ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: விஷால் போட்டியிடுவது உறுதி

சில தினங்களுக்கு முன்பு நடிகர் விஷால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் களமிறங்குகிறார் என தகவல்கள் வெளியானது. அதற்கு விஷால் மறுப்பு தெரிவித்து, அது வதந்தி யாரும் நம்பவேண்டாம் என பேட்டியளித்தார். இந்நிலையில் வரும் திங்கள் (டிசம்பர் 4) அன்று ஆர்.கே.நகரில் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாக அறிவித்திருக்கிறார் விஷால்.

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல், நடிகர் சங்கத் தேர்தல் என வரிசையாக எல்லாத் தேர்தல்களிலும் நிற்கும் விஷால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலையும் விட்டு வைக்கவில்லை. ரஜினி, கமல் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் அரசியலில் இறங்கப்போவதாக பேசிக் கொண்டிருக்கும் நிலையில், நேரடியாக களத்தில் இறங்கிவிட்டார் விஷால்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*