மருத்துவ பரிசோதனைக்கு 35% கமிஷன்?: வருமான வரித்துறை தகவல்

பாலிவுட்டில் மியா: கலாச்சார காவலர்களின் எதிர்ப்பு இருக்குமா?

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: அரசியல்வாதிகளின் பார்வையில் விஷால்

தலித் மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: தேசிய குற்ற ஆவணப் பணியகம்

பெங்களூரில் உள்ள மருத்துவ பரிசோதனை நிலையங்களிலும், முக்கியமான மருத்துவர் இல்லத்திலும் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில் சில அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது. பொதுவாகவே சின்ன பிரச்சனை என மருத்துவர்களிடம் சென்றால் உடனடியாக பல பரிசோதனைகள் செய்ய சொல்கிறார்கள் என்ற எண்ணம் நிலவி வருகிறது. இந்நிலையில் அதை உறுதிப்படுத்தும் விதமாக, பரிசோதனை நிலையங்களுக்கு பரிந்துரை செய்யும் மருத்துவருக்கு 35% கமிஷன் வழங்கப்படுகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களூரு மற்றும் கோவா பகுதியில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில் 1.3 கோடி பணமும், தங்க நகைகளும் சிக்கியுள்ளது. மருத்துவர்கள் குறிப்பிட்ட பரிசோதனை நிலையங்களை நோயாளிகளுக்கு பரிந்துரை  செய்ய 35% கமிஷன் வழங்கப்படுகிறது. பரிசோதனை நிலையத்தின் வசதியை பொறுத்து இந்த கமிஷன் அளவு மாறுபடுகிறது. எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்ய 35%, சீடீ ஸ்கேனுக்கு 20% என கமிஷன் வாங்குகின்றனர். இந்த பணத்தை ஏஜெண்டுகள் மூலமாகவும் பெற்றுக் கொள்கிறார்கள். இந்தியாவில் மருத்துவத்துறை நாளுக்கு நாள் மோசமான நிலையை எட்டி வருவது வருந்தத்தக்கது. இதுபோன்ற மருத்துவர்களால் சேவை மனப்பான்மையுடன் செயல்படுபவர்களுக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது.

பாதியில் வெளியேறிய பாலகங்கா:மதுவை தோற்கடித்த திரளும் அதிமுக..!

எதிர்ப்பு : ஆர்.கே.நகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் மதுசூதனன்..!

ஆர்.கே.நகர் :இரண்டாம் இடத்திற்கு போட்டியிடும் அதிமுக?

ஆர்.கே.நகரில் பாலகங்காவை களமிரக்கும் எடப்பாடி பழனிசாமி:தர்மயுத்தம் Part -2

செவிலியர் போராட்டம் முடித்து வைக்கப்பட்ட கதை:அ.மார்க்ஸ்

மிரட்டி பணிய வைக்கப்பட்ட செவிலியர்கள்…!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*