியர்கள் sanctioned post-களில் நியமனம் செய்யப்பட்டவர்கள். இவர்களுடன் நியமிக்கப்பட்ட மருத்துவர்களுக்கும் மருந்தாளுனர்களுக்கும் ஆய்வுக்கூட உதவியாளர்களுக்கும் உரிய கால ஏற்ற முறை (scale of pay) ஊதியம் வழங்கும் அரசு, செவிலியர்களுக்கு மட்டும் அத்துக்கூலியாக (consolidated pay) ரூபாய் 7,700 கொடுக்கிறது.

நீதிபதிகள் வீட்டில் பணிபுரியும் தற்காலிக தினக்கூலி அலுவலக ஊழியர்களுக்குகூட மாதம் ரூபாய் பத்தாயிரம் அளிக்கப்படுகிறது. அவர்கள் திறனற்ற (unskilled) பணியாளர்கள். அவர்களுக்குக் கல்வித் தகுதி தேவையில்லை. நான் நீதிபதியாகப் பணிபுரிந்தபோது, sanctioned post-ல் பணிசெய்யும் உயர்நீதிமன்ற அலுவலக ஊழியர்களுக்கும் கல்வித் தகுதி தேவை இல்லை. இவர்களுக்கு  01-01-2016-ல் திருத்தி அளிக்கப்படும் ஊதியத்தில் புதியதாகச் சேருபவருக்கே சுமார் ரூபாய் 20,000  மாதச் சம்பளம் கிடைக்கும்.கட்டட வேலை செய்யும், கல்சுமக்கும் சித்தாளுக்குகூட தினக்கூலி ரூபாய் 600 முதல் 700 வரை. செவிலியர்கள் +2 முடித்த பின் 4 ஆண்டுகள் செவிலியர் தகுதிபெற படிக்கின்றனர். அவர்களின் பணி, திறன் பணி (skilled). எப்படி இருப்பினும் , சம்பளம் குறைவு என்று கருதினால் வேலையை ராஜினாமா செய்துவிட்டு செல் என்பது நியாயமற்றது” என்று ஓய்வுபெற்ற நீதிபதி அரி பரந்தாமன் தன்னுடைய முகநூல் பக்கத்தில் கருத்துக்கூறியுள்ளார்.

ஆர்.கே.நகர் :இரண்டாம் இடத்திற்கு போட்டியிடும் அதிமுக?

ஆர்.கே.நகரில் பாலகங்காவை களமிரக்கும் எடப்பாடி பழனிசாமி:தர்மயுத்தம் Part -2

 

அதிமுக ஆட்சி மன்றக் குழு மோதல்: என்ன நடந்தது?

கைவிடப்படுகிறதா சேகர் ரெட்டி வழக்கு?

பாதியில் வெளியேறிய பாலகங்கா:மதுவை தோற்கடித்த திரளும் அதிமுக..!

எதிர்ப்பு : ஆர்.கே.நகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் மதுசூதனன்..!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*