மதிமுக ஆதரவு மகிழ்ச்சி :ஸ்டாலின்

சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், ‘தமிழ்நாட்டில் தற்போதுள்ள ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணையும் நேரத்தில் ம.தி.மு.கவும் அவர்களுடைய ஆதரவை அளித்தது வரவேற்கத்தக்க ஒன்று. ஒரு மாவட்டமே பாதிக்கப்படும் அளவுக்கு புயல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையிலும் முதலமைச்சர் பழனிசாமி நீதிமன்ற உத்தரவுகளை மீறி ஆடம்பர வளைவுகள், கட் அவுட்கள், பேனர்கள் வைத்து மக்களுடைய வரிப்பணத்தை விணாக்கி அரசுவிழா எடுத்துக்கொண்டிருக்கிறார்.

அந்த விழாக்களை எல்லாம் ரத்து செய்துவிட்டு புயலால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு உடனடியாக செல்லவேண்டும். நிவாரணப் பணிகளில் ஈடுபடவேண்டும். எதிர்கட்சித் தலைவர் என்ற முறையில் இன்று நான் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு செல்கிறேன். அங்குள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் பாதிக்கப்பட்ட மீனவர்களையும், மக்களையும் சந்தித்து ஆறுதல் கூறவுள்ளேன். வாக்குரிமை பெற்றுள்ள யாராக இருந்தாலும் தேர்தலில் நிற்பதற்கு உரிமை உண்டு’ என்று தெரிவித்தார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*