ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: அரசியல்வாதிகளின் பார்வையில் விஷால்

ஆர்.கே.நகர் வேட்பாளராக தமிழிசை சௌந்தராஜன்?

தகுதி நீக்கம் :செம்மை மனு நிராகரிப்பு…!

விமர்சனத்திற்கு உள்ளான இந்திரா பானர்ஜியின் செவிலியர் தீர்ப்பு…!
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் களமிறங்குவது தொடர்பாக, மூத்த அரசியல்வாதிகளின் கருத்து.

மீன் வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார்:

நடிகர் விஷால் போட்டியிடுவதால் அ.தி.மு.க. வேட்பாளரின் வெற்றிக்கு எந்த பாதிப்பும் இல்லை. மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஆர்.கே.நகர் தொகுதிக்கு நிறைய செய்திருக்கிறார். அவர் கொண்டுவந்த திட்டங்கள் தொகுதி மக்களை நன்றாக சென்றடைந்துள்ளது. ஆர்.கே.நகர் என்பது அ.தி.மு.க.வின் கோட்டை. இங்கே சினிமா பிம்பம் செல்லாது, தொகுதி மக்கள் விவரம் தெரிந்தவர்கள், புரிந்தவர்கள், அரசியல் விழிப்புணர்வு மிக்கவர்கள்.

தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ்:

யார் போட்டியிட்டாலும் தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் இல்லை. தி.மு.க.வுக்கு வெற்றி நிச்சயம்.

பா.ஜ.க- இல.கணேசன்:

எங்களை பொறுத்தமட்டில் பா.ஜ.க.வுக்கு இருக்கின்ற ஆதரவு எப்போதும் நிலைத்திருக்கும். ஒருவேளை, விஷால் முயற்சி மாநில அரசுக்கு எதிரான பிரச்சாரமாக இருக்குமானால், பாதிக்கப்படப்போவது தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தான். அவர்கள் தான் கவலைப்படவேண்டும். எல்லோரும் களம் இறங்குகிறார்கள். இவரும் களம் இறங்கியிருக்கிறார்.

டி.டி.வி.தினகரன்:

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகிற அம்மாவின் (ஜெயலலிதா) வேட்பாளரான எனது வெற்றி, தொகுதி மக்களால் ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட ஒன்று. இதில், நண்பர் விஷால் மற்றும் எந்தவொரு வேட்பாளராலும் எனது வெற்றியை தடுக்க முடியாது.

விஷால் நாளை வேட்புமனு தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரது இந்த திடீர் முடிவு எந்த அரசியல் கட்சிகளுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை.

பாதியில் வெளியேறிய பாலகங்கா:மதுவை தோற்கடித்த திரளும் அதிமுக..!

‘ஓகி’ புயல் – “நாம சொன்னா திட்டுவாங்க:அவங்களும் சொல்ல மாட்டாங்க”: தமிழ்நாடு வெதர் மேன் ஆதங்கம்…!

போர்க்குற்றம் நிரூபணம்:நீதிபதி முன் விஷம் குடித்து இறந்த ராணுவ தளபதி..!

எதிர்ப்பு : ஆர்.கே.நகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் மதுசூதனன்..!

ஆர்.கே.நகர் :இரண்டாம் இடத்திற்கு போட்டியிடும் அதிமுக?

ஆர்.கே.நகரில் பாலகங்காவை களமிரக்கும் எடப்பாடி பழனிசாமி:தர்மயுத்தம் Part -2

செவிலியர் போராட்டம் முடித்து வைக்கப்பட்ட கதை:அ.மார்க்ஸ்

மிரட்டி பணிய வைக்கப்பட்ட செவிலியர்கள்…!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*