விளம்பரங்களில் நடிக்க மாட்டேன்: சிவகார்த்திகேயேன்

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘வேலைக்காரன்’. இதில் ஃபகத் பாசில், சினேகா மற்றும் பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இதன் இசை வெளியீடு விழா நேற்று நடைபெற்றது. இதில் பேசிய சிவகார்த்திகேயேன் இனி விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், “நான் இதற்கு முன்பு பல விளம்பரங்களில் நடித்திருக்கலாம். ஆனால் இனி நடிப்பதாக இல்லை, எந்த நிறுவனத்தையும் ஆதரிக்க மாட்டேன். இந்த படத்தில் இடம்பெறும் கொடூரமான காட்சிதான் அதற்கு காரணம், அதில் உண்மையான மருத்துவர் ஒருவர் நடித்துள்ளார். அதற்கு மேல் கூற விரும்பவில்லை, இந்த திரைப்படம் தந்த தாக்கம் என் சொந்த வாழ்க்கையில் மாற்றத்தை தந்திருக்கிறது” என பேசியுள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*