தமிழ்நாடே வேண்டாம்:குமரி மீனவர்களின் குமுறல்-video!

29 -ஆம் தேதி நள்ளிரவு குமரி மாவட்டத்தை ஒகி புயல் தாக்கியது. ஓகியின் தாணடவம் குமரி மாவட்ட விவசாயத்தை நசுக்கி நசமாக்கி விட்டது. ரப்பர், மரவள்ளிக்கிழங்கு, தேக்கு, வயல் என பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்திருக்கிறார்கள் விவசாயிகள். இன்னொரு பக்கம் அரபிக்கடலோரத்தை அண்டி வாழ்ந்த மீனவர்களின் வாழ்வை துடைத்து அழித்து விட்டுச் சென்றிருக்கிறது ஒகி புயல்.
ஒகி புயல் பற்றிய உரிய முன்னறிவிப்புகள் இல்லாததால் கடலுக்குச் சென்று புயலில் சிக்கிய குமரி மீனவர்களை கேரள அரசு காப்பாற்றியிருக்கிறது. இன்னும் பல்லாயிரம் மீனவர்கள் கரை திரும்பாத நிலையில், இந்தியா முழுக்க பல நூறு மீனவர்கள் கரை ஒதுங்கியும் வருகிறார்கள்.
இன்னொரு பக்கம் இறந்தவர்களின் சடலங்கள் அடையாளம் காண முடியாத அளவு சிதைந்துள்ளது. இதுவரை 25 பேர் கடலில் மூழ்கியுள்ளதாக மீனவர்கள் கூறும் நிலையில் கடலில் சடலங்கள் மிதக்கும் காணொளிகள் இந்த பேரிடரின் அவலத்தை நமக்கு உணர்த்துகிறது.
கேட்க நாதியில்லை. அரசும் கண்டு கொள்ள நிலையில், இது புயலுக்கு முகம் கொடுத்த மீனவ மக்களின் குரல்..!

ஒரே நாளில் 110 பேர் வேட்புமனு தாக்கல்..!

மீனவ மக்களிடம் ஸ்டாலின்..!

நான் அரசியல்வாதி அல்ல :விஷால்

மருத்துவ பரிசோதனைக்கு 35% கமிஷன்?: வருமான வரித்துறை தகவல்

பாலிவுட்டில் மியா: கலாச்சார காவலர்களின் எதிர்ப்பு இருக்குமா?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*