தலித் மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: தேசிய குற்ற ஆவணப் பணியகம்

மீசை வைத்த தலித் இளைஞர்கள் மீது குஜராத்தில் தாக்குதல்!

புதுச்சேரி தலித் இளைஞர் போலீஸ் சித்தரவதையால் தற்கொலை – நீதி விசாரணை கோரிய மக்கள் உரிமைக் கூட்டமைப்பு

தலித்துகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்!

2016-ஆம் ஆண்டு நிகழ்ந்த குற்றங்கள் பற்றிய அறிக்கையை வெளியிட்டுள்ளது தேசிய குற்ற ஆவணப் பணியகம். அதில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக நிகழும்
குற்றங்கள் கடந்த 2015-ஆம் ஆண்டினை காட்டிலும் அதிகரித்திருக்கிறது.

அந்த அறிக்கையின்படி எஸ்சி மற்றும் எஸ்டி மக்களுக்கு எதிரான குற்றங்கள் 5.5% மற்றும் 4.7% முறையே அதிகரித்துள்ளது. இந்த குற்றங்களின் சதவிகிதம், எஸ்சி/எஸ்டி சட்டம் 1989-இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட குற்றங்களின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளன.

 

 

 

எஸ்சி பிரிவினர் மீது நிகழ்த்தப்பட்ட குற்றங்கள் 5.5%, 2015-ஆம் ஆண்டு 38,670 வழக்குகள் பதிவாகியிருந்தது. 2016-ஆம் ஆண்டில் 40,801 வழக்குகள் என அதிகரித்துள்ளது. இதில் மாநில வாரியாக பார்த்தால், உத்தர பிரதேசம் முதல் இடம் வகிக்கிறது.

உத்தர பிரதேசம் – 10,426 வழக்குகள்

பீகார் – 5,701 வழக்குகள்

ராஜஸ்தான் – 5,134 வழக்குகள்

இதில் பாலியல் வன்புணர்வு உட்பட பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள் மிக அதிகம் என அறிக்கை தெரிவிக்கிறது.
அதேபோல் எஸ்டி பிரிவினர் மீது நிகழ்த்தப்பட்ட குற்றங்கள் 4.7%, 2015-ஆம் ஆண்டு 6,276 வழக்குகள் பதிவாகியிருந்தது. 2016-ஆம் ஆண்டில் 6,568 வழக்குகள் என
அதிகரித்துள்ளது. இதில் மத்திய பிரதேச மாநிலம் முதல் இடம் வகிக்கிறது.

மத்திய பிரதேசம் – 1,823 வழக்குகள்

ராஜஸ்தான் – 1,195 வழக்குகள்

ஒடிஷா – 681 வழக்குகள்

பாலியல் வன்புணர்வு வழக்குகள் மட்டும் 974 என்பது குறிப்பிடத்தக்கது.

 

துர்நாற்றம் அற்ற தலித்துகள் மட்டுமே அனுமதி: யோகி ஆதித்யநாத் சந்திப்பு?

சாதி ஒழிப்புதான் என் சங்கர் சிந்திய ரத்தத்திற்கான நீதி :கவுசல்யா சங்கர்..!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*