அரவிந்த் கெஜ்ரிவால் – அப்துல் கலாம்: விஷால் அரசியல் உத்வேகம்?

நான் அரசியல்வாதி அல்ல :விஷால்

மருத்துவ பரிசோதனைக்கு 35% கமிஷன்?: வருமான வரித்துறை தகவல்

பாலிவுட்டில் மியா: கலாச்சார காவலர்களின் எதிர்ப்பு இருக்குமா?

ரஜினி, கமல் எல்லாம் அரசியலுக்கு வருகிறேன் என அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருக்க, யாரும் எதிர்பாராத விதமாக களத்தில் இறங்கிவிட்டார் விஷால். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக நிற்க முடிவு செய்திருக்கும் அவர் இன்று 12.30 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். அதற்கு முன்பு தமிழக அரசியல் தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகிறார். எம்.ஜி.ஆர், காமராஜர் என ஒவ்வொருவர் வரிசையாக மரியாதை செலுத்தி வரும் விஷால் தனது அரசியல் வருகைக்கு உத்வேகமாக அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அப்துல் கலாமை கூறியுள்ளார்.

இதுகுறித்து விஷால், “நான் ஆர்.கே.நகரின் மக்கள் குரலாக இருக்க விரும்புகிறேன். நான் மக்களின் பிரதிநிதி, முழுநேர அரசியல்வாதி அல்ல. அதேபோல் இது நீண்ட
காலமாக திட்டமிடப்பட்ட செயலும் இல்லை. என் தைரியத்தை வெளிப்படுத்த நினைத்தேன், நேரடியாக தேர்தலில் போட்டியிட முடிவு செய்தேன். இங்குள்ள
பிரச்சனைகளை யாரும் கண்டுகொள்வதில்லை, முறையான கழிப்பிட வசதி இல்லை, அரசு மருத்துவமனைகளில் சரியாக சிகிச்சை அளிப்பதில்லை, மக்கள் சரியாக
ஓய்வூதியம் பெறவில்லை. அதேபோல் ரேசன் கடைகளிலும் பிரச்சனை, இது ஆர்.கே.நகர் மட்டுமல்லாது பல தொகுதிகளிலும் நிலவி வரும் பிரச்சனைகள். இதை
சுட்டிக்காட்ட இடைத்தேர்தல் முடிவு வரும்வரை காத்திருக்க தேவையில்லை” என்று தெரிவித்தார்.

மேலும் அவர், “எனக்கு அரசியலில் உத்வேகமாக இருப்பது அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அப்துல் கலாம் ஆவார்கள். அரவிந்த் கெஜ்ரிவாலை நான் சந்தித்தது இல்லை, அவர் மக்களின் தலைவர். நானும் அரசியல்வாதியாய் இருக்க விரும்பவில்லை, சாதாரண மக்களில் ஒருவனாகவே இருக்க விரும்புகிறேன்” என பேசினார்.

பாதியில் வெளியேறிய பாலகங்கா:மதுவை தோற்கடித்த திரளும் அதிமுக..!

எதிர்ப்பு : ஆர்.கே.நகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் மதுசூதனன்..!

ஆர்.கே.நகர் :இரண்டாம் இடத்திற்கு போட்டியிடும் அதிமுக?

ஆர்.கே.நகரில் பாலகங்காவை களமிரக்கும் எடப்பாடி பழனிசாமி:தர்மயுத்தம் Part -2

செவிலியர் போராட்டம் முடித்து வைக்கப்பட்ட கதை:அ.மார்க்ஸ்

மிரட்டி பணிய வைக்கப்பட்ட செவிலியர்கள்…!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*