குஷ்பு மீது மதச்சாயம் பூசும் பாஜக?

நான் அரசியல்வாதி அல்ல :விஷால்

மருத்துவ பரிசோதனைக்கு 35% கமிஷன்?: வருமான வரித்துறை தகவல்

பாலிவுட்டில் மியா: கலாச்சார காவலர்களின் எதிர்ப்பு இருக்குமா?

காங்கிரஸ் கட்சியின் தேசிய பேச்சாளரான குஷ்பு, மோடி மற்றும் பாஜக குறித்து சமூக வலைதளங்களில் வெளியாகும் மீம்களையும், பாஜக அரசில் நிகழும் குற்றங்களை சுட்டிக்காட்டும் செய்திகளையும் பகிர்ந்ததற்கு அவரது உண்மையான பெயர் நகத் கான் என்பதை குறிப்பிட்டு டிவிட் செய்து வருகின்றனர் பாஜக ஆதரவாளர்கள்.

அதாவது காங்கிரஸ் பேச்சாளரும் நடிகையுமான நகத் கான் (குஷ்பு) பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார் என டிவிட் செய்துள்ளனர். இதற்கு குஷ்பு பதிலடி கொடுத்திருக்கிறார்.

இதுகுறித்து குஷ்பு தனது டிவிட்டர் பக்கத்தில், “ட்ரோல் செய்யும் சிலர் என் பெயர் நகத் கான் (#Nakhatkhan) என்ற அரிய விஷயத்தை கண்டுபிடித்திருக்கிறார்கள். முட்டாள்களே என் பெற்றோர்கள் வைத்த பெயர் அதுதான்… ஆமாம் என் பெயர் கான், அதற்கு என்ன? .. ரொம்ப தாமதமா 47 வருஷம் கழிச்சு கண்டுபிடிச்சிருக்கிங்க… முழிச்சுக்கங்க” என பதிவிட்டுள்ளார்.

பாஜக எதிர்ப்பாளர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது மத ரீதியான விமர்சனத்தையே முன் வைக்கின்றனர். ‘மெர்சல்’ படத்தில் பாஜக அரசை விமர்சித்த விஜய், ஜோசப் விஜய் ஆனது போல, குஷ்புவை நகத் கான் ஆக மாற்றியுள்ளனர்.

அரவிந்த் கெஜ்ரிவால் – அப்துல் கலாம்: விஷால் அரசியல் உத்வேகம்?

பாதியில் வெளியேறிய பாலகங்கா:மதுவை தோற்கடித்த திரளும் அதிமுக..!

எதிர்ப்பு : ஆர்.கே.நகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் மதுசூதனன்..!

ஆர்.கே.நகர் :இரண்டாம் இடத்திற்கு போட்டியிடும் அதிமுக?

ஆர்.கே.நகரில் பாலகங்காவை களமிரக்கும் எடப்பாடி பழனிசாமி:தர்மயுத்தம் Part -2

செவிலியர் போராட்டம் முடித்து வைக்கப்பட்ட கதை:அ.மார்க்ஸ்

மிரட்டி பணிய வைக்கப்பட்ட செவிலியர்கள்…!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*