நடராஜன் சிறைக்குச் செல்வதில் இருந்து விலக்களித்தது உச்சநீதிமன்றம்..!

தூங்கிய வழக்கு எழுந்து நடராஜனை சிறைக்கு அனுப்பியது எப்படி?

பரோல் கொடுத்தால் தப்பிவிடுவார் நளினி :தமிழக அரசு…!
வெளிநாட்டு காரை முறைகேடாக இறக்குமதி செய்த வழக்கில் சசிகலாவின் கணவரும் தமிழரசி இதழின் ஆசிரியருமான நடராஜனுக்கு சிறப்பு நீதிமன்றம் அளித்த 2 வருட சிறை தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்த நிலையில், சிறை செல்வதில் இருந்து நடராஜனுக்கு உச்சநீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது. அதனால் நடராஜன் சிறைக்கு செல்ல வேண்டியதில்லை.
1994-ஆம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து லெக்ஸஸ் என்ற காரை இறக்குமதி செய்த நடராஜன் அந்த புதிய காரை பழைய கார் என்று கூறி வரி ஏய்ப்பு செய்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் வங்கி அதிகாரி சுஜாரிதா, ஜெயா டிவி பாஸ்கரன், யோகேஷ் பாலகிருஷ்ணன் என நால்வர் குற்றாவாளிகளாக சேர்க்கப்பட்ட நிலையில், இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் சசிகலா கணவருக்கு இரு வருட சிறை தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்புக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடராஜன் மேல் முறையீடு செய்திருந்தார் அந்த வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பு நீதிமன்றம் நடராஜனுக்கு வழங்கிய சிறை தண்டனையை உறுதி செய்ததது, உடனடியாக அவர் சிறையில் அடைக்கப்படும் சூழல் எழுந்த நிலையில், சரணடைய கால அவகாசம் கோரினார். ஆனால் நீதிமன்றம் அதற்கு அவகாசம் கொடுக்க மறுத்து விட்டது.அதனால் அவர் சிறையில் அடைக்கப்படுகிறார்.
இந்நிலையில், சிறுநீரகம், கல்லீரல் செயலிழப்பால் தான் சிகிச்சை பெற்றுவருவதால் சிறை செல்வதில் இருந்து தனக்கு விலக்களிக்க வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்திருந்தர். அதே போல இந்த வழக்கில் தண்டனை பெற்ற பாஸ்கரனும் தன் அபராத தொகையை முதலிலேயே கட்டி விட்டதால் தனக்கும் விலக்களிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.இந்த கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம் இருவருக்கும் சிறை செல்வதில் இருந்து விலக்கு அளித்துள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*